அன்பாக வளர்த்த எசமானியை கடித்துக்குதறிக் கொலை செய்த நாய்!

அவுஸ்திரேலியாவின் கான்பரா நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, அவர் ஆசையோடு வளர்த்த நாய் ஒன்று கடித்துக் குதறியுள்ளது. இதனால் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கான்பரா நகரைச் சேர்ந்த Tania Klemke எனும் நாற்பது வயதுடைய பெண் சிம்பா எனும் பெயெருடைய நாய் ஒன்றினை மிகுந்த செல்லமாக வளர்த்துவந்துள்ளார்.

அன்பாக வளர்த்த எசமானியை கடித்துக்குதறிக் கொலை செய்த கொடூர நாய்!

இந்த நிலையில் நேற்று அதிகாலை நான்கு மணியளவில் அந்த பெண்ணின் ஆண் நண்பர் ஒருவர் அவரது வீட்டுக்கு வருகை தந்துள்ளார். அதன்போது சிம்பா அவர்மீது திடீரெனப் பாய்ந்து மிக மோசமாகத் தாக்கியது.

நாயின் தாக்குதலுக்குள்ளானவரைக் காப்பாற்றுவதற்காக குறித்த பெண், தனது செல்லப்பிராணியை பிடிக்க முயன்றபோது அது சட்டென்று அந்த பெண் நோக்கி திரும்பி அவரையும் மோசமாகக் கடித்துக்குதறியது.

இதன்போது Tania Klemkeயின் வீட்டிலிருந்து பாரிய அலறல் சத்தம் கேட்பதை அவதானித்த அயல்வீட்டார் பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் கொடுத்தனர்.

அன்பாக வளர்த்த எசமானியை கடித்துக்குதறிக் கொலை செய்த கொடூர நாய்!

சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்துவந்தபோதும் குறித்த நாய் தன்னை ஆசையோடு வளர்த்த எஜமானியைக் கடித்தவாறே இருந்துள்ளது. இதனால் குறித்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காய் பொலிஸார் அந்த நாயைச் சுட்டுக்கொன்றனர். பின்னர் நாயினால் குதறப்பட்ட பெண் அந்த இடத்திலேயே ஏற்பட்ட அதிக இரத்தப்பெருக்கால் உயிரிழந்தார்.

அன்பாக வளர்த்த எசமானியை கடித்துக்குதறிக் கொலை செய்த கொடூர நாய்!

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த பெண் அந்த நாயுடன் மிகவும் அன்பாக பழகியவர் என்றும் அவர் தனது உண்மையான நண்பனாக சிம்பா எனும் அந்த நாயையே குறிப்பிட்டுள்ளதாகவும் அவரது நண்பர்கள் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளனர்.

Klemkeயின் மகன் இதுகுறித்து தெரிவிக்கையில், “எனது அம்மா என்னைவிட சிம்பா மீது மிகுந்த அன்பு கொண்டவர். எப்பொழுதும் தன்னுடனேயே அதனைக் கூட்டித்திரிவார். அது இப்படி நடந்துகொள்ளும் என்று கனவில்கூட நாங்கள் நினைக்கவில்லை” என்றார் அழுதபடி.

22811416_1603912123001064_924333089_nமேலும் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஒருவர், “நாங்கள் அங்கே சென்றோம். அதன்போது அந்த நாய் மிக கொடூரமாக நடந்துள்ளது. இரண்டுபேர் நாயால் கடியுண்டு காயப்பட்டிருந்தனர். மிகவும் ஆபத்தான நாய் அது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

எது எவ்வாறாயினும் வளர்ப்பு பிராணிகளிடத்தில் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் என்றும் விலங்குகளிடம் காட்டும் அதீத அன்புகூட குறித்த விலங்கினை தவறாக வழி நடத்தி நமக்கு எதிராகவே அதனைத் திருப்பிவிடக்கூடியது என்று மக்களை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.