Home / செய்திமுரசு (page 4)

செய்திமுரசு

சின்னையாவின் கதி இன்று தெரியும்!

travis2

கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையாவின் தொடர்ந்து பதவியில் நீடிப்பாரா என்பது இன்று தீர்மானிக்கப்படும். ட்ராவிஸ் சின்னையா 55ஆவது வயது பூர்த்தி காரணமாக கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் இருந்தார். அக்காலப் பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கான பயணமொன்றை மேற்கொள்ள இருந்த நிலையில் கடற்படைத் தளபதிக்கு ஒருமாத கால பதவி நீடிப்பை வழங்கி, இது தொடர்பாக நாடு திரும்பிய பின் கலந்துரையாட அவகாசமளிப்பதாக உறுதியளித்திருந்தார். ...

Read More »

டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதம் ரூ.8 கோடிக்கு ஏலம்

201710221118016104_Titanic-letter-sells-for-world-record-price-at-auction_SECVPF (1)

கடலில் மூழ்கி இறந்த டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதத்தை எட்டு கோடி ரூபாய்க்கு ஏலம் விட திட்டமிட்டுள்ளனர். இங்கிலாந்தின் மிக பிரமாண்டமான பயணிகள் சொகுசு கப்பலான டைட்டானிக் சவுத்தாம்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்றது. வழியில் அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையின் மீது மோதி உடைந்து கடலில் மூழ்கியது. இக்கோர விபத்து கடந்த 1912-ம் ஆண்டு நடந்தது. அதில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது இறந்தவர்களில் அமெரிக்காவின் ...

Read More »

முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவ சிப்பாய் பலி

body

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் 59 ஆவது படைப்பிரிவை சேர்ந்த இராணு சிப்பாய் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இராணுவ சிப்பாய்  கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்குள் உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த சமயம் விபத்தில் சிக்கியுள்ளதாக இராணுவத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளாகிய இராணுவ சிப்பாயின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இராணுவப் பொலிஸ் பிரிவினர் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Read More »

இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டோரின் 30வது ஆண்டு நினைவு!

jaffna-hospital

யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் 30வது ஆண்டு நினைவுநாள் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, 22 ஆம் திகதிகளில் வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய படையினரால் சுட்டுப்படுகொலை செய்ய்பட்ட 21 பேரின் நினைவு தினம் இன்று நினைவு கூரப்பட்டது. 30வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. ...

Read More »

மூடப்படும் தொழிற்சாலையால் 955 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை!

car-manufacturing

அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரிலுள்ள ஹோல்டன் மோட்டார் வாகன உற்பத்தி நிலையம் மூடப்படுகிறது. இதனால் 955 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த வாகன உற்பத்தி ஆலைக்கு வாகன உபகரணங்களை வழங்கும் தொழிற்சாலைகளையும் சேர்த்தால், சுமார் 2,500 பேர் வேலை இழக்கும் நிலை உள்ளது என கூறப்படுகிறது. வேலை இழந்தவர்கள் புதிய வேலை தேடவும், இயல்பு வாழ்க்கை நடத்தவும் தெற்கு அவுஸ்திரேலிய அரசு வழங்கும் ஆதரவு தொடரும் ...

Read More »

அவுஸ்ரேலிய குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம்!

Australian-citizenship-yaalaruvi

அவுஸ்ரேலிய குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கென, முன்னெடுப்புகள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் நாடாளுமன்றில் அரசு முன்வைத்த சட்டமுன்வடிவு, எதிர்கட்சிகளின் தந்திரோபாயமான நகர்வு மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஒக்டோபர் 18 புதன்கிழமைக்கு முன்னர், தேவைப்படும் மாற்றங்களுடனான சட்டமுன்வடிவை தம்முன் சமர்ப்பிக்க வேண்டுமென, எதிர்கட்சிகளின் செனட்டர்களால் அரசுக்கு காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. எனினும் அரச தரப்பினரால் இதனை நிறைவேற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்றிரவு குறித்த சட்டமுன்வடிவு Senate Notice Board-இலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதேவேளை இச்சட்டமுன்வடிவு ...

Read More »

அமெரிக்காவுடனான உடன்பாடுகளை அவுஸ்ரேலியா நீக்கவேண்டும்!

AAtfa19

அமெரிக்காவுடனான உடன்பாடுகளை அவுஸ்ரேலியா நீக்கவேண்டும் என வடகொரிய கடிதம் அனுப்பியுள்ளது. உலக சமாதானத்தை நிலைநாட்டவும், போரைத் தவிர்ப்பதற்காகவும் அமெரிக்காவுடனான உடன்பாடுகளை நீக்கவேண்டுமென மேலும் குறித்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் உறுதி செய்துள்ளார்.இந்தோனேஸியாவிலுள்ள வடகொரிய தூதரகமூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அணுகுண்டு அச்சுறுத்தல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. முழு உலகின் இழப்பில் அமெரிக்கா நன்மையடையும் என்ற அமெரிக்க சிந்தனையையே டிரம்பின் ...

Read More »

கருணைக் கொலையை சட்டமாக்குவதற்கான வாக்கெடுப்பு!

Victoria-yaalaruvi

விக்டோரிய மாநிலத்தில் Euthanasia எனப்படும் கருணைக் கொலையை சட்டமாக்குவதற்கு நாடாளுமன்றம் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. சர்ச்சைக்குரிய கருணைக் கொலையை ஆதரிக்கும் சட்டம், 24 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த விவாதத்திற்குப் பின்னர் விக்டோரிய நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 47 பேர் ஆதரவு தெரிவித்தும் 37 பேர் எதிர்ப்புத் தெரிவித்து வாக்களித்துள்ளதாக தெரியவருகிறது. பெரும்பான்மையான Labor கட்சி உறுப்பினர்கள், இரு Greens கட்சியினர், இரண்டு சுயேச்சைகள் மற்றும் சில Coalition நாடாளுமன்ற ...

Read More »

UNHRC இல் அங்கத்துவம் பெற்ற முதல் பசுபிக் நாடு அவுஸ்ரேலியா!

UN-and-Australia-yaalaruvi

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் அவுஸ்திரேலியாவுக்கு அங்கத்துவம் கிடைத்துள்ளது. ஜெனீவாவைத் தளமாகக் கொண்ட 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைகள் சபைக்கு அவுஸ்ரேலியா, காங்கோ ஜனநாயக குடியரசு உட்பட 15 நாடுகள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. UNHRC இல் அங்கத்துவம் பெற்ற முதலாவது பசுபிக் நாடு அவுஸ்திரேலியா என்றும் அவுஸ்ரேலியாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் வெளிவிவகார அமைச்சர் Julie Bishop தெரிவித்துள்ளார்.

Read More »

அவுஸ்ரேலியாவில் மின்சக்தி மற்றும் எரிசக்தியில் பாரிய மாற்றம்!

National-Energy-Guarantee-yaalaruvi

‘National Energy Guarantee’ எனப்படும் மின்சக்தி மற்றும் எரிசக்தி தொடர்பிலான கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வமாக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இதேவேளை அவுஸ்ரேலியாவில் மின்சக்திப் பயன்பாடு தொடர்பில் பாரியளவிலான மாற்றத்தை இது கொண்டுவருமென பிரதமர் தெரிவித்துள்ளார். அரசின் இந்த திட்டமானது, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு முதல் அடுத்துவரும் 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு குடும்பமும் வருடத்துக்கு 115 டொலர்கள் வரை தமது மின் கட்டணத்தில் சேமிக்கமுடியமென அரசு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் தனியார் நிறுவனங்கள் ...

Read More »