அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்கா வருகை தரவுள்ளார்!

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் இந்த வாரம் சிறிலங்கா வருகை தரவுள்ளார். சிறிலங்கா வரும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் சிலரையும் சந்திக்கவுள்ளார்.

இரு தரப்பு பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் அவர் பேச்சுகளில் ஈடுபடவுள்ளார். டெங்குக் காய்ச்சலைத் தடுக்க அவுஸ்திரேலியா வழங்கும் உதவி குறித்தும் ஜனாதிபதியுடன் இணைந்து அவர் அறிவிக்கவுள்ளார்.

மேலும், நல்லிணக்கச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்தும் அவர் பேச்சுகளை நடத்துவார் எனக் கூறப்பட்டது.