விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதம் என சொல்கிறது கூட்டமைப்பு – கயேந்திரகுமார் (காணொளி)

இன்று தமிழர்களுக்கான உரிய தீர்வு என்னவென்ற விடயத்திலும் அதனை முன்னெடுப்பவர்கள் யார் என்றவகையிலும் மக்களிற்கு விளங்கப்படுத்தவேண்டிய தேவையுள்ளது.

வடமராட்சியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் சார்பில் நடைபெற்ற மேதின பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கயேந்திரகுமார் பொன்னம்பல் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது.

இன்று இனப்பிரச்சனை என்று சொல்லுகின்றோம். அதற்கான தீர்வு என்ன?

இலங்கைத்தீpவில் சிங்களமக்களுக்கு எவ்வாறு சிறப்பான கலை கலாச்சாரம் உள்ளதோ அதேபோல தமிழ்மக்களும் சிறப்பான கலை கலாச்சாரத்தை கொண்டிருக்கின்றார்கள்.

நாங்கள் சிங்களவர்களின் மொழியை கலாச்சாரத்தை மதிப்பதுபோல அவர்களும் எமது மொழியை கலாச்சாரத்தை மதிக்கவேண்டும். எமது தாயகநிலப்பரப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இதனை நாங்கள் சொல்லும்போது இதனை பயங்கரவாதம் என்கிறார்கள். இதனை இப்போது சொல்பவர்கள் யார்? எமது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைகளாக காட்டிக்கொள்ளும் சம்பந்தர் அவர்களும் சுமந்திரன் அவர்களும் எமது அரசியல் கோரிக்கையை பயங்கரவாதம் என்கிறார்கள்.

எமது தலைவரையும் எமது போராளிகளின் விடுதலைப்போராட்டத்தையும் பயங்கரவாதம் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக சொல்கின்றது.

இதற்கு தமிழ்மக்கள் என்ன பதில் சொல்லப்போகின்றார்கள். எதிர்வரும் தேர்தலில் உங்கள் கருத்தை சரியான வகையில் தெரியப்படுத்தாது போனால் எமது இனத்தின் அழிவை தடுக்கமுடியாமல்போகும்.

முழுமையான காணொளி வடிவம்

Leave a Reply