பாடசாலைகளுக்கான அடிப்படை நிதி $80 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பு!

NSW பாடசாலைகளுக்கான அடிப்படை நிதி $80 மில்லியன் டொலர்களால் அதிகரிக்கப்படுவதாக NSW மாநில முதல்வர் Gladys Berejiklian நேற்று (புதன்கிழமை) அறிவித்துள்ளார்.

அத்துடன் NSW அரசாங்கப் பள்ளிகளுக்கான தேவைகள் அடிப்படையிலான கல்வி நிதி 1 பில்லியன் டொலருக்கும் அதிகமாக 8 சதவிகிதம் அதிகரிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.

மாணவர் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகளுக்கு $ 1.09 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் கணித கல்வியறிவுத் திட்டங்கள் மற்றும் ஆசிரியப் பயிற்சி ஆகியவற்றுக்கு அளிப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.