புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான புதிய தடுப்பு நிலையம்

பப்புவா நியூகினியில் புகலிடக்கோரிக்கையாளர்களைத் தங்க வைப்பதற்கான புதிய தடுப்பு நிலையத்தின் கட்டுமானப்பணிகள் விரைவில் ஆரம்பமாகுமென அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தமது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளவர்களைத் தங்க வைப்பதற்கே இந்த நிலையம் கட்டப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

பப்புவா நியூகினியின் ஒரேயொரு விமானநிலையத்திற்கு அருகில் இந்த நிலையம் அமைக்கப்படுகின்றது.

இப்படியான தடுப்பு நிலையம் ஒன்று கட்டப்படுவதற்கான அறிவிப்பு கடந்த 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த நிலையில் இதற்கென 20மில்லியன் டொலர்களை ஆஸ்திரேலியா வழங்கவுள்ளது.

இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் பப்புவா நியூகினி நீதிமன்றம் மனுஸ் தீவு தடுப்பு முகாம் மூடப்பட வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

எனினும்  Lombrum naval base தடுப்பு நிலையத்துக்கே நீதிமன்றின் உத்தரவு பொருந்தும் எனவும் மற்றுமொரு
பெரிய நிலையத்தை நடத்துவதில் எவ்வித சட்டச் சிக்கலும் இல்லை எனவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் Rimbink Pato அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.