Home / செய்திமுரசு / கொட்டுமுரசு

கொட்டுமுரசு

இப்பகுதியில் சகஊடகங்களில் வெளியான பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.

இராஜதந்திர ஜனநாயகப் போராட்டத்தின் அவசியம்

ஜெனிவாவில் உருவாகி வருகின்ற நெருக்கடிகளுக்கு உறுதியோடு முகம் கொடுப்பதற்கான ஆயத்தங்களில் அரசு ஈடுபட்டிருக்கின்றது. அதனை பகீரதப் பிரயத்தனம் என்று கூட குறிப்பிடலாம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ‘கோர் குறூப்’ என குறிப்பிடப்படுகின்ற முக்கிய உறுப்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக கடுமையானதொரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக வெளியாகிய அறிக்கையொன்றையடுத்து அரசு இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிகின்றது. அதற்கான அவசர கோரிக்கைக் கடிதம் ஒன்று இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பி ...

Read More »

ஜெனிவாவில் மீண்டும் ஏமாற்றம்?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்துத் தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையின் நகல் வெளிவந்திருக்கின்றது. ஜெனிவாவில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்த அனைவருக்கும் கடும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக இந்த நகல் பிரேரணை அமைந்திருக்கின்றது. கடந்த வருடங்களில் ஏமாற்றப்பட்டதைப்போல இந்த வருடமும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படப் போகின்றார்கள் என்பதற்கான ஒரு முன்னறிவித்தலாக இந்தப் பிரேரணை அமைந்திருக்கின்றது. ஜெனிவா ...

Read More »

புதிய தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும்

இலங்கையில் சிறுபான்மை தமிழர்கள் சமத்துவம் நீதி அமைதி கண்ணியம் ஆகியவற்றுடன் வாழ்வதற்காக அவர்களின் உரிமைகளிற்கு ஆதரவளிப்பதாக இந்திய தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். ஐக்கியநாடுகளிற்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளில் சர்வதேச மனித உரிமையை உறுதிசெய்வதாக இந்திய அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது. இந்த கடப்பாடுகள் மிகவும் முக்கியமானவையாக மாறியுள்ளன,2019 இல் கோத்தபாயராஜபக்ச ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது. பெப்ரவரி 22 ம் ஆரம்பமாகவுள்ள அடுத்த அமர்வில் ஐக்கியநாடுகள் மனித உரிமை ...

Read More »

ஆளும் கட்சியின் உட்பூசல்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஆளும் கட்சிக்குள் பலம் இழந்து வருகிறாரா? ஆளும் கட்சிக்குள், அவரை ஒதுக்கித் தள்ளும் நிலை உருவாகி வருகிறதா என்ற சந்தேகம் ஏற்படும் வகையில், அண்மையில் சில சம்பவங்கள் இடம்பெற்றன; இடம்பெற்றும் வருகின்றன. தரை ஓடு போன்ற செரமிக் பொருட்களை இறக்குமதி செய்வதை, அரசாங்கம் ‘கொவிட் 19’ நோயால் ஏற்பட்ட பயணக் கஷ்டங்களின் காரணமாக, கடந்த வருடம் ஜூலை மாதம் தடை செய்திருந்தது. அப்பொருட்களை விற்பனை செய்யும் ...

Read More »

இணைவு – எழுச்சி – சர்ச்சை – முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் !

தமிழ் மக்களின் போராட்டம் என்பது சாதாரண அரசியல் விளையாட்டல்ல. அது நீதிக்கும் நியாயத்துக்குமானது. அரசியல் உரிமைகள் சார்ந்தது. அடிப்படை உரிமைகளுக்கானது. அது அவர்களுடைய வாழ்வுக்கும் இருப்புக்குமானது. தமிழ் மக்கள் சாதாரண மக்களல்ல. அவர்கள் வந்தேறு குடிகளுமல்ல. வாழ்வியல் வழியில், கலை, கலாசார, மத, பண்பாடு, அரசியல் ரீதியான வரலாற்று பாரம்பரியத்துடனான தாயகப் பிரதேசத்தைக் கொண்டவர்கள். ஆனால் பெருந்தேசியப் போக்கில் தனி இனத்துவ அரசியல் மமதையில் சிங்கள பௌத்த தேசியக் கொள்கையின் அடிப்படையில் ...

