மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் புக்குடன் மோத தயாரிக்கப்படும் கேலக்ஸி புக்?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் புக் சாதனத்துடன் மோதும் நோக்கில் புதிய கேலக்ஸி புக் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் சாம்சங் சத்தமில்லாமல் உருவாக்கி வரும் புதிய சாதனம் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் புக் சாதனத்துடன் மோதும் நோக்கில் கேலக்ஸி புக் என்ற சாதனத்தை சாம்சங் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி புக் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் கான்பிகரேஷன் செட்டிங்ஸ்களை இயக்க பிரத்தியேக செயலி ஒன்றும் வழங்கப்படலாம். மற்ற கணினிகளில் இந்த செயலியை டவுன்லோடு செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேலக்ஸி புக் சாதனம் மைக்ரோசாப்ட் டேப்லெட்டிற்கு போட்டியாக அமையும் என விண்டோஸ் ஸ்டோர் செயலியின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி விண்டோஸ் கணினி, சர்பேஸ் ஹப் மற்றும் ஹோலோ லென்ஸ் உள்ளிட்டவற்றில் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனாலேயே இந்தசாதனம் சர்பேஸ் புக்கிற்கு போட்டியாக இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது.
புதிய கேலக்ஸி புக் சாதனத்தின் செட்டிங்ஸ் ஆப்ஷன்களில் ஸ்கிரீன் மோடு, யூசர் மேனுவல், பேட்டரி லைஃப் எக்ஸ்டென்டர், பேட்டன் லாக்-இன் மற்றும் பல்வேறு இதர சாம்சங் அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது தவிர இந்த சாதனத்தில் வழங்கப்பட இருக்கும் மற்ற சிறப்பம்சங்கள் குறித்து எவ்வித தகவல்களும் தற்சமயம் வரை வெளியாகவில்லை.