Home / செய்திமுரசு / கொட்டுமுரசு / கூட்டமைப்பு கட்டமைப்பு சார் அமைப்பாக பதியப்பட வேண்டும் – வீரகேசரி
nat_conv_vav_01_43710_435

கூட்டமைப்பு கட்டமைப்பு சார் அமைப்பாக பதியப்பட வேண்டும் – வீரகேசரி

மக்­களைச் சென்­ற­டைதல் என்­பது அர­சி­யலில் மிகவும் முக்­கி­ய­மா­ன­தொரு தேவை­யாகும். அர­சியல் கட்சி அல்­லது அர­சியல் தலை­வர்­களின் கருத்­துக்கள் மக்­களைச் சென்­ற­டை­வதன் ஊடா­கத்தான் மக்­களின் ஆத­ரவைப் பெற முடியும். அதன் அடிப்­ப­டை­யில்தான் மக்­களை அணி திரட்ட முடியும். அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க, முடியும்.

ஆகவே மக்­களைச் சென்­ற­டை­வ­தற்­காக அர­சி­யல்­வா­திகள் எத­னையும் சொல்­வார்கள். எத­னையும் செய்­வார்கள். ஆனால், இவ்­வாறு எத­னையும் சொல்­வதும், செய்­வதும் ஆரோக்­கி­ய­மான அர­சி­ய­லுக்கு உகந்­த­தல்ல. மக்­களின் தேவைகள், அவர்­களின் எதிர்­கால வாழ்க்கை என்­ப­வற்­றையும் நாட்டின் சுபிட்சம், எதிர்­காலப் போக்கு என்­ப­வற்றைச் சிந்­த­னையில் கொண்டு அதற்­கேற்ற வகையில் மக்­களை அணி திரட்ட வேண்­டி­யது அவ­சியம்.

மக்­களை, தங்கள் பக்கம் அணி திரட்ட வேண்டும். அவர்­களின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற சுய அர­சியல் இலாபச் செயற்­பா­டுகள் நிலைத்து நிற்கக் கூடிய வகையில், மக்­க­ளு­டைய ஆத­ரவைப் பெற்றுக் கொடுக்கப் போவ­தில்லை. அவ்­வா­றான ஆத­ரவைப் பெறு­கின்ற அர­சி­யல்­வா­திகள் மக்கள் மத்­தியில் நீண்­ட­காலம் செல்­வாக்கு மிக்­க­வர்­க­ளாகத் திக­ழவும் முடி­யாது.

இலங்­கையில் யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர், யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சத்தில் தேசிய அர­சியல் கட்­சி­க­ளுக்கும், அவற்­றோடு, தென்­னி­லங்­கையில் உள்ள அர­சியல் கட்­சி­க­ளுக்கும் மக்­களைச் சென்­ற­டைய வேண்­டிய தேவைப்­பாடு ஏற்­பட்­டி­ருந்­தது. யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து, யுத்த பிர­தே­சத்து மக்கள் மத்­தியில் வலு­வா­னதோர் அர­சியல் கட்­ட­மைப்பும், வலி­மை­யான அர­சியல் தலை­மையும் இல்­லா­தி­ருந்­ததே இதற்கு முக்கிய கார­ண­மாகும்.

யுத்தம் நடை­பெற்ற போது விடு­த­லைப்­பு­லிகள் தமிழர் தரப்பில் ஆயுத பலம் மிக்­கதோர் அமைப்­பாக செயற்­பட்­டி­ருந்­தனர். அவர்­களின் செயற்­பா­டுகள், யுத்த களத்­தி­லும்­சரி, அர­சியல் களத்­தி­லும்­சரி இலங்கை அர­சாங்­கத்­திற்குப் பெரும் தலை­யிடி கொடுப்­ப­ன­வாக அமைந்­தி­ருந்­தன. அதே­நேரம் பாராளு­மன்ற ஜன­நா­யக அர­சி­யலில் தமிழர் தரப்பின் வலு­வான கட்­ட­மைப்­பாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு திகழ்ந்­தது.