Read More »

பேரணியும் விளைவுகளும்

தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்திகளுக்கு உள்ளாகியிருந்த சுமந்திரனின் பாதுகாப்பை அரசங்கம் மீளப்பெற்று அவரை பலவீனப்படுத்தியதன் மூலம் அவரை மக்களுடன் நெருக்கமாக்கியிருக்கின்றது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி பெரெழுச்சியுடன், நிறைவு பெற்றிருக்கின்ற நிலையில், இந்தப் பேரணி எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்படுத்தப் போகிறது என்ற கேள்விகளும் கூடவே எழுந்திருக்கின்றன. இவ்வாறானதொரு பேரணியை அரசாங்கமும் எதிர்பார்க்கவில்லை, தமிழர் தரப்பும் எதிர்பார்க்கவில்லை. பேரணிக்குப் பின்னர் வெளியிடப்படும் கருத்துக்களும், எடுக்கப்படும் நடவடிக்கைகளுமே, இது ;ஒரு ...

Read More »

உரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம்

இந்தப் பந்தியை எழுதத் துவங்கும் பொழுது, ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்ற நாள். கிளிநொச்சி நகரத்தில் பெரும் குரலுடன் நிரை நிரையாக சனங்கள் செல்லுகின்றனர். கறுப்புக் கொடி ஏந்தியபடி, எமது உறவுகள் எங்கே, கோத்தபாய அரசே பதில் சொல்லு என்ற பெருங்கேள்வி துளைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கை அரச காவல்துறையினரால் மக்களின் எழுச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. மறுபுறத்தில் கிழக்கில் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களுமாக களத்தில நின்று குரல்களை எழுப்புகின்றனர். கிளிநொச்சியில் ...

Read More »

பொத்துவில் மூலம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு சுமந்திரன் துரோகமிழைத்துள்ளார்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது நேற்றைய நாடாளுமன்ற உரையின் போது, எத்தனையோ சவால்கள் எதிர்ப்புகள் நெருக்கடிகள் இடையூறுகள் காணப்பட்ட நிலையிலேய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி அவர்களுக்கு பெரும் துரோகமிழைத்துள்ளார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் கொழும்பில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...

Read More »

தமிழர் போராட்டங்களின் இலக்கு என்ன ?

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் – என்னும் சுலோகத்தின் கீழ் இடம்பெறும் எதிர்ப்பு பேரணி, தமிழ்ச் சூழலில் கவனத்தை பெற்றிருக்கின்றது. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு வகையான உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை அதன் 73வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில்தான், வடக்கு கிழக்கில் இவ்வாறானதொரு எதிர்ப்பு பேரணி திட்டமிடப்பட்டிருக்கின்றது. அதே வேளை அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா அமர்வு தொடர்பில் அனைவரது பார்வையும் ...

Read More »

மியான்மார் தரும் பாடம்

மியான்மாரில் திங்கட்கிழமை (01) அரங்கேறிய இராணுவச் சதி, ஆசியச்சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலை அடுத்து, புதிய பாராளுமன்றம் திங்கட்கிழமை கூடவிருந்த நிலையில், மியான்மாரிய இராணுவம், தனது மூன்றாவது இராணுவச் சதியை அரங்கேற்றியது. மியான்மாருக்கு இராணுவச் சதியும் இராணுவ ஆட்சியும் புதிதல்ல. ஆனால், மாறிவரும் உலக ஒழுங்கில், கொவிட்-19 நோயின் நெருக்கடிக்கு மத்தியில், ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாதளவு சவாலுக்கு உட்பட்டுள்ள நிலையில், இந்த இராணுவச் ...

Read More »