விண்வெளியில் இருந்து வரும் மர்ம சிக்னல்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த மர்ம ரேடியோ சிக்னல் பூமியிலிருந்து வந்ததில்லை என்றும் அது விண்வெளியில் இருந்து தான் வந்துள்ளது என விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

விண்வெளியில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர், மர்ம ரேடியோ சிக்னல் ஒன்று பூமிக்கு வந்துள்ளது. இதை விஞ்ஞானிகள் மோலாங்லா ரரேடியோ டெலஸ்கோப் மூலம் கண்டறிந்துள்ளனர்.

ஆனால் இந்த சிக்னலானது பூமியில் இருந்து வருகிறதா அல்லது வேறு ஏதேனும் பகுதிகளில் இருந்து வருகிறதா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்தனர்.

சுமார் 10 ஆண்டுகள் நடந்த இந்த ஆராய்ச்சிக்கு தற்போது விடைகிடைத்துள்ளது. அதை விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

இது குறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், அந்த சிக்னல் பூமியில் இருந்து வரவில்லை, விண்வெளியில் இருந்து தான் வருகிறது என உறுதிபட கூறியுள்ளனர்.

ஆனால் எந்த இடத்தில் இருந்து அந்த சிக்னல் வருகிறது என உறுதிபடுத்தவில்லை என்றும் பூமியின் எந்த சிக்னல்களுடன் ஒப்பிட்டாலும், இந்த சிக்னல்கள் பில்லியன் மடங்கு பிரகாசமானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் பல காலமாக ஏலியன் இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சிக்னலானது ஏலியன்கள் இருப்பதற்கான சந்தேகத்தை உறுதி படுத்தும் விதமாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது.