Home / செய்திமுரசு (page 3)

செய்திமுரசு

அன்பாக வளர்த்த எசமானியை கடித்துக்குதறிக் கொலை செய்த நாய்!

59f1b9b536519-IBCTAMIL

அவுஸ்திரேலியாவின் கான்பரா நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, அவர் ஆசையோடு வளர்த்த நாய் ஒன்று கடித்துக் குதறியுள்ளது. இதனால் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கான்பரா நகரைச் சேர்ந்த Tania Klemke எனும் நாற்பது வயதுடைய பெண் சிம்பா எனும் பெயெருடைய நாய் ஒன்றினை மிகுந்த செல்லமாக வளர்த்துவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை ...

Read More »

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு சிங்கப்பூர் நாட்டு கடவுச்சீட்டு!

201710260921084538_Singapore-have-the-most-powerful-passports-in-the-world_SECVPF

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டு கடவுச்சீட்டு பெற்றுள்ளது. இந்த கடவுச்சீட்டுடி மூலம் விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு செல்ல முடியும். சர்வதேச ஆலோசனை நிறுவனமான ஆர்டான் கேபிடல் என்ற நிறுவனம், உலக நாடுகளின்கடவுச்சீட்டுக்கள் குறித்த தரவரிசையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. விசா இன்றி பயணம் செய்ய அனுமதிப்பதன் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த உலகின் மிகவும் சக்திவாய்ந்தகடவுச்சீட்டுக்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சிங்கப்பூர் ...

Read More »

மனுஸ் தீவின் அகதிகள் முகாமில் துன்புறுத்தல்!

manus-300x169

பப்புவா நியுகினிக்கு சொந்தமான மனுஸ் தீவின் அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அவுஸ்திரேலியாவின் கடற்கடந்த விசாரணை கொள்கையின் அடிப்படையில், ஈழ அகதிகள் உள்ளிட்ட 700க்கும் அதிகமானவர்கள் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பப்புவா நியுகினி நாட்டின் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவின் அடிப்படையில், இந்த மாதம் 31ம் திகதியுடன் குறித்த முகாம் மூடப்படவுள்ளது. இந்த நிலையில் முகாமை மூடுவதற்கான ...

Read More »

இணைய சேவை குறித்த ஆய்வில் அவுஸ்ரேலியாவுக்கு கடைசி இடம்!

09757feb-6865-4dea-ac29-efbcc07c0382_1508984914

Broadband- இணையப் பயன்பாடு தொடர்பில் மக்கள் திருப்தியடைகிறார்களா என உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், அவுஸ்ரேலியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.  Ipsos Global Advisor என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், சுமார் 28 நாடுகளைச் சேர்ந்த 21 ஆயிரம் பேரிடம், அவர்கள் பயன்படுத்தும் இணைய சேவை திருப்தியளிக்கிறதா எனக் கேட்கப்பட்டது. இதில் பங்கேற்ற அவுஸ்ரேலியர்களில் 61 வீதமானவர்கள் தமது இணையத்தொடர்பு திருப்தியளிப்பதாக இல்லை என தெரிவித்துள்ள நிலையில், இக்கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 28 ...

Read More »

பாடசாலைகளுக்கான அடிப்படை நிதி $80 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பு!

NSW-schools-yaalaruvi

NSW பாடசாலைகளுக்கான அடிப்படை நிதி $80 மில்லியன் டொலர்களால் அதிகரிக்கப்படுவதாக NSW மாநில முதல்வர் Gladys Berejiklian நேற்று (புதன்கிழமை) அறிவித்துள்ளார். அத்துடன் NSW அரசாங்கப் பள்ளிகளுக்கான தேவைகள் அடிப்படையிலான கல்வி நிதி 1 பில்லியன் டொலருக்கும் அதிகமாக 8 சதவிகிதம் அதிகரிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார். மாணவர் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகளுக்கு $ 1.09 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் கணித கல்வியறிவுத் திட்டங்கள் மற்றும் ஆசிரியப் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் பொது சுகாதாரத் துறையில் ஏமாற்று நடைமுறைகள்!

The-Independent-Broad-based-Anti-corruption-Commission

விக்டோரியா மாநிலத்தின் பொது சுகாதார துறையில் கடுமையான அபாயங்களை விக்டோரியாவின் ஊழல் கண்காணிப்பு அமைப்பு இனங்கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் குறிப்பிடத்தக்க மற்றும் உறுதியான கொடுமைப்படுத்துதல் மற்றும் தொல்லை (bullying and harassment) ஆகியனவும் சுகாதார துறையில் இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்டோரிய பொது சுகாதாரத் துறையில் ஏமாற்று நடைமுறைகள், மருந்து திருட்டு, மோசடி மறைப்புக்கள் மற்றும் மோசடியான பண வசூல், அதாவது fraudulent billing ஆகியவை நிலவுவதாக மாநிலத்தின் ஊழல் ...

Read More »

புதிய கடற்படை தளபதியாக ரணசிங்க!

Rear-Admiral-SS-Ranasinghe

சிறிலங்கா  கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.  ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது. இரண்டுமாதங்கள் மாத்திரமே சிறிலங்காவின் கடற்படைத் தளபதியாக செயற்பட்ட ட்ராவிஸ் சின்னையா இன்றுடன் தனது கடற்படைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெறுகின்றார். 55 வயதுடன் ஓய்வு பெரும் வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையாவின் பதவிக் காலத்தை  மைத்திரிபால சிறிசேன விரும்பினால் நீடித்திருக்க முடியும், எனினும் ஒரு மாத காலத்திற்கு மட்டுமே அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. ...

Read More »

முதலை பொறிக்குள் சென்று நீந்தி விளையாடிய விசித்திர மனிதர்கள்

201710241315362281_Idiots-Of-The-Century-Swim-In-Baited-Crocodile-Trap_SECVPF

அவுஸ்ரேலியாவில் முதலைக்கு வைக்கப்பட்டிருந்த பொறிக்குள் சென்று தைரியமாக 4 பேர் புகைப்படம் எடுத்த நிகழ்வு அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் டோக்லஸ் கடற்கரைக்கு அருகில் உள்ள ஏரியில் முதலைகள் அதிக அளவில் உள்ளன. அவை அங்கு செல்லும் மனிதர்களை வேட்டையாடி வருகின்றன. சமீபத்தில் 79 வயது மூதாட்டி ஒருவர் ஆற்றில் உள்ள முதலைக்கு இரையானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அந்த ஏரியில் முதலைக்காக பொறி வைக்கப்பட்டிருந்தது. அந்த பொறியில் ...

Read More »

ஜிம்பாப்வே அதிபர் முகாபே, உலக சுகாதார நிறுவன பதவியில் இருந்து நீக்கம்

201710231123264491_zimbabwe-president-Robert-Mugabe-removed-as-WHO-goodwill_SECVPF

பலத்த எதிர்ப்பு மற்றும் கண்டனத்தை தொடர்ந்து ராபர்ட் முகாபேயை நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நீக்குவதாக உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் அதானம் கேபிரியேசுஸ் அறிவித்துள்ளார். ஜிம்பாப்வே அதிபராக ராபர்ட் முகாபே (83) கடந்த 37 ஆண்டு காலமாக பதவி வகித்து வருகிறார். இவரை நல்லெண்ண தூதராக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் நியமித்தது. அதற்கான அறிவிப்பை உலக சுகாதார நிறுவனத்தின் புதிய டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் ...

Read More »

நெதர்லாந்தில் உலகின் முதல் 3.டி பிரிண்ட் பாலம்

201710231113537371_Worlds-first-3Dprinted-bridge-opens-in-the-Netherlands_SECVPF

நெதர்லாந்தில் 3.டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. அது ஸ்மார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 3.டி பிரிண்டர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நிறைய பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. எந்திர கைகள், மருத்துவ பயன்பாடுகளுக்கான உபகரணங்கள் போன்றவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது நெதர்லாந்தில் 3.டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. அது ஸ்மார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நீளம் மொத்தம் 8 ...

Read More »