அவுஸ்ரேலியாவின் முதலாவது இராணுவ இணையப் பிரிவு உருவாக்கம்!

அவுஸ்ரேலியாவின் முதலாவது இராணுவ இணையப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இணைய ஊடுருவல் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகள் குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்கும் பொருட்டே குறித்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) மெல்பேர்னில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் உரையாற்றிய போது, “புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த இராணுவ இணையப் பிரிவால் ஐ.எஸ் இற்கு எதிராக இலக்கு வைக்க முடியும். அத்துடன் ஆயுதப் படைகளை இணையத் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முடியும்” என தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்தின் மூலம் கடல் கடந்து வாழும் குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.