செய்திமுரசு

மேடையில் ஏறி போப் ஆண்டவரிடம் தொப்பியை கேட்ட சிறுவன்

என்ன செய்தாலும் இந்தச் சிறுவனை சமாதானம் செய்ய முடியாது என புரிந்துக்கொண்ட போப் ஆண்டவர், தனது தொப்பியை சிறுவனிடம் கொடுத்தார். வாட்டிகன் நகரில் போப் ஆண்டவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின்போது, 10 வயது சிறுவன் ஒருவன் மேடையில் ஏறி போப் ஆண்டவரின் அருகில் சென்றான். இருக்கையில் அமர்ந்திருந்த போப் ஆண்டவர் சிறுவனிடம் அன்பாகப் பேசினார். அப்போது அவரது கைகளை பிடித்துக்கொண்டு அந்த சிறுவன் துள்ளிக் குதித்து விளையாடியதை கண்டு பார்வையாளர்கள் திகைத்துப்போயினர். பின்னர், மீண்டும் போப் ...

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அதிகாரத்திற்கு வருவதற்காக பயன்படுத்தியவர்களால் நீண்டநாள் அதிகாரத்தில் இருக்க முடியாது

உயிர்த்தஞாயிறு தாக்குதலால் ஏற்பட்ட பெரும் அழிவை அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பயன்படுத்தியவர்கள் நீண்ட காலம் ஆட்சியில் நீடிக்க மாட்டார்கள் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 30 மாதங்களாவதை குறிக்கும் விதத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அது சாபக்கேடாக மாறியுள்ளது,எவரும் மகிழ்ச்சியாக வாழமுடியாத நிலை காணப்படுகின்றது பலர் வாழ்வதற்காக உழைக்க முடியாத நிலை காணப்படுகின்றதுஎன அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற காலம் முதல் இலங்கை சபிக்கப்பட்டுள்ளது போல தோன்றுகின்றதுஎவரும் மகிழ்ச்சியாக வாழமுடியாத ...

Read More »

மட்டக்களப்பில் தமிழர்கள் வாழக்கூடாது என்பதற்காக திட்டமிட்ட குடியேற்றங்கள்

மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லை கிராமமான புனானை காரமுனை பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை செய்வது என்பது மட்டக்களப்பில் தமிழ் மக்கள் வாழக்கூடாது என்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபஷவின் தலைமையில் செயற்படும் பௌத்த ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும். எனவே இந்த சிங்கள குடியேற்ற நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈ.பிஇஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற தலைவருமான இரா. துரைரெட்ணம் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள ஈ.பிஇஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற காரியலத்தில் இன்று வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். வாகரை ...

Read More »

பழைய குருடி கதவை திறவடி

குறித்த செய்திகளே பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இன்றைய காலத்தில் இலங்கையானது பெரும் பொருளாதார சிக்கலை எதிர்நோக்கி வருகின்றது. இதனால் நாட்டில் தொழிலாளி முதல் முதலாளிகள் வரை அனைவரது வாழ்க்கையிலும் பொருளாதார சிக்கல் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. திடீரென ஏறிய விலைவாசிகள் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவுகளை புரட்டிப் போட்டுவிட்டது. இப் பெருந்தொற்றுக்காலத்தில் சிறு சிறு கூலி தொழில்களை செய்து அன்றாடம் தன் வாழ்க்கைச் செலவுகளை சமாளித்து வருகின்ற சாதாரண மக்களின் காதுகளில் பேரிடியாய் விழுந்தது அச்செய்தி. ஒரே இரவில் எரிவாயு, சீனி, ...

Read More »

ஊடகவியலாளர் நடராசாவின் உயிர் காக்க உதவுமாறு கோரிக்கை

  இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினரும் பத்திரிகையாளருமான ரி. நடராசா(நடா) இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ராவய பத்திரிகையின் ‘ தமிழ் செய்தித்தாளாகக் கருதப்படும் ஆதவன் செய்தித்தாளில் பத்திரிகையாளராகவும் நடராசா பணியாற்றினார். இவரது மைலோமா (Multiple Myeloma Treatment) சிகிச்சைக்காக 5.3 மில்லியன் ரூபா தேவைப்படுவதால் அவரது உயிர் காக்க பரோபகாரிகளிடமிருந்து உதவியை எதிர்பார்க்கின்றனர். கணக்கு விபரம் ரி.நடராசா கணக்கு எண்: 8012264946 கொமர்ஷல் வங்கி, பிரதான வீதி (Main Street) கொழும்புக் கிளை.

Read More »

யாழ்ப்பாணத்தின் மரபுரிமைச் சின்னமான சிறாப்பர் மடம் இன்று திறப்பு விழா

யாழ்ப்பாணத்தின் முக்கிய மரபுரிமைச் சின்னங்களில் ஒன் றான கீரிமலை நகுலேஸ்வர சுவாமிகள் தண்ணீர் பந்தல் (சிறாப்பர் மடம்) சீரமைக்கப் பட்டு இன்று திறந்து வைக்கப் படவுள்ளது. தொல்லியல் திணைக்களத்தால் சுப்பிரமணியர் கதிரவேலு (சிறாப்பர்) குடும்பத்தின் நேரடி வாரிசுகளும் இணைந்து இந்தத் தண்ணீர்ப்பந்தல் பழைமை மாறாமல் சீரமைப்புச் செய்யப்பட்டது. அதன் பழைமைவாய்ந்த பிள்ளையார் சிலை இன்று புதன்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு ஆகம முறைப்படி வைக்கப்பட்டது.

Read More »

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

உலக போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் ‘டாப்-8’ இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக ‘சூப்பர்-12’ சுற்றில் களம் இறங்குகின்றன. சூப்பர்-12 சுற்றில் விளையாட இருக்கும் அணிகள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கு பயிற்சி ஆட்டங்களில் ஆடுகின்றன. -7வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ...

Read More »

நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை

பயங்கரவாதிகளுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டபோதிலும், பயங்கரவாதிகள் கதவுகளை உடைத்து வீடுகளில் இருந்தவர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க முடியாமல் ராணுவம் போராடி வருகிறது.இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி அங்கு மேலும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் உருவாகியுள்ளன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவிப்பதோடு, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வடமேற்கு மாகாணம் ...

Read More »

தலைக்கு மேல் ‘தொங்கும்வாளுக்கு’ இலங்கை தலைவணங்காது பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்

*ஐ. நா. முறைமையை  மறுசீரமைப்பதற்கானதருணம். *தடை செய்யப்பட்ட குழுக்களுடன் பேச்சுவார்த்தை  இல்லை *சிஓபி 26 மாநாட்டிற்கு பிறகு ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திப்பார் *இலங்கையைவிசேடமாக  இலக்கு வைக்கும் பொறி முறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை *எங்களுக்கு எதிராக எவர்கள்   ஆதாரத்தை வழங்கு கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம் *ஐ ஸ்மின் சூக் கா ஒரு பிரசாரகர் *அரசசார்பற்ற தொண்டர்  நிறுவனங்கள்   அரசின் எதிரிகளாக பார்க்கப்படவில்லை *ஒரு நாட்டுடன் மட்டும் பிரத்யேக உறவென்று  இல்லை *ஜெனீவா காரணமாக வே அமெரிக்காவுடனான ...

Read More »

தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை – கனிமொழி

தமிழர்களுக்கு யாரும், யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என்று சொமெட்டோ சர்ச்சை தொடர்பாக கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இந்தியாவில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் பெருநிறுவனங்களாக சொமெட்டோ, ஸ்விக்கி ஆகியவை செயல்பட்டுவருகின்றன. இதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று (அக். 18) சென்னையைச் சேர்ந்த விகாஷ் என்பவர் சொமெட்டோ மூலம் உணவகத்தில் காம்போவாக உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு முழுமையாக உணவு டெலிவரி ஆகாததால் சொமெட்டோ கேர் எனப்படும் வாடிக்கையாளர் சேவை ...

Read More »