Home / திரைமுரசு / குத்துச்சண்டை வீரனாக களமிறங்கும் ஆர்யா!

குத்துச்சண்டை வீரனாக களமிறங்கும் ஆர்யா!

பா.ரஞ்சித் இயக்க உள்ள புதிய படத்தில் தான் குத்துச்சண்டை வீரனாக  நடிக்க உள்ளதாக நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். ‘காலா’  திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது இந்தப் படத்துக்கு முன்பாக தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாக பேசப்பட்டது.

இந்நிலையில், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஆர்யா பாக்ஸராக நடிக்க உள்ளார். இப்படம் தனது திரை வாழ்க்கையில் சவால் நிறைந்த படமாக இருக்கும் என ஆர்யா தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக ஆர்யா தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.

 

About குமரன்

Check Also

சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்!

கோவை ஈஷா மையத்தில் விடிய, விடிய நடந்த சிவராத்திரி விழாவில் நடிகை காஜல் அகர்வால் கலந்துக் கொண்டு நடனம் ஆடியுள்ளார். ...