Home / திரைமுரசு / ராஷ்மிகா வாயடைத்து போய்விட்டாராம்!

ராஷ்மிகா வாயடைத்து போய்விட்டாராம்!

விருது விழாவில் அஜித்துடன் நடிக்க ஆசை எனக் கூறியவுடன் அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்ததை பார்த்து நடிகை ராஷ்மிகா வாயடைத்து போய்விட்டாராம்.

கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா.
இவர் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ’சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். அஜித் மற்றும் விஜய்யுடன் நடிக்க விருப்பம் உள்ளதாக ராஷ்மிகா பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் இந்த வாய்ப்பு நழுவிப்போனது.
சமீபத்தில் விருது விழாவில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம், யாருடன் நடிக்க விருப்பம் என்று கேட்கப்பட்டதாம். இதற்கு அவர் அஜித் என பதிலளிக்க, ரசிகர்கள் சிறிது நேரம் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத ராஷ்மிகா வாயடைத்து போய்விட்டாராம்.

About குமரன்

Check Also

ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அனுபமா!

மலையாளத்தில் பிரேமம் படத்திலும், தமிழில் கொடி படத்திலும் நடித்த அனுபமா பரமேஸ்வரனின் செயலால் ரசிகர்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளனர். சினிமா உலகத்தைப் ...