பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள ‘ரொசாட்டா விண்கலம்’

67பி சுரியுமோவ் ஜெரன்சிமென்கோ என்ற வால் நட்சத்திரத்தை ஆராய்ந்து வந்த ‘ரொசாட்டா விண்கலம்’ இம்மாத இறுதியில் தன்னுடைய பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பப்பட்ட விண்கலம் ரொசாட்டா. 67பி வால் நட்சத்திரத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது முதல் பல தகவல்களை பூமிக்கு அனுப்பி வந்தது.

ரொசாட்டா சுமந்து சென்ற ரோபோட்டிக் வாகனமான பிளே 67பியில் தரையிரங்கியது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது. ஆனால் சூரிய சக்தி இன்றி ஒரு கட்டத்தில் பிளே செயழிலந்ததும் ரொசாட்டா தனித்து விடப்பட்டது. ஆகையால் இந்த பணியினை மேற்கொள்ளுதல் இனி சிறப்பாக இருக்காது என்பதனால் இம்மாத இறுதியில் ரோசாட்டா 67பி வால் நட்ச்சத்திரத்தின் மீது தரையிறக்கப்பட்டு தன் பணியினை நிறைவு செய்யும் என ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.