பழைய ஒளிப்படங்களைப் பாதுகாக்க

ஸ்மார்ட்போன் யுகத்தில் ஒளிப்படங்களை எடுப்பதும், பகிர்ந்துகொள்வதும் எளிதாக இருக்கிறது. எல்லாம் சரி, பழைய காலத்தில் எடுத்த ஒளிப்படங்களை என்ன செய்வது? அவற்றை டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பதுதானே சரியாக இருக்கும். இதற்காகப் பழைய ஒளிப்படங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவுக்கு மாற்றலாம். ஆனால் இதற்குக் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். இந்தப் பணியை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள கூகுள் புதிதாக ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது.

‘போட்டோஸ்கேன்’ எனும் அந்தச் செயலி மூலம் ஒருவர் தன்னிடம் உள்ள ஒளிப்படங்களை எளிதாக ஸ்கேன் செய்துகொள்ளலாம். இந்தச் செயலியைத் திறந்து, வீட்டில் ஆல்பத்தில் உள்ள ஒளிப்படங்களைப் படம் பிடிக்க வேண்டும்.

உடனே போன் திரையில் நான்கு வட்டங்கள் தோன்றும். நடுவே ஒரு வட்டம் இருக்கும். நான்கு வட்டங்களும் நடு வட்டத்தில் வரும் வகையில் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்தப் படம் முழுவதும் ஸ்கேன் ஆகிவிடும். அவற்றில் உங்களுக்குத் தேவையான படத்தைச் சேமித்துக்கொள்ளலாம். இதன் மூலம் பழைய படங்களை எளிதாக டிஜிட்டல்மயமாக்கி விடலாம். இது ஆண்ட்ராய்டு, ஐபோன் இரண்டிலும் செயல்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு: http://bit.ly/2fUbtyx