‘ஏசி’க்களில் கவனம்!

வெயில் காலத்தில் ‘ஏசி’ விற்பனை அதிகம். குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக ‘ஏசி’யை 23 டிகிரிக்கும் குறைவாக வைக்கக் கூடாது. அப்போது ‘ஏசி’ அதிக பணிச்சுமைக்கு உட்பட்டு திணறும். ‘ஏசி’ மெஷின் பாகங்களின் வெப்ப நிலையும் அதிகரிக்கும்.

இதனால் தீப்பிடிக்கும் அபாயமும் ஏற்படுகிறது. ‘ஏசி’ ஓடிக் கொண்டிருக்கும் போது எக்காரணம் கொண்டும் ‘ரூம் ஸ்பிரே’ அடிக்கக்கூடாது. பெர்ப்யூம்கள் ‘ஏசி’ மெஷினின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி விடும்.

1 டன் அளவுள்ள ‘ஏசி’யை விட, 1.5 டன் அளவுள்ள ‘ஏசி’யில் மின்சார நுகர்வு குறைவாக இருக்கும். அறையின் அளவு ‘ஏசி’ மெஷின் பொருத்துவதில் முக்கிய காரணியாகும்.