மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஏற்க அவுஸ்ரேலியா ஒப்புதல்!

அமெரிக்காவுடன் ஏற்பட்ட உடன்பாட்டினை அடுத்து, எல்-சால்வடார் (El salvador) உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஏற்றுக் கொள்ள அவுஸ்ரேலியா ஒப்புக் கொண்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஓபாமா ஆட்சிக் காலத்தில் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஆயிரத்து 200 அகதிகளை ஏற்றுக் கொள்ள அவுஸ்ரேலியா ஒப்புக் கொண்டிருந்தது.

இவர்களுக்கு பப்புவா நியூகினியா, நவ்ரு தீவுகளில் வாழ்விடங்களை அமைக்கவும் ஒப்புதல் அளித்திருந்தது. இவர்களைத் தொடர்ந்து தற்போது கோஸ்டாரிகா, எல் சால்வடார் நாடுகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றுக் கொள்ள அவுஸ்ரேலியா ஒப்புக் கொண்டுள்ளது.

முன்னதாக மத்திய ஆசிய நாடுகளான லிபியா, சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஏற்றுக் கொள்ளும் ஒப்பந்தத்தில் இருந்து ஆஸ்திரேலியா நேற்று வெளியேறியது. இந்நிலையில் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு ஒப்புதல் அளித்திருக்கும் அவுஸ்ரேலியாவின் செய்கை உலக அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.