காயம் காரணமாக பீட்டர் சிடில் விலகியுள்ளார்

காயம் காரணமாக தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இருந்து பீட்டர் சிடில் விலகியுள்ளார்.

அவுஸ்ரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் பெர்த்தில் நடந்தது. இதில் தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவின் மிரட்டல் வேகத்தில் உருகுலைந்தஅவுஸ்ரேலிய அணி படுதோல்வியை சந்தித்தது.