ஃபேஸ்புக்கின் எதிர்கால திட்டமும்… புதிய சாதனங்களும்…!

ஃபேஸ்புக் நிறுவனம் உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்கள், குடும்பத்தவர்களை இணைக்கும் மிகப்பெரிய சேவையை வழங்கி வருகிறது. அத்துடன் நின்றுவிடாமல் தொழில்நுட்ப உலகில் மேலும் பல புரட்சிகளை மேற்கொள்ளும் முயற்சியிலும் காலடி பதித்து வருகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ புதிய அறிவிப்புகளை ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டுள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்தின் F8 டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்ச்சி கலிபோர்னியாவில் நடைபெற்றது. இதில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள், புதிய சாதனங்களை வெளியிடப்பட்டது. இவை முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது.

உலகின் முதல் ஆக்மெண்ட்டெட் ரியாலிட்டி கேமராவை பேஸ்புக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஃபோட்டோஷாப்பில் செய்யும் அனைத்து வேலையையும் இந்த கேமராவில் செய்யமுடியும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனிமேஷன்களை இணைத்துக் கொள்ளும் வகையில் வ‌டிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு புகைப்படத்தை எடுத்துவிட்டு அதனை 3D-யாக மாற்றவும், வீட்டின் உள் அரங்கத்தின் எடுத்த புகைப்படங்களை, வெளி அரங்கத்துக்கு ஏற்றார் போல் லைட்டிங் மாற்றி அமைப்பது ன பல விதமான விஷயங்கள் சர்வ சாதாரணமாக செய்யும் வகையில் வடிவமைக்கப்பட‌டுள்ளது. அடுத்த தலைமுறையை டிஜிட்டல் உலகில் மிதக்கவைக்க ஆயுதமாக மாறி இருக்கிறது ஆக்மெண்ட்டெட் ரியாலிட்டி கேமரா.

பேஸ்புக்கின் நிறுவனத்தின் மிகவும் வித்தியாசமான மர்மமான திட்டம் பில்டிங் 8. இது மனதில் நினைப்பதை வார்த்தைகளாக டைப் செய்யும் வழிமுறை ஆகும் மனித மூளையில் அனைத்து செயல்களை மேற்கொள்ள உதவும் பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சிறிய சிப்செட்கள், மூளை நினைப்பதை அப்படியே டைப் செய்ய வழி செய்கிறது. அதாவது, மூளையின் ஸ்பீச் சென்டரில் இருந்து வரும் வார்த்தைகளை, நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப் செய்ய வைப்பதற்கான பணிகளை இது மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக ஒருவர் தனது ஸ்மார்ட்போனில் டைப் செய்வதை விட ஐந்து மடங்கு வேகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் ஃபேஸ்புக் பிரியர்களுக்கு பல புதிய புரட்சிகரமான அம்சங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.