மோடியும் விக்கியும் இரகசிய உரையாடல் – கூர்ந்து அவதானித்தார் சம்பந்தன்

சர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள சிறீலங்கா வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று  (11) விசேட இராப்போசன விருந்து ஒன்றினை கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தார்.

ஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த இந்திய பிரதமரை ஜனாதிபதி வரவேற்றார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

இவ்விருந்துபசார நிகழ்வின் போது நரேந்திரமோடியுடன் விக்னேஸ்வரன் தனியாக உரையாடியதாகவும் அதன்போது எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் அதற்கு அடுத்த ஆசனத்தில் இருந்து அவதானித்துக்கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இருவரும் என்ன பேசினார்கள் என்ற விடயங்கள் வெளியாகவில்லை. எனினும் அந்த உரையாடலைத் தொடரவிடாது அமைச்சர் மங்கள சமரவீர இடையிடையே குறுக்கீடு செய்து குழப்பியதாகவும் அமைச்சர் ஒருவரை ஆதாரங்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

18359136_10155102565076327_561964387884238775_o