ரெனால்ட் கேப்டூர் இந்திய வெளியீடு: புதிய தகவல்கள்

ரெனால்ட் நிறுவனத்தின் கிராஸ்ஓவர் SUV ரக மாடலான கேப்டூர் இந்தியாவில் வெளியாவது சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

பிரென்ச் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனால்ட் இந்தியாவில் புதிய கிராஸ்ஓவர் மாடலான கேப்டூர் அறிமுகம் செய்துள்ள நிலையில், ஆட்டோகார் இந்தியா வெளியிட்ட தகவல்களின் படி நவம்பர் மாத முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் புதிய கேப்டூர் ஏற்கனவே அதன் விற்பனையாளர்களிடம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும், ரெனால்ட் கேப்டூர் செயலி அல்லது ரெனால்ட் இந்தியா வலைத்தளத்திலும் முன்பதிவு செய்ய முடியும். புதிய கேப்டூர் முன்பதிவு செய் ரூ.25,000 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரெனால்ட் கேப்டூர் M0 தளம் சார்ந்திருக்கிறது. இதன் முன்பக்கம் வி வடிவிலான ரேடியேட்டர் கிரில் மற்றும் ரெனால்ட் லோகோ நடுவே இடம்பெற்றுள்ளது. இத்துடன் ஸ்வெப்ட் பேக் புரோஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் பகலில் வேலை செய்யும் எல்இடி மின்விளக்குகள் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பக்கவாட்டுகளில் உறுதியான வெய்ஸ்ட்லைன் மற்றும் உயர்த்தப்பட்ட ஸ்டான்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் மற்றும் சேடின் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்கிட் பிளேட் மற்றும் கிலீன் டெயில்கேட் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய கேப்டூர் இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ரெனால்ட் கேப்டூர் கிராஸ்ஓவர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் முறையே 104bhp மற்றும் 108bhp செயல்திறன் கொண்டுள்ளது. இதன் பெட்ரோல் மாடலில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டீசல் இன்ஜினில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

கேப்டூர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 12 கிலோமீட்டர் மற்றும் டீசல் மாடல் லிட்டருக்கு 17 கிலோமீட்டர் வரை செல்லும் என ARAI தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெனால்ட் கேப்டூர் AMT மாடல் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இதன் டாப் எண்ட் மாடலில் நான்கு-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ABS, EBD பிரேக் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.