போன்களில் பொருந்தக்கூடிய புதிய வகை சிப்செட்!

அப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் பொருந்தக்கூடிய புதிய வகை சிப்செட்களை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்பிள் ஆலைகளில் நியூரல் என்ஜின் என அழைக்கப்படும் புதிய சிப்செட் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஃபேஷியல் ரெகக்னீஷன் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் புதிய சிப்செட்கள் பொருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய சாதனங்கள் செயற்கை நுண்ணறிவு பணிகளை இயக்கக்கூடிய வகையில் இருவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒன்று முக்கிய அல்லது மைக்ரோபிராசஸர் மற்றொன்று கிராபிக்ஸ் சிப்செட் அல்லது ஜிபியு.

ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை வழங்கி வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த சாதனங்களில் இந்த அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் என அப்பிள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு சார்ந்து பல்வேறு நிறுவனங்களைஅப்பிள் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வு அறிக்கை ஒன்றையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் ஐபோன்களின் பத்தாவது ஆண்டு விழா என்பதால் ஐபோன் 8 குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது.