வெளிநாட்டு அமைச்சர் யூலி பிசப் சென்னையில்!!

இந்தியாவுக்கான தனது வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர் யூலி பிசப் இந்தியாவில் அகதிகளாக தங்கியுள்ள தமிழர் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளார்.

தற்போது இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் (Rehabilitation and Reconciliation) என்பவற்றை ஏற்படுத்துதல் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அகதிகளாக அவுஸ்திரேலியாவுக்கு வருவதை மனிதகடத்தல் என்ற ரீதியில் எவ்வாறு தொடர்ந்தும் தடுக்கப்படலாம் என்பதுபற்றியும் தமிழ்நாடு முதல்வருடன் அவர் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.

eelamurasu-JulieBishopTNஅத்துடன் தற்போதைய இந்திய – அவுஸ்திரேலிய நெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் சென்னையிலும் தனது இந்தியாவுக்கான அவுஸ்திரேலியாவின் துணைத்தூதரகத்தையும் திறந்துவைத்தார்.

மும்பாயில் ஏற்கனவே ஒரு துணைத்தூதரகம் இந்தியாவின் தெற்கு மாநிலங்களை மையப்படுத்தி இயங்கிவருகையில் புதிய துணைத்தூதரகம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் மட்டும் 63000 இந்தியர்கள் மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவுக்குள் வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவுக்கு வருகின்ற மாணவர்கள் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.

அவுஸ்திரேலியாவின் இன்னொரு திட்டத்தின் அடிப்படையில் 350 அவுஸ்திரேலிய பலகலைக்கழக மாணவர்கள் இந்தியாவில் தமது கல்வியை இந்த ஆண்டு மேற்கொள்வார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.eelamurasu-JulieBishop

அண்மையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேந்திரன் உட்பட அவுஸ்திரேலிய பிரதிநிதிகளை சந்தித்த யூலி பிசப் இனிமேல் எப்படி இரு இனங்களும் ஒன்றாக இணைந்துவாழலாம் என்பது பற்றி ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply