மொட்டை தலையுடன் நடிக்க வேண்டும் – அக்ஷ்ராஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் வாரிசு அக்ஷ்ராஹாசன். சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று கனவோடு சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். ஆனால் இப்போது அவரும் நடிகையாக மாறிவிட்டார்.

பாலிவுட்டில், பால்கியின் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ‛ஷமிதாப் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அக்ஷ்ரா, இப்போது ‛லாலி கி ஷாதி மெயின் லாடூ தீவானாஎன்ற படத்தில் நடிக்கிறார்.

இதுதவிர தமிழில் அஜித்துடன் ‛விவேகம் என்ற படத்திலும் நடிக்கிறார். தற்போது அவருக்கு ஒரு வித்தியாசமான ஆசை வந்துள்ளது. அதுவும் சினிமா நடிகைகள் ஏற்க தயங்கும் ஒரு வித்தியாசமான ஆசை. அது என்ன ஆசை என்பதை அவரே சொல்கிறார்.

அதாவது, ஒரு படத்திலாவது தான் மொட்டை தலையுடன் நடிக்க வேண்டும் என்று கூறுகிறார். இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு வரவில்லை என்றும், வந்தால் உடனே உண்மையாகவே மொட்டையடித்து கொண்டு நடிப்பேன் என்கிறார்.

அதுமட்டுமல்ல, குழந்தையாக இருக்கும்போதே நான் மொட்டையடித்துள்ளேன், இதுபோன்று இருப்பது எனக்கு ஒன்றும் புதிது கிடையாது.

ஒரு முறை சின்ன வயதில் மொட்டை தலை என்றால் என்ன என்று அப்பாவிடம் கேட்டேன், உடனே அவர் என்னை பாத்ரூமிற்கு அழைத்து சென்று மொட்டையடித்து விட்டார், இது தான் மொட்டை தலை என்று என்னை காண்பித்தார் என்கிறார்.