செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த உயர் ரக ஸ்மார்ட்போன்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கண்டறிந்தவர்களில் ஒருவரான ஆன்டி ரூபின், செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறார்.

உலகின் பிரபல ஸ்மார்ட்போன் இயங்குதளமாக இருக்கும் ஆண்ட்ராய்டு-ன் இணை நிறுவனரான ஆன்டி ரூபின் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் உயர் ரக ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவல்களில் ஆன்டி ரூபின் தனது புதிய நிறுவனத்தை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

எசென்ஷியல்ஸ் என்ற பெயரில் ஆன்டி ரூபின் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சாதனங்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இவற்றில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர ஸ்மார்ட் சாதனங்களும் அடங்கும். தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களின்படி எசென்ஷியல்ஸ் நிறுவனம் உருவாக்கும் ஸ்மார்ட்போன் எட்ஜ்-டூஎட்ஜ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் ஐபோன் 7 விலையில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிறுவனத்தின் ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன்களில் ஒன்று ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களை விட பெரிய திரை கொண்டிருக்கும்  என்றும் மிகவும் மெல்லிய பெஸ்ல்ஸ் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் 3டி டச் போன்றே இயங்கும் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஆன்டி ரூபின்  ஈடுபட்டுள்ளார்.

இந்த தொழில்நுட்பம் சென்ஸ் பிரெஷர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் மோட்டோ இசட் போன்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனினை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரிக்க ஏதுவான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.