செய்திமுரசு

ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரோரா அகாங்ஷா, ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (வயது 71) பதவிக்காலம் வரும் டிசம்பர் 31ம் திகதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவர் மீண்டும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பதவியில் நீடிக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரோரா அகாங்ஷா (வயது 34) போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தற்போது ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் (யுஎன்டிஎப்) தணிக்கை ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் ...

Read More »

நீதிக்கு வந்த சோதனை! ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஆணைக்குழுவின் ஆணையாளராக….

இலங்கையில் இறுதிப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிப்பதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஆணையாளராக யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய உறுப்பினருமான திருமதி யோகேஸ்வரி பற்குணராசா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியாகியுள்ளது. திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Read More »

சாணக்கியன் உட்பட எழுவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், த. கலையரசன் உள்ளிட்ட எழுவரை எதிர்வரும் ஏப்ரல்மாதம் 30ஆம் திகதி கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3ஆம் திகதி பