இயற்பியல் விஞ்ஞானி ‘ஸ்டீபன் ஹாக்கிங் விண்வெளியில் பறக்கிறார்’

லண்டன் கேம்பிரிட்ஜை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் விண்வெளியில் பறக்க திட்டமிட்டுள்ளார்.

லண்டன் கேம்பிரிட்ஜை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (75). இவர் விண்வெளியில் பறக்க உள்ளார். வெர்ஜின் நிறுவனத்தின் கலக்டிக் விண்கலம் இந்த ஆண்டு இறுதியில் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கிறது. அதில் 10 பேர் மட்டுமே பயணம் செய்ய உள்ளனர்.

இவர்களில் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கும் இடம் பெற்றுள்ளார். இத்தகவலை ஐ.டி.வி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது இதை அவர் தெரிவித்தார்.

‘இந்த அரிய வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நான் நினைக்க வில்லை. என்னை விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற எனது ஆசையை தீர்த்து வைப்பவர் யார் என்ற தவிப்பும், எதிர்பார்ப்பும் இருந்தது. ஆய்வில் வெர்ஜின் நிறுவன தலைவர் ரிச்சர்டு பிரான்சன் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளார்’ என்றார்.