வடக்கு கிழக்கில் படையினருக்கு பதிலாக காவல்துறையினரை நியமிக்குமாறு கோரிக்கை!

வடக்கு கிழக்கு மாவட்டங்களில் படையினருக்கு பதிலாக பலம்வாய்ந்த காவல்துறையினரை நியமிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற கருத்தரங்கில் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளில் போரினை மீள ஏற்படுத்தும் வகையிலான செயல்கள் எவையும் இடம்பெறவில்லை படையினரால் பொதுமக்களின் வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

போரின் பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளவழங்குவதற்கு படையினரை குறைக்க வேண்டும் அவர்களுக்கு பதிலாக தமிழ் பேசக்கூடிய பொலீஸாரை ஈடுபடுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.