செய்திமுரசு

இந்திய மீனவர்கள் எனது வலைகளை அறுத்து அட்டூழியம் செய்தனர்!

யாழ்.வடமராட்சிக் கடற்பரப்பில் அத்துமீறி தொழில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள், பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. நேற்று அதிகாலை(20) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மீனவரான சுப்பர்மடம் மீனவர் சங்கத் தலைவர் தே.தேவதாசன் தெரிவிக்கையில், “பருத்தித்துறை சுப்பர்மடம் இறங்குதுறையிலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் தொழிலுக்காக இன்று(புதன்கிழமை) அதிகாலை படகில் சென்றேன். அங்கு இந்திய மீனவர்களின் 4 படகுகள் தொழிலில் ஈடுபட்டிருந்ததுடன், எனது 20 வலைகளை அவர்கள் அறுத்தெடுத்திருந்தனர். வலைகளைத் தருமாறு கேட்டேன். இந்திய மீனவர்கள் கற்களால் எனது ...

Read More »

பிரம்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்டும்

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபியொன்றை கனடாவின் பிரம்டனில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு;ள்ளது. பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டவேளை 75000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என பற்றிக் பிரவுண் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை இலங்கைஅரசாங்கத்தின் கலாச்சார இனப்படுகொலையின் ஒரு தொடர்ச்சி என தெரிவித்துள்ள அவர் எவரும் உயிரிழக்கவில்லை என காண்பிப்பதற்கும் வரலாற்றை மாற்றி எழுதுவதற்கும் இலங்கை அரசாங்கம் முயல்கி;ன்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கள் சொந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கு பிரம்டன் மாநகர சபை தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை ...

Read More »

வாக்குறுதி நிறைவேறுமா?

“யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் உண்மையாகவே, உணர்வு ரீதியாக தனது தவறை உணர்ந்து கொண்டு, அடிக்கல் நாட்டினாரா அல்லது, நிலைமையின் தீவிரத்தை குறைப்பதற்காக, இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதற்காக பாசாங்கு செய்தாரா?” போர் முடிந்து விட்டது எல்லா மக்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்ற சூழலில் நினைவுச் சின்னங்கள் தேவையில்லை, அமைதிச் சின்னங்கள் தான் தேவை என்ற கருத்து இருக்குமானால், வடக்கு, கிழக்கில் ஏன் போர் நினைவுச் சின்னங்களை அரசாங்கம் வைத்திருக்கிறது? முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழித்து விட்டு, அது தூபி அல்ல, ...

Read More »

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத நம்பிக்கைகளை மதிக்க வேண்டும்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரசினால் உயிரிழந்த அனைவரினதும் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் சர்வதேச சுகாதார வழிகாட்டுதல்களின் படி மதநம்பிக்கைகளைப் பின்பற்ற அனுமதிப்பதன் மூலம் உரிமையையும் கௌரவத்தையும் மதிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை 1955இல் கைச்சாத்திட்ட சர்வதேச மனித உரிமை பிரகடனம் அனைவரும் கற்பித்தல் பின்பற்றுதல் வழிபடுதல் போன்றவற்றில் தங்கள் மதநம்பிக்கையை பின்பற்றுவதற்கான உரிமையுள்ளது என தெரிவித்துள்ளது என ...

Read More »

பேரறிவாளன் விடுதலையில் மாநில உரிமையைத் தக்கவைக்குமா தமிழக அரசு?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக, பல காலமாகப் பேசப்பட்டுவருகிறது. அரசமைப்பு உறுப்பு 161-ன்படி தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி பேரறிவாளன் அளித்த மனுவைத் தமிழக அரசு பரிசீலனை செய்யலாம் என கடந்த 2018-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 6-ம் தேதி அன்று அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற மூவர் அமர்வு உத்தரவிட்டது. இது தொடர்பாக மாநில அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டது என இரண்டு ...