ஆயினும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஓர் அர­சியல் சக்­தி­யாக – அமைப்­பாக, விடு­த­லைப்­பு­லி­களின் செயற்­பா­டு­க­ளுக்கு உட்­பட்­ட­தா­கவே இருந்­தது. இதனால் தமிழர் தரப்பு அர­சியல் தலைமை என்­பது விடு­த­லைப்­பு­லிகள் என்ற கட்­ட­மைப்­பையே முழு­மை­யாகச் சார்ந்­தி­ருந்­தது. ஆனால், 2009 ஆம் ஆண்டு விடு­த­லைப்­பு­லிகள் இரா­ணுவ ரீதி­யாகத் தோற்­க­டிக்­கப்­பட்டு, அதன் முக்­கிய தலை­வர்­களும் இல்­லாமற் செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து தமிழ் மக்­க­ளு­டைய அர­சி­யலில் ஒரு பாரிய வெற்­றிடம் ஒன்று ஏற்­பட்­டி­ருந்­தது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு அப்­போது உயிர்த்­து­டிப்­புடன் இருந்த போதிலும், விடு­த­லைப்­பு­லி­களின் பிர­சன்னம் இல்­லாத சூழலில் தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் தலை­மை­யாக அது உட­ன­டி­யாகப் பரி­ண­மித்­தி­ருக்­க­வில்லை. ஆயினும் யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் நடத்­தப்­பட்ட தேர்­தல்­களில் மக்கள் விடு­த­லைப்­பு­லி­களின் வழி­ந­டத்­த­லின்றி, அவர்கள் சுய­மாக, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பைத் தமது அர­சியல் தலை­மைத்­து­வ­மாகத் தெரிவு செய்­தி­ருந்­ததை சந்­தே­கத்­திற்­கி­ட­மின்றி வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள்.

ஆகவே, விடு­த­லைப்­பு­லிகள் தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் தமிழ் மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருந்த அர­சியல் வெற்­றி­டத்தில் புகுந்து அந்த மக்­களின் அர­சியல் தலை­மையைத் தன்­வ­சப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான முயற்­சி­களில் முன்­னைய ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்க்ஷ முழு வீச்சில் ஈடு­பட்­டி­ருந்தார்.

அர­சியல் ரீதி­யா­கவும், தேசிய பாது­காப்பு என்ற போர்­வையின் கீழ் இரா­ணுவ ரீதி­யா­கவும், இதற்­கான செயற்­பா­டு­களை அவர் முன்­னெ­டுத்­தி­ருந்தார். யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர், விடு­த­லைப்­பு­லி­க­ளினால் சிறை வைக்­கப்­பட்­டி­ருந்த தமிழ் மக்­களை, தனது அரச படை­களே விடு­த­லைப்­பு­லி­க­ளி­ட­மி­ருந்து மீட்­டெ­டுத்­தி­ருந்­தன என்ற பிர­சா­ரத்தை முன்னாள் ஜனா­தி­பதி முடுக்­கி­விட்­டி­ருந்தார்.

பயங்­க­ர­வாத யுத்­தத்தைத் தொடுத்­தி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களை தமது அர­சாங்­கமே இல்­லாமற் செய்து, யுத்­தத்­திற்கு முடி­வு­கட்டி, அமை­தி­யையும் சமா­தா­னத்­தையும் நாட்டில் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­த­தா­கவும், எனவே, அதற்­காக தமிழ் மக்கள் அர­சாங்­கத்­திற்கு நன்­றி­யு­டை­ய­வர்­க­ளாக இருக்க வேண்டும் என்று பகி­ரங்­க­மா­கவே அவர் மேடை­களில் தமிழ் மக்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யி­ருந்தார்.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த மக்­களை, யுத்த பிர­தே­சத்தில் இருந்து வெளி­ யேற்றி, அக­தி­க­ளாக, அவர்­களை செட்­டி­குளம் மனிக்பாம் அகதி முகாமில் அப்­போ­தைய அர­சாங்கம் அடைத்து வைத்­தி­ருந்­தது. யுத்­த­க­ளத்தில் சிக்­கி­யி­ருந்து, படா­த­பா­டு­பட்டு, தெய்­வா­தீ­ன­மாக உயிர்­தப்பி – இடம்­பெ­யர்ந்து, எந்­த­வி­த­மான உடை­ மை­க­ளு­மின்றி, அக­தி­க­ளாக வந்த மக்­க­ளாக அவர்­களை அர­சாங்கம் அப்­போது கரு­த­வில்லை.

