அவுஸ்ரேலிய குடியுரிமை பெறுவதில் புதிய மாற்றங்கள்!

அவுஸ்ரேலிய குடியுரிமை பெறுவதில் புதிய மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது. புதிதாக வருவோர், “Australian values” அதாவது அவுஸ்ரேலிய மதிப்புகளை அறிந்துள்ளார்களா எனப் பரிசோதித்து, தேசத்துடனான அவர்களின் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

புதிதாகக் குடியுரிமை பெறுவோர் அவுஸ்ரேலியா நாட்டுக்கான தமது அர்ப்பணிப்பு, மத சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவத்துக்கு அவர்கள் பூரண சம்மதத்துடனான மதிப்பளிக்கிறார்களா எனக் கடுமையாகப் பரிசோதிக்கப்படுவார்கள்.

அவுஸ்திரேலியாவில் நடைமுறையிலுள்ள “four five seven” விசா முறையை இரத்து செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த முறைக்கு பதிலாக தற்காலிக விசா முறை ஒன்று அறிமுகப்படுத்தவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஆற்றிய விசேட உரையின் மூலம் இந்த தகவலை வெளியிட்டார். அவுஸ்திரேலியாவில் நடைமுறையிலுள்ள “four five seven” விசா முறையில் அந்த நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைத்து வந்தன.

எனினும் அதனை தடுத்து அவுஸ்திரேலியர்களுக்கு அதிகமாக தொழில் வழங்குவதற்கான காலம் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேவை அனுபவம், ஆங்கில புலமை மற்றும் தொழிலாளர் சந்தை நிலைமைக்கமைய விசேட தற்காலிக விசா முறையின் ஊடாக அந்த நாட்டிற்கு செல்பவர்களுக்கு தொழில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.