செய்திமுரசு

நோய் எதிர்ப்பு மண்டல பிரச்சினை உள்ளவர்களுக்கு கரோனா 3வது டோஸ்

நோய் எதிர்ப்பு மண்டல குறைபாடு உடையவர்களுக்கு மூன்றாவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்காவில் கரோனா முதல் அலையின் போது மிகப் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. அன்றாடம் ஒரு லட்சம் பேருக்கும் குறையாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது அலையின் போது ஃபைஸர், மாடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால் சற்றே பாதிப்பு தாக்குப்பிடிக்கும் அளவுக்கு இருந்தது. இந்நிலையில், மூன்றாவது அலை அங்கே வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. பெரும்பாலானோருக்கு டெல்டா வேரியன்ட் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், மக்களுக்கு மூன்றாவதாக கரோனா பூஸ்டர் ...

Read More »

சட்டத்தினை முறையாக இயங்கவிடுங்கள்!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்னாக்கொட குற்றவாளி அல்ல என நீதிமன்றே தீர்மானிக்கவேண்டும். மாறாக சட்டமா அதிபரோ, நீதிஅமைச்சரோ, அரசாங்கமோ தீர்மானிக்கக்கூடாது. இந்த நாட்டிலே சட்டத்தினை முறையாக இயங்கவிடுங்கள் என கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் கனகையா தவராசா தெரிவித்துள்ளார். 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்னாக்கொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களைத் தொடரக்கூடாது என்ற சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவைக் கண்டித்துத்து கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் க.தவராசா, கரைதுறைப்பற்று பிரதேசசபையின் ஆகஸ்ட்மாத அமர்வில் கண்டனப் பிரேரணை ...

Read More »

யாழ். போதனா வைத்தியசாலையில் நிரம்பும் கொரோனா தொற்றாளர்கள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை பொறுத்தவரை எமது இக்கட்டான நிலையை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றதென யாழ்.போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ் போதனா வைத்திய சாலையில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எமது வைத்தியசாலை தற்போதைய நிலவரத்தின்படி வைத்தியசாலையின் விடுதிகள் மற்றும் அதி தீவிர சிகிச்சை பிரிவுகள் எல்லாமே கொரோனா நோயாளிகளால் நிரம்பியிருக்கின்றன. எங்களுக்குரிய மிகக் குறைந்த வளங்களுடன் எமது சேவைகளை நாம் முன் கொண்டு செல்கின்றோம். ...

Read More »

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் ஒரு வார கால ஊரடங்கு அமல்

ஆஸ்திரேலியாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் முதல் அலையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா தற்போது 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குவின்ஸ்லாந்து ஆகிய மாகாணங்களை டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆக்கிரமித்துள்ளது. முக்கியமாக, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னியில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. அங்கு தொடர்ந்து 7-வது வாரமாக ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் ...

Read More »

அகதிகள் பற்றிய விழிப்புணர்வு: நடந்து செல்லும் அமல்

இரவு, பகலும் தங்களது பெற்றோர்களுடன் உலகின் ஏதாவது ஒரு முனையில் அகதியாக செல்லும் இளம் குழந்தைகளின் அடையாளமாக மாறியிருக்கிறாள் அமல். குழந்தை அகதிகள் குறித்து உலக நாடுகளுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமல் என்ற சிறுமி வடிவலான பொம்மையை Handspring Puppet Company வடிவமைத்துள்ளது. சுமார் 3.5 மீட்டர் உயரம் கொண்ட அமல், துருக்கி – சிரியா எல்லையிலிருந்து மான்செஸ்டர்வரை நடந்தே பயணம் செய்ய இருக்கிறாள். அதாவது சுமார் 8,000 ஆயிரம் கிலோ மீட்டர். ஜூலை மாதம் தனது பயணத்தை தொடங்கிய அமல் நவம்பர் ...

Read More »

பிரியா-நடேஸ் மகள் தருணிகா தொடர்பான முறையீட்டை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டநிலையில் தற்போது பெர்த்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா சார்பிலான மேன்முறையீடொன்றை விசாரிப்பதற்கு உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. பிரியா, நடேஸ் மற்றும் இவர்களது மூத்த மகள் கோபிகா ஆகியோரது விசா விண்ணப்பங்கள் மற்றும் மேற்முறையீடுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ள பின்னணியில், நான்கு வயதுச் சிறுமி தருணிகாவின் அகதிதஞ்ச விண்ணப்பத்திற்கு procedural fairness-பிரிசீலனை சார்ந்த நியாயத்தன்மை காண்பிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது. மேலும் தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இவ்விசாரணை முடியும் ...

Read More »

போராட்டங்களும் ஏமாற்றங்களும்

நாட்டில் நடைபெறும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களைப் பார்க்கும் போது, நாட்டை ஆள்வது ராஜபக்‌ஷர்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஏனெனில், முன்னைய ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில், ஆர்ப்பாட்டங்கள் மிகக் கொடூரமாக அடக்கப்பட்ட போதிலும், இப்போது அந்தளவு கடுமையாக அடக்கப்படுவதில்லை. தெற்கே அதிபர்களும் ஆசிரியர்களும் ஆரம்பித்த போராட்டம், தற்போது வடபகுதிக்கும் பரவியுள்ளது. தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகவும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்த 2005 முதல் 2014 வரையிலான கால கட்டத்தில், பல ஆர்ப்பாட்டங்களின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2011, 2012, ...

Read More »

யாழில் பேருந்து விபத்து: 24 ​பேர் படுகாயம்

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை சொந்தமான பேருந்து, கல்லுண்டாய் வீதியில் விபத்துக்கு உள்ளானது. இதில், 24 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும்    யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இங்கு வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில், வேகமாக வந்த பேருந்து மழை காரணமாக சறுக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Read More »

பரிசோதனை வர்த்தமானி அறிவித்தல்

தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனை, ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிசிஆர் பரிசோதனைக்கு 6 ஆயிரத்து 500 ரூபாயும், அன்டிஜன் பரிசோதனைகளுக்கு 2000 ரூபாய் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

Read More »

நியூசவுத்…. புதிதாக 344 பேருக்கு தொற்று

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 344 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இருவர் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்கள் 30 வயதுகளிலுள்ளவர் மற்றும் 90 வயதுகளிலுள்ள ஒருவர் எனவும் இவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து கடந்த ஜுன் மாதம் NSW மாநிலத்தில் ஏற்பட்ட கோவிட் பரவல் காரணமாக மரணமடைந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 344 பேரில் ஆகக்குறைந்தது 65 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர். இந்தப்பின்னணியில் Dubbo ...

Read More »