மாறாக அவர்­க­ளையும் பயங்­க­ர­வா­தி­க­ளா­கவே கரு­தி­யி­ருந்­தது. இதன் கார­ண­மா­கவே, அவர்­களை, முட்­கம்பி வேலி அமைத்து, மனிக்பாம் முகா­முக்குள் பலத்த இரா­ணுவ பாது­காப்­புக்குள் அப்­போ­தைய அரா­சங்கம் அடைத்து வைத்­தி­ருந்­தது. வெளியில் அவர்கள் எவ­ரு­டனும் தொடர்பு கொள்ள முடி­யாது. வெளியில் இருந்து வரு­ப­வர்கள் அவர்­களை சுதந்­தி­ர­மாகப் பார்க்க முடி­யாது.

இயல்­பா­கவும், சுதந்­தி­ர­மா­கவும் அவர்­க­ளுடன் முகாமில் இருந்­த­வர்கள் பேச முடி­யாது. வெளியில் இருந்து, உள்ளே இருந்­த­வர்­க­ளுக்கு அடிப்­ப­டை­யாகத் தேவைப்­பட்ட பொருட்­க­ளைக்­கூட கொண்டு சென்று கொடுக்க முடி­யாத அள­வுக்குக் கெடு­பி­டிகள் மனிக்பாம் முகாமில் கோலோச்­சி­யி­ருந்­தன.

தனிப்­பட்­ட­வர்கள், தனிப்­பட்ட ரீதியில் தமது உற­வி­னர்கள் என்ற வகையில் அவ­சி­ய­மான பொருட்­களைக் கொண்டு செல்ல முடி­யா­த­வாறு, நடை­மு­றைகள் இருந்­தன. தனியார் நிறு­வ­னங்கள், தொண்டு நிறு­வ­னங்­க­ளும்­கூட, யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் என்ற ரீதியில் நிவா­ரணப் பொருட்­க­ளையோ உதவிப் பொருட்­க­ளையோ, அங்கு கொண்டு சென்று விநி­யோ­கிக்க முடி­யாத வகையில் இறுக்­க­மான போக்கு அங்கு கடைப்­பி­டிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஊட­க­வி­ய­லா­ளர்கள் எவரும் அங்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

மனிக்பாம் முகாம் மட்­டு­மல்ல. வவு­னியா, செட்­டி­குளம் மற்றும் புல்­மோட்டை, திரு­கோ­ண­மலை, அனு­ரா­த­புரம் போன்ற முக்­கிய இடங்­களில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வைத்­திய வச­திகள் அளிக்­கப்­பட்ட வைத்­தி­ய­சா­லை­க­ளில்­கூட ஊட­க­வி­யலாளர்கள் செல்ல முடி­யா­த­வாறு தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த வைத்­தி­ய­சா­லைகள் அனைத்­திலும் இரா­ணு­வத்­தினர் காவ­லுக்கு நிறுத்­தப்­பட்டு கடும் சோத­னைக்குப் பின்னர், ஆள் அடை­யா­ளங்கள் அனைத்தும் முழு­மை­யாகப் பரி­சீ­லனை செய்த பின்பே உள்ளே செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தார்கள்.

தொண்டு நிறு­வ­னங்­களைச் சேர்ந்­த­வர்கள், பொது அமைப்­புக்­களை;ச சேர்ந்­த­வர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் மாற்­றுக்­கட்சி அர­சி­யல்­வா­திகள் ஆகியோர் இந்த வைத்­தி­ய­சா­லை­களின் வெளி­வா­சல்­களில் வைத்தே திருப்பி அனுப்­பப்­பட்­டி­ருந்­தார்கள். அந்த அள­வுக்கு கடு­மை­யான நடை­மு­றைகள் அப்­போது பின்­பற்­றப்­பட்­டி­ருந்­தன. யுத்தம் நடை­பெற்ற சூழ­லி­லும்­கூட, யுத்­த­பி­ர­தே­சத்தில் அர­சாங்­கத்­தினால் தேர்­தல்கள் நடத்­தப்­பட்­டன.

அங்­கி­ருந்த மக்கள் வாக்­க­ளிப்­ப­தற்­கான வச­திகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. அந்த மக்கள் தேர்­தல்­களில் பங்கு கொண்டு, தமக்கு விருப்­ப­மா­ன­வர்­களை தமது பிர­தி­நி­தி­க­ளாகத் தெரிவு செய்­தி­ருந்­தனர். அவ்­வாறு தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்த எதி­ர­ணியைச் சேர்ந்­த­வர்­க­ளான தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைக்­கூட, அந்த மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட, மக்கள் பிர­தி­நி­திகள் என்ற ரீதியில் சென்று பார்­வை­யி­டு­த­வற்கு, அர­சாங்கம் அனு­ம­திக்­க­வில்லை.

அர­சாங்­கத்­திடம் இருந்து அனு­மதி பெற்று வர­வேண்டும் என்று, அங்கு செல்ல முயன்ற மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டது. அதுவும் பாது­காப்பு அமைச்சின் அனு­மதி பெற்­றி­ருக்க வேண்டும் என்று விசே­ட­மாகக் கூறப்­பட்­டது. மனிக்பாம் முகாமில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த மக்­களைப் பார்­வை­யி­டு­வதற்கு அனு­ம ­திக்க வேண்டும் என்று அப்­போது, பல தட­வைகள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு கோரி­யி­ருந்­தது.

ஆயினும் அதற்­கான அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. இறு­தி­யாக 2010 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்து, ஒரு வருட காலம் கழிந்த பின்னர், மனிக்பாம் முகா­முக்குச் செல்­வ­தற்­கான அனு­மதி தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த பின்னர் உட­ன­டி­யா­கவே, 2010 ஆம் ஆண்டு, பொதுத் தேர்தல் ஒன்றை அர­சாங்கம் நடத்­தி­யது. யுத்தம் முடி­வ­டைந்­த­போது, விடு­த­லைப்­பு­லிகள் அழிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், இந்தத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான வேட்­பா­ளர்கள் பொது­மக்கள் மத்­தியில் இருந்து சுய­மாக வரு­வ­தற்கு விரும்­பி­யி­ருக்­க­வில்லை.

யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும் நில­விய இரா­ணுவ கெடு­பி­டி­களே, இதற்குக் கார­ண­மாக இருந்­தது. எனினும் அகதி முகாம்­களில் அக­தி­க­ளாக இருந்­த­வர்­க­ளும்­கூட, கெடு­பி­டி­க­ளுக்கு மத்­தியில் வேட்­பா­ளர்­க­ளாகக் களம் இறங்­கி­யி­ருந்த நிலை­மையும் காணப்­பட்­டது. அதே­நேரம், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தா­லும்­கூட, தமிழ் மக்கள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கு, பெரும்­பான்­மை­யாக வாக்­க­ளித்­து­விடக் கூடாது என்­ப­தற்­காக, அவர்­க­ளு­டைய கவ­னத்தை திசை திருப்­பு­வ­தற்­கா­கவும், அவர்­களைக் குழப்­பு­வ­தற்­கா­கவும் அர­சாங்கம் பல சுயேச்சை குழுக்­களை தேர்தல் களத்தில் இறக்­கி­யி­ருந்­தது.

