கேப்பாப்புலவு மக்களின் மண்மீட்பு போராட்டக் கதை – பிரசுரம் வெளியீடு!

கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்தநிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி கடந்த 22 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை இராணுவமுகாம் முன்பாக முன்னெடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் இந்த மக்களின் போராட்டத்தின் கதையை தாங்கிய பிரசுரம் ஒன்று இன்றையதினம் கேப்பாப்புலவு மக்களின்  போராட்டக்களத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இப் பிரசுரத்தினை “விதை குழுமம்”தாயாரித்திருக்கின்றது. இதனை  யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வவுனியா போன்ற பிரதேசங்களிலுள்ள அமைப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு  விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இனிவரும் நாட்களில் இந்த  மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அழுத்தத்தை உருவாக்கும் வகையிலும் இப்பிரசுரம் தாயாரிக்கப்பட்டிருக்கிறது என் விதை குழுமம் தெரிவித்திருக்கின்றது.