சிரியா: போரினால் பசிக்கொடுமை – தவிக்கும் பிள்ளைகள்!

சிரியாவின் டமாஸ்கஸ் நகரை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிடமிருந்து மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

சிரியாவின் அரசாங்கப் படைகள் டமாஸ்கசின் கிழக்கிலுள்ள புறநகர்ப் பகுதியை முற்றுகையிட்டன. அங்குள்ள பகுதியில் தற்போது கடும் பஞ்சம் நிலவுகிறது. உணவுப் பற்றாக்குறையால் பிள்ளைகளே ஆக அதிகமாக அவதிப்படுகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களில் உணவுப் பற்றாக்குறையால் அவதியுறும் பிள்ளைகளின் எண்ணிக்கை இருமடங்கானதாகத் தகவல்கள் கூறின. கிழக்கு கவுட்டா பகுதியில் குறைந்தது 1,200 பிள்ளைகள் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 1,500 பிள்ளைகள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கக்கூடும் என்று UNICEF அமைப்பு தெரிவித்தது.