இத்­த­கைய பின்­ன­ணியில் 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் இடம்­பெ­யர்ந்து மனிக்பாம் முகாமில் இருந்த மக்கள் பேருந்­து­களில் தமக்­கென அமைக்­கப்­பட்­டி­ருந்த வாக்குச் சாவ­டி­க­ளுக்குச் சென்று வாக்­க­ளித்­தார்கள். அந்த நிலை­யிலும் அவர்கள் தமது பிர­தி­நி­தி­க­ளாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பைச் சேர்ந்­த­வர்­க­ளையே தெரிவு செய்­தி­ருந்­தார்கள். இந்தத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு முன்னர், தேர்­தலில் தமிழ் மக்­களால் தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற பிர­தி­நி­தி­க­ளிடம் பேச்­சுக்கள் நடத்­துவோம்.

அந்தப் பேச்­சுக்­களின் ஊடாக தமிழ் ம்கக­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கும், அவர்கள் எதிர்­நோக்­கி­யுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கும் அர­சியல் தீர்வு காண்போம் என்று அப்­போ­தைய ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ பல தட­வைகள் பகி­ரங்­க­மாகத் தெரி­வித்­தி­ருந்தார். ஆனால் பொதுத் தேர்தல் நடத்­தப்­பட்டு வடக்­கிலும் கிழக்­கிலும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­யாக நாடா­ளு­மன்­றத்­திற்குத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே, மனிக்பாம் முகாமில் இடம்­பெ­யர்ந்­தி­ருந்த அந்த மக்­களைச் சென்று பார்­வை­யி­டு­வ­தற்­கான அனு­ம­தியை, இழுத்­த­டிப்பின் பின்னர் அர­சாங்கம் வழங்­கி­யி­ருந்­தது.

ஆனால் மனிக்பாம் முகா­முக்குச் சென்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர்.சம்­பந்தன் தலை­மை­யி­லான பாராளு­மன்ற குழு­வி­ன­ருக்கு மனிக்பாம் முகா­முக்குள் செல்­வ­தற்கு அங்­கி­ருந்த இரா­ணுவம் அப்­போது அனு­மதி மறுத்­து­விட்­டது. அர­சாங்­கத்தின் அனு­ம­தியைப் பெற்­றி­ருக்­கலாம். ஆனால் நீங்கள் பாது­காப்பு அமைச்சின் எழுத்து மூல அனு­ம­தியைப் பெற்­றி­ருக்க வேண்டும் என்றும், அவ்­வாறு அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருப்­பது தொடர்­பாக எழுத்து மூல­மான அறி­வித்தல் தங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டி­ருக்க வேண்டும் என்றும் அங்கு கட­மையில் இருந்த இரா­ணு­வத்­தினர் தெரி­வித்­து­விட்­டார்கள்.

இதனால் அர­சாங்­கத்தின் அனு­மதி பெற்­றி­ருந்­தும்­கூட, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழு­வி­னரால் மனிக்பாம் முகா­முக்குள் செல்ல முடி­யாமல் போயி­ருந்­தது. அது மட்­டு­மல்­லாமல், இடம்­பெ­யர்ந்­தி­ருந்த மக்­களை 2009 ஆம் ஆண்டு ஒக்­டோ­டபர் மாத­ம­ளவில் மீள்­கு­டி­யேற்றம் செய்­வ ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்த அர­சாங்கம், அந்த மக்­களின் பிர­தி­நி­தி­க­ளான தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னரை மீள்­கு­டி­யேற்றப் பகு­திக்குள் செல்­வ­தற்கும் அனு­ம­திக்­க­வில்லை.

2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்­த­லுக்குப் பின்­னரே அதற்­கான அனு­ம­தியை அரசு வழங்­கி­யி­ருந்­தது. ஆயினும் மீள்­கு­டி­யேற்றச் செயற்­பா­டு­க­ளிலோ அல்­லது யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களின் மீள் கட்­ட­மைப்புப் பணி­க­ளிலோ தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவ­ரையும் பங்­கெ­டுக்­கா­த­வாறு அர­சாங்கம் பார்த்துக் கொண்­டது. மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பான முக்­கிய கலந்­து­ரை­யா­டல்கள், முக்­கிய தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்ட கூட்­டங்கள், மீள்­கு­டி­யேற்றச் செயற்­பா­டுகள் தொடர்­பி­லான மதிப்­பீட்டு கூட்­டங்கள் என்­ப­வற்றில் எந்­த­வொரு கூட்­டத்­திற்கும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அழைக்­கப்­ப­ட­வில்லை.

அவர்­களைப் புறக்­க­ணித்­து­விட்டு, அர­சாங்க அமைச்­சர்­களும், அரச தரப்பு பாராளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுமே இந்தக் கூட்­டங்­களில் பங்­கு­பற்­றி­யி­ருந்­தார்கள். இதனால் மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கை­யும்­சரி, மீள்­கட்­ட­மைப்பு செயற்­பா­டு­க­ளும்­சரி, புனர்­வாழ்வு நட­வ­டிக்­கை­க­ளும்­சரி, அர­சாங்கத் தரப்­பி­ன­ரா­லேயே. முழு­மை­யாக செயற்­ப­டுத்­தப்­பட்­டது என்­ற­தொரு மாயத் தோற்­றத்தை மக்கள் மத்­தியில் அர­சாங்கம் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

பொது நிகழ்­வு­களில் உரை­யாற்­றிய அப்­போ­தைய ஜனா­தி­பதி தொடக்கம் அமைச்­சர்கள், அர­சாங்­கத்­த­ரப்பு பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள் வரையில் அனை­வ­ருமே, யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களை, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு சென்று பார்க்­க­வில்லை. அவர்­களில் அக்­கறை காட்­ட­வில்லை. அவர்­க­ளுக்குத் தேவை­யான எந்­த­வொரு நிவா­ரண உத­வி­க­ளையும் அவர்கள் வழங்­க­வில்லை என்று நா கூசாமல் கூட்­ட­மைப்­புக்கு எதி­ராகப் பகி­ரங்­க­மாகப் பிர­சாரம் செய்­தார்கள்.

அர­சியல் ரீதி­யாக சேற­டித்­தி­ருந்­தார்கள். தமிழ் மக்­களைத் தங்கள் பக்கம் திசை திருப்பி, அவர்­க­ளுக்­கான அர­சியல் தலை­மைiயை – அர­சியல் தலை­மைத்­து­வத்தைத் தாங்கள் கைப்­பற்­றி­விட வேண்டும் என்ற ஒரே நோக்­கத்­திற்­கா­கவே அர­சாங்­கத்­தினால் இந்தச் செயற்­பா­டுகள் அனைத்தும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. ஆயினும், தமிழ் மக்கள் இந்த அரை­வேக்­காட்­டுத்­த­ன­மான அர­சியல் பம்­மாத்­துக்­களில் எடு­பட்டுப் போக­வில்லை.

அவர்கள் மிகவும் விழிப்­போடு இருந்­தார்கள். தெளி­வோடு செயற்­பட்­டி­ருந்­தார்கள். தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை அர­சாங்கம், திட்­ட­மிட்டு அர­சியல் ரீதி­யாகப் புறக்­க­ணித்து வரு­கின்­றது என்­ப­தையும் தமிழ் மக்­களின் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளாக – அர­சியல் தலை­வர்­க­ளாகத் தோற்றம் பெறு­வ­தற்கு பேரின அர­சியல் கட்­சிகள் முயற்­சிக்­கின்­றன என்­ப­தையும் தமிழ் மக்கள் நன்கு அறிந்­தி­ருந்­தார்கள். அதனால், அவர்­க­ளு­டைய அர­சியல் கப­டத்­த­னங்­க­ளுக்கு அவர்கள் பலி­யா­கி­வி­ட­வில்லை.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பே தமது அர­சியல் தலைமை என்­பதை ஒவ்­வொரு தேர்­த­லிலும் சந்­தே­கத்­திற்கு இட­மின்றி நிலை­நி­றுத்தி வந்­துள்­ளார்கள். இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சிகள் தமக்குள் ஒன்­றி­ணைந்த செயற்­பா­டு­க­ளின்றி, தான்­தோன்­றித்­த­ன­மாக நடந்து கொள்­கின்­றன என்ற பழிச்­சொல்­லுக்கு ஆளா­கி­யி­ருக்­கின்­றன.

மக்­களின் செல்­வாக்­கையும் ஆத­ர­வையும் ஒரு முக­மாகப் பெற்­றுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு, அர­சியல் ரீதி­யாகத் தன்னைப் பலப்­ப­டுத்திக் கொண்டு, தமிழ் மக்­க­ளுக்கு ஆளுமை மிக்­கதோர் அர­சியல் தலை­மையை வழங்க முடி­யா­ததோர் அவல நிலைக்குள் சிக்­குண்டு கிடக்­கின்­றது. தமிழ்தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்­சி­யாகத் திகழ்­கின்ற இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி, கூட்­ட­மைப்­பினுள் தன்னை மாத்­தி­ரமே முதன்­மைப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றது என்ற குற்­றச்­சாட்­டிற்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றது.

அந்தக் கட்­சி­யா­னது கட்சி அர­சியல் நடத்­து­வதில் அக்­க­றையும், ஆர்­வமும் காட்­டி­யி­ருக்­கின்­றதே தவிர, பல்­வேறு நெருக்­க­டிகள், கப­டத்­த­ன­மான அர­சியல் செயற்­பா­டுகள் என்­ப­வற்றில் எல்லாம் எடு­பட்டு போகாமல், ஒரே அணி – ஒரே அமைப்பு – கூட்­ட­மைப்பு என்ற அர­சியல் நிலைப்­பாட்டில் உள்ள தமிழ் மக்­களின் உறு­திப்­பாட்­டிற்கு அமை­வாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை ஒரு கட்­ட­மைப்­புக்குள் கொண்டு வரு­வ­தற்­கு­ரிய முயற்­சி­களை மேற்­கொள்ள மறுத்து வரு­கின்­றது.

மோச­மான ஒரு யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்டு, அனைத்­தையும் இழந்து உள­ரீ­தி­யா­கவும் பாதிக்­கப்­பட்­டுள்ள தமிழ் மக்­களின் வாழ்க்­கை­யையும், அர­சி­ய­லையும் மீண்டும் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டி­யது இப்­போது அவ­ச­ர­மான தேவை­யாக இருக்­கின்­றது. அதற்கு கட்சி அர­சியல் செயற்­பா­டுகள் ஒரு­போதும் உதவப் போவ­தில்லை. மக்கள் ஓர­ணியில் ஒன்று திரண்­டி­ருக்­கின்­றார்கள். அதே­போன்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களும் ஓர் அணியில், ஒரு கட்­ட­மைப்­பாக அணி திரள வேண்டும்.

அவ்­வாறு ஒன்­றி­ணை­யா­விட்டால், மக்­களைச் சென்­ற­டைந்து அவர்­க­ளு­டைய மனங்­களை மாற்றி, தமிழ் மக்­களின் ஒற்­று­மையைச் சித­ற­டிப்­ப­தற்­கான சக்­தி­களின் செயற்­பா­டுகள் வெற்­றி­ய­டை­வ­தற்கு வழி­யேற்­ப­டுத்திக் கொடுத்த பழி அந்தக் கட்­சி­க­ளுக்கே வந்து சேரும். நூறு நாள் வேலைத் திட்டம் ஒன்றை முன்­வைத்து நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ள இப்­போ­தைய கூட்டு அர­சாங்கம் (அது இன்னும் தேசிய அர­சாங்­க­மாகப் பரி­ண­மிக்­க­வில்லை.

ஐக்­கிய தேசிய கட்­சியைப் போன்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­ன­ருக்கும் அமைச்சுப் பத­வி­களைக் கொடுத்­துள்ள போதிலும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால், ஒரு கூட்டு அர­சாங்­கத்­தையே உரு­வாக்க முடிந்­தி­ருக்­கின்­றது. தேசிய அர­சாங்­கத்தை அவரால் உருவாகக முடியவில்லை. பொதுத் தேர்தல் ஒன்றின் மூலமே இதனை சாதிக்க முடியும் என்று அவர் நம்புகின்றார்.

வரப்போகின்ற பொதுத் தேர்தலை கருத்திற்கொண்டு, தமிழ் மக்கள் மத்தியில் – மக்களைச் சென்றடைவதற்கு முயன்று கொண்டிருக்கி;ன்றது. அதேபோன்று இலங்கையின் அரசியல் விவகாரங்களில் அக்கறை காட்டத் தொடங்கியுள்ள புதிய இந்திய அரசாங்கமும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடாக, தமிழ் மக்களை அணுகாமல், நேரடியாக தமிழ் மக்களை அணுகுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது, அவர் கலந்து கொண்டிருந்த வடபகுதி நிகழ்வுகள், அவற்றின் ஒழுங்கமைப்புக்கள் என்பன இந்த வகையிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்தியா வழங்குகின்ற உதவிகள் நேரடியாக தமிழ் மக்களுக்கே சென்றடையும் வகையிலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற கருத்தும்கூட, இந்தச் சந்தர்ப்பத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அத்துடன், கிழக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்திய உதவித்திட்ட வீடுகளைக் கையளிக்கும் வைபவத்தில் இந்திய அதிகாரிகள் நேரடியாக மக்களைச் சென்றடைந்திருந்தார்கள்.

இந்த வைபவத்தில் அந்த மக்களின் பிரதிநிதிகளாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் புறக்கணிக்கப்பட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கதாகும். எனவே மக்களைச் சென்றடைவதற்கான – தமிழ் மக்களைச் சென்றடைவதற்கான பலமுள்ள அரசியல் சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்தச் சூழ்நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர், கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதறடிப்பதற்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்வதற்கும் சக்திகள் முற்படுகின்றன என்று குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதைக் கைவிட்டு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பை எந்தெந்த வழிகளிலெல்லாம் பலமுள்ளதாக, வலுவுள்ளதாக்க முடியுமோ அவற்றையெல்லாம் மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும்.

கூட்டமைப்பினர் வெறும் அரசியல் தலைவர்களாக அல்லாமல், மக்களின் மனங்களை வென்ற மக்கள் தலைவர்களாக உருவாக வேண்டும். இது இப்போதைய காலத்தின் தேவையாக உள்ளது. மக்களின் மனம் அறிந்து, அவர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து அவர்களுக்கான தேவைகளை உணர்ந்து அதற்கேற்ற வகையில் செயற்பட கூட்டமைப்பினர் குறிப்பாக தமிழரசுக் கட்சியினர் முன்வர வேண்டும்.

– செல்வரட்ணம் சிறிதரன்

About emurasu

Check Also

x31-1509438708-warner-wife.jpg.pagespeed.ic.3xEu8LyKyq

பென் ஸ்டோக்ஸ் மீது டேவிட் வார்னர் மனைவி கோபம்!

இங்கிலாந்து ஆல்ரவுண்டர், பென் ஸ்டோக்ஸ் நடவடிக்கை வெறுக்கத்தக்கதாக உள்ளது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மனைவி கூறியுள்ளது ...

Leave a Reply