Read More »

கிழக்கில் கொவிட்-19 பரவலைத் தடுப்பதில் மக்கள் போதிய ஒத்துழைப்பில்லை!

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் செயற்பாட்டைத் தடுக்க, மக்கள் போதிய ஆதரவை வழங்கவில்லை என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மருத்துவர் அழகையா லதாகரன் மேலும் கூறுகையில், “காத்தான்குடியிலுள்ள 18 கிராம சேவகர் பிரிவுகளில் 10 பிரிவுகளை தொடர்ச்சியாகத் தனிமைப்படுத்த வேண்டும் என நாங்கள் பரிந்துரை விடுத்துள்ளோம். இதனடிப்படையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிற்பாடு இந்த 10 கிராமசேவகர் பிரிவுகளில் எவ்வாறு தொடர்ச்சியாக தனிமைப்படுத்தலை அமுல்படுத்திக் ...

Read More »

அமெரிக்க அரசின் உயர் பொறுப்பில் திருநங்கையை நியமித்த ஜோ பைடன்

அமெரிக்க அரசின் சுகாதாரத் துறை துணை செயலாளராக திருநங்கை டாக்டரை ஜோ பைடன் நியமித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு பொருத்தமான தலைவர்களையும், அதிகாரிகளையும் நியமனம் செய்து வருகிறார். அந்த வகையில், சுகாதாரத்துறை துணை செயாளராக டாக்டர் ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை ஜோ பைடன் நியமித்துள்ளார். இதன்மூலம் அமெரிக்க அரசுத்துறையின் உயர் பொறுப்பு வகிக்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று பெருமையை பெற்றுள்ளார் டாக்டர் லெவின். நிலையான தலைமை ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த வெற்றி என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் – ரிஷப் பண்ட்

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த வரலாற்று வெற்றி என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் என்று ரிஷப் பண்ட் பெருமையுடன் தெரிவித்துள்ளார். பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் 2-வது இன்னிங்சில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். ஆட்ட நாயகன் விருதை பெற்ற பிறகு ரிஷப் பண்ட் கூறியதாவது: என் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணமாக இந்த வெற்றி இருக்கும். இந்த டெஸ்ட் தொடர் எனக்குக் கனவுத் ...

Read More »

வெகுஜன எழுச்சிக்கு வித்திட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின்  நினைவுத்தூபி இரவோடிரவாக இடிக்கப்பட்டமையும் அதை நேரடியாக காணொளி மூலம் பார்த்ததால் ஏற்பட்ட எல்லை மீறிய துயரங்களும் வார்த்தைகளால் அளவிட முடியாத நிஜங்களாகும். மேற்படி சம்பவம் இடம்பெற்ற அந்த கணப்பொழுதில் இருந்தே அதனை கண்டித்து திக்கெட்டும் பரவிய போராட்ட உணர்வலைகள் கவனத்தைப் பெற்ற ஒரு சம்பவமாக மாறி இருந்தது. தொடர்ச்சியாக தனக்கு வழங்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவும் இறுதியில் உங்களால் முடியாவிட்டால் நாங்கள் அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிவரும் என்ற இறுதி எச்சரிக்கையின் பின்னரே ...

Read More »

கொவிட்-19: தடுப்பூசி விநியோகத்தில் உலக நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு!

உலக நாடுகளுக்கிடையே கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்துகளை சம அளவில் பகிர்ந்தளிப்பதில் ஏற்றத்தாழ்வு காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom) கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”உலகில் கொரோனா தடுப்பு மருந்துகளை பெறுவதில் தங்கள் நாட்டுக்கே முன்னுரிமை அளிக்கும் ‘தடுப்பூசி தேசியவாதம்’ முழு வீச்சில் அதிகரித்து வருவதாகவும், தடுப்பூசி என்பது உலகப் பொதுப் பொருளாகக் கருதப்பட வேண்டும் அதனை எந்த நாடும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உலகின் அனைத்துப் ...

Read More »