செய்திமுரசு

ஜனாதிபதியின் பௌத்த சிங்கள சிந்தனையின் வெளிப்பாடே வடமாகாணசபையின் பிரதம செயலாளராக தமிழ் தெரியாத ஒருவரின் நியமனம்

ஆளுமையுள்ள பல தமிழ் அலுவலர்கள் இருக்கும் போது வடமாகாணசபையின் பிரதம செயலாளராகத் தமிழ் தெரியாத ஒருவரை நியமிக்க ஜனாதிபதி மேற்கொண்டுள்ள தீர்மானம் அவரின் பௌத்த சிங்கள சிந்தனையின் வெளிப்பாடே என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த நியமனம் தொடர்பில் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக முன்னைய வடமாகாணசபை உறுப்பினர்களின் எதிர்ப்புக் கூட்டம் யாழ்ப்பாணம் இளம் கலைஞர் மன்றத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றபோது உரையாற்றியபோதே விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், வலு ...

Read More »

குயின்ஸ்லாந்து விபத்தில் சிறுமியும் தாயும் மரணம்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்தியப்பின்னணி கொண்ட தாயும் மகளும் மரணமடைந்துள்ளனர். இரு மகன்களும் தந்தையும் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்றுமுன்தினம் வியாழன் அதிகாலை 7.20 மணிக்கு இவ்விபத்து சம்பவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த 35 வயதான Lotsy Jose மற்றும் அவரது 6 வயது மகள் Catelyn Rose Bipin ஆகியோரே இவ்விபத்தில் மரணமடைந்தவர்களாவர். Lotsy Jose, கணவர் Bipin Ouseph மற்றும் 3 பிள்ளைகள் என ஐந்துபேர் அடங்கிய குடும்பம், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Orange பகுதியிலிருந்து ...

Read More »

பணியாளர் சேவைக்கு குறைந்த வயதெல்லையை 18 ஆக உயர்த்த தொழில் ஆணையாளர் நடவடிக்கை

பணியாளர் சேவைக்கு நிறுத்தக்கூடிய ஆகக்குறைந்த வயதை 18 வரை அதிகரிக்க ஆலோசித்து வருவதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்தரகீர்த்தி தெரிவித்தார். பணியாளர் சேவைக்கு நிறுத்தப்படும் அதிகமானவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகிவருவதை தடுத்துக்கொள்வதற்கு எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பணியாளர் சேவைக்கு ஒருவரை நிறுத்தக்கூடிய வயதெல்லையை 18வரை அதிகரிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரம், எதிர்காலத்தில் ஒருவரை பணியாளர் சேவைக்கு நிறுத்துவதாக இருந்தால் குறித்த நபருக்கு 18வயது பூரணமாக இருக்கவேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்

Read More »

ரிஷாட்டின் மனைவிக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரையும் 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,  குறித்த நால்வரையும் எதிர்வரும் 26ம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read More »

மாடர்னா தடுப்பூசியை சிறுவர்களுக்கு பயன்படுத்தலாம்

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை 3,700-க்கும் மேற்பட்ட சிறாருக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. கொரோனாவுக்கு எதிராக போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே போடப்படுகிறது. எனினும் பைசர் தடுப்பூசி மட்டும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கும் போடப்படுகிறது. எனினும் பல தடுப்பூசிகள் 18 வயதுக்கு குறைவானவர்களிடம் பரிசோதனையில் உள்ளது. அந்தவகையில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை 3,700-க்கும் மேற்பட்ட சிறாருக்கு (12-17 வயது பிரிவினர்) செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படும் ஆன்டிபாடிகளுடன் ஒப்பிடும் அளவுக்கு சிறாரிடமும் இந்த தடுப்பூசி ஆன்டிபாடிகளை ...

Read More »

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கட்டுக்கடங்காமல் பரவும் கோவிட்!

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இந்த ஆண்டில் ஒரே நாளில் பதிவான ஆகக்கூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும். இதையடுத்து தற்போது ஏற்பட்டுள்ளநிலை ஒரு ‘தேசிய அவசரநிலை’ என்பதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில தலைமை சுகாதார அதிகாரி Dr Kerry Chant விவரித்துள்ளார். புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 136 பேரில் 77 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 59 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் Premier Gladys Berejiklian தெரிவித்தார். இவர்களில் ஆகக்குறைந்தது 53 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...

Read More »

பாதுகாப்பு பற்றிய கட்டுக் கதையும் பயங்கரவாத தடைச் சட்டமும்

பல தசாப்தங்களாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மனித உரிமைகளுக்கு மாறாக காணப்படும் தன்மைகளை சுட்டிக்காட்டியுள்ளார்கள். அரசானது பயங்கரவாத தடைச்சட்டமானது நாட்டை பாதுகாக்கவே கொண்டு வரப்பட்டது என கூறினாலும், நடைமுறையில், இச்சட்டம் ஒரு பிரஜையை தன்னிச்சையாக கைது செய்யவும், தடுத்து வைக்கவும், சித்திரவதை செய்;யவும் மற்றும் செய்யப்படாத குற்றத்திற்கு தண்டனையளிக்கவுமே வழிவகுக்கிறது. இச்சட்டம் இலங்கையின் சர்வதேச மனித உரிமைகள் பற்றி சர்வதேச கடமைகளை மற்றும் அரசியலமைப்பு மூலம் உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறினாலும், அடுத்தடுத்து ஆட்சியினை பொறுப்பேற்ற அரசாங்கங்கள் இச் சட்டத்தினை ...

Read More »

உலக அளவில் 75 சதவீதம் கடந்த டெல்டா வகை கொரோனா

இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கொரோனா வைரசுகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவை டெல்டா வகையை சோந்தவையாக உள்ளன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 4 வாரங்களாக கொரோனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு, டெல்டா ...

Read More »

சிறிலங்காவில் நீதிமன்ற கட்டமைப்பு எதற்கு?

நாட்டின் பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர்நீதிமன்ற மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஏழு பேர் வழங்கிய தண்டனையை ரத்து செய்வதற்கு ஜனாதிபதியால் முடியுமென்றால் நாட்டில் நீதிமன்ற கட்டமைப்பு எதற்கு? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த சம்பவம் பொய்யென்றால் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்யாது துமிந்த சில்வாவை மாத்திரம் விடுதலை செய்தது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். துமிந்த சில்வாவின் விடுதலையின் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் எழுதி வைக்கப்பட்டுள்ள ‘சிறைச்சாலை கைதிகளும் மனிதர்கள்’ ...

Read More »

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை நாம் நிராகரிக்கிறோம் !-ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன்

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்க தேவையில்லை. சில சரத்துக்களை மாத்திரம் மாற்றம் செய்வதன் மூலம் சட்டத்தை திருத்தி தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை நாம் நிராகரிக்கிறோம் என ரெலோ கண்டனத்தை தெரிவித்துள்ளது ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன் இதனை தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது சட்டவல்லுனர்கள், ஜனநாயகவாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள் ஏன் சர்வதேச நாடுகள் உட்பட பலதரப்புடக்கள் இந்த சட்டத்தினால் ஏற்பட்ட கடும் மக்கள் விரோத போக்கினை கண்டித்து இதை நீக்குமாறு வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். ...

Read More »