அவுஸ்ரேலியா, அமெரிக்காவில் வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆய்வு

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு  பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள்.

இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வானியல் விஞ்ஞானிகள் விண்வெளியில் வரும் வேற்று கிரகவாசிகளின் சமிஞ்சைகளை அறிய கருவிகளை கண்டறிந்து உள்ளனர்.

வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா என்பது குறித்து அமெரிக்காவின் ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. நாசாவும் அதன் பங்கு நிறுவனங்களின் நிபுணர்கள் இணைந்து விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ள ’ரோடு- மேப்’ அமைந்துள்ளனர். அதன் வழியாக சக்தி வாய்ந்த அதிநவீன டெலஸ் கோப்புகளை நிறுவியுள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய  புதிய திட்டம்  ஒன்றை லண்டனில் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்துக்காக அடுத்த 10 ஆண்டுகளூக்கு  ரூ.640 கோடி செலவிடப்படும். ரஷ்யாவை சேர்ந்த சிலிகான் வேலி தொழில் அதிபர் யூரி மில்னர் இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கிறார். இந்த திட்டத்திற்கு கேம்ரீஜ் பல்கலைகழகத்தை  சேர்ந்த  வானவியலாளர், காஸ்மோலாகிஸ்ட்  பேராசிரியர் லார்டு மார்ட்டீன் ரீஸ், தலைமை தாங்குகிறார்

இந்த திட்டத்தின் மூலம் அவுஸ்ரேலியாவில் நியூ சவுத் வெல்சில் 64 மீட்டர் ( 210 அடி   பார்க் தொலைநோக்கி மூலமும்,அமெரிக்காவில்  மேற்கு வர்ஜினியாவில்  100 மீட்டர் (328 அடி)  பர்ட் கிரீன் பேங்க் தொலை நோக்கியும்  நிறுவப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது.

மேற்கு வர்ஜீனியாவிலுள்ள கிரீன் பாங்க் தொலைநோக்கி மூலம் கிட்டத்தட்ட 700 நட்சத்திரங்கள் கண்காணிக்கபட்டு வருகிறது. இங்கிருந்து பலவிதமான ஒலி அலைகள் கிடைக்கின்றன. இவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.11 க்கும் மேற்பட்ட மர்மமான சிக்னல்கள் விண்வெளியில் இருந்து கிடைத்து உள்ளன.இவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (வேற்றுகிரகவாசிகள் ஆராய்ச்சி மையம் ) இயக்குனர் ஆண்ட்ரூ சிமோரியன் கூறியதாவது:-

தேடுதல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதுவரை  சாதகமான உறுதியான சிக்னல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இது தேடுதலின் ஆரம்ப கட்டநாட்கள் தான்.இனிவரும் காலங்களில் இந்த் தேடுதல் வேட்டை இன்னும் தீவிரமாகும்.அதற்கான பணிகளில் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளன.என கூறினார்.