சிங்கள மக்களை ஏமாற்றி தீர்வு காணலாம் என யாரும் நம்பகூடாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்மக்களை ஏமாற்றியோ சிங்கள மக்களை ஏமாற்றியோ தமிழ்மக்களுக்கு ஒரு அமைதியான நிலையான தீர்வை பெற்றுக்கொள்ளமுடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். மாறாக வெளிப்படையான கலந்துரையாடல்கள் மூலமே அரசியல் ரீதியான விடயங்கள் அணுகப்படவேண்டும் என தமிழத்தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வழங்கும்போதே அவர் தனது கருத்தை தெரிவித்தார்.

இத்தகைய பேச்சுவார்த்தைகளில் ஆரம்பம் தொட்டே உலகத்தமிழர் பேரவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியும் அனைத்துலக மக்கள் அவைகளும் நாடு கடந்த தமிழீழ அரசும் தமிழ்ச்சிவில் சமூகமும் ஆகிய ஆறு முக்கியமான அமைப்புகளை உள்ளடக்கி தமிழர் தீர்வு திட்டம் தொடர்பாக கலந்துரையாடிவந்தோம்.

ஆனால் ஏனைய நான்கு அமைப்புகளும் உடன்பட்ட முக்கியமான விடயங்களை புறந்தள்ளி உலகத்தமிழர் பேரவை எனப்படும் ஜிரிஎப் உம் தமிழ்தேசிய கூட்டமைப்பும் தனியாக பிரிந்துசென்று தற்போது பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமிழர்களின் அரசியல் பலத்தை சீரழித்து துரோகம் செய்கின்றனர் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

Gajendrakumar-Ponnambalamமேலும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தமிழ்மக்களின் பிரதிநிதித்துவம் பற்றியே அதிகம் பேர் கவலைகொள்வதாகவும் உண்மையில் அதுவல்ல பிரச்சனை எனவும் தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவத்தை குறைத்து பலவீனப்படுத்தவே இத்தகைய திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன என்பதை அனைவரும் கவனத்திற்கொள்ளவேண்டும் எனவும் கஜேந்திரகுமார் தெரிpவித்தார்.