ஒஸ்ரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வருடாந்த நத்தார் வேண்டுதல் 2015

ரேடியோதொன் நிதிசேகரிப்பு நிகழ்வு, ஈழத்தில், வடகிழக்கு மாகாணத்தில் மிக மோசமாக மன அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டநிலையில் காணப்படும் எங்கள் தமிழ் உறவுகளின் அவலத்தைப் போக்கவும்,அவர்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்து, அந்த தமிழ் உறவுகளின்வளமான வாழ்வுக்கு வழிசமைக்கும் நோக்கோடு 23வதுமுறையாக ஓஸ்ரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் மேற்கொள்ளப்படும் “மீள்குடியேற்றப் பட்டிருக்கும் பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டத்திற்கு” ஆதரவாக விக்டோரிய ஈழத்தமிழ்சங்கத்தின் 3CR தமிழ்க்குரல், 24 மணிநேர இன்பத்தமிழ் ஒலிவானொலிகளின் ஊடாக காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெறவுள்ளது.

அதன்பிரகாரம், ஒஸ்ரேலியா தமிழர் புனர்வாழ்வுக்கழகம், வடக்கு-கிழக்கிலுள்ள மனிதாபிமானமும் அர்ப்பணிப்புங் கொண்ட உயர்நோக்கத்துடன் இயங்கிவரும் சில சமூக நலன்சார் நிறுவனங்கள் மூலமாக அந்த அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்து வருகின்றது. இவ்வாண்டுத் திட்டமானது முக்கியமாக யுத்தத்தால் பாதிப்புக்குட்பட்ட பெண்கள் தாங்களாகவே தங்கள் சீவாதாரத்தைத் தேடிக்கொள்ள உதவக்கூடிய விதத்திலும் அமைந்தாலும், கூடவே வன்செயல், தாக்குதலுக்கு இலக்காகக்கூடிய இளம் பெண்கள், முன்பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள், முக்கியமாக ஆதரவற்ற ஏதிலிப் பிள்ளைகள்;, வாழ்க்கையில் விரக்தியுற்றிருக்கும் இளைஞர்கள் யுவதிகள், யுத்தத்தினாலும் இடப்பெயர்வுகளினாலும் தமது இருபெற்றோர்களையும் அல்லது உறவினரை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளையும், நிவாரணங்களையும் செய்யக்கூடிய விதத்திலும் அமைக்கப்பட்டிருக்கின்றது

இந்த 9.5 மணிநேர கிறிஸ்மஸ் ரேடியோதொனில், மெல்பேர்னின் சகோதர தமிழ்சமூக வானொலிச் சேவைகளின் அனுபவமிக்க பிரபல அறிவிப்பாளர்களும் மற்றும் இளையவர்களும் இவ் உன்னதப்பணியில் இணைந்து ஆதரவு வழங்குகின்றனர். அத்துடன் 2009 நடந்த பேரழிவின் பின்னர், பெருமளவில் மனதளவில், உடலளவில், பொருளாதார ரீதியில் என்று பல சொல்ல முடியாத இன்னல்களின் மத்தியில் வாழும்எமது இளம் பெண்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு, இப்புனிதப்பணியில் தம்மையும் இணைந்துக் கொண்டுள்ளனர் என்பதையும் அறியத்தருகின்றோம்.

25ம் திகதி காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை உள்ள வானொலி ஒலிபரப்புநேரத்தில், உங்கள் நன்கொடைகளை வழங்கத் தொடர்புகொள்ள வேண்டியதொலைபேசி இலக்கம் 1300 721 399 (சகல மாநிலங்களுக்கும்)அல்லது மெல்பேர்ன் (03) 9419 8377.

radiothon-adஇந்நிகழ்வுகள் தாயக்கத்தில் அவதியுறும் உறவுகளின் அவலத்தைப் போக்கும்ஓஸ்ரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வருடாந்த நத்தார் வேண்டுதல்நிதிசேகரிப்பு நிகழ்வுக்கு ஆதரவு கொடுக்கும் நிகழ்வாக மட்டும் அல்லாமல், இந்தபுனித நத்தார் தினத்தில் அனுபவமுள்ள, உணர்வுள்ள தமிழ் அறிவிப்பாளர்களின் ஒன்றுகூடலாகவும் மற்றும் இந்த உன்னத பணியில் பங்கு கொண்டு தாயகத்து உறவுகளிற்கும், புலத்து உறவுகளிற்கும் ஒரு இணைப்புப் பாலமாகவும் பலதொண்டர்களும் செயற்பட்டுவருகின்றனர். இம்முறையும் அதே உத்வேகம், உணர்வுடன் இன்னும் பல புதியவர்களையும் இணைந்து, இந்நன்னாளில் ஓர் நற்காரியத்திற்காக பங்கெடுத்துக் கொள்ளுமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

TRO Aust Christmas Appeal News Letter_2015

TRO Christmas_appeal_2015_Media Release

TRO Radiothon Media_announcement 2015

TRO X’mas_Radiothon_Pledge form 2015