ஐ.நா சிறப்பு அதிகாரி அவுஸ்ரேலியா பயணம்

புலம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகள் தொடர்பில் ஆராயும் ஐ.நா சிறப்பு அதிகாரி Francois Crepeau எதிர்வரும் நவம்பர் மாதம் அவுஸ்ரேலியா வருகை தரவுள்ளதாக ABC செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த அதிகாரி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யவிருந்த நிலையில் அவுஸ்ரேலியாவின் எல்லைப்பாதுகாப்புச் சட்டங்கள் தமது செயற்பாடுகளுக்கு தடையாக இருப்பதாகவும், அகதிகள் தடுப்பு முகாம்கள் தொடர்பில் தம்மால் சுயாதீனமாக விசாரணைகள் நடத்த முடியாத நிலை இருப்பதாலும், தமது விஜயத்தை ரத்துச் செய்வதாக அறிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியில் ஆஸ்திரேலிய அரசின் எழுத்து மூல வாக்குறுதியையடுத்து எதிர்வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா வருகை தரவுள்ள Francois Crepeau, அகதிகள் தடுப்பு முகாம் நிலைமைகள் உட்பட பல்வேறு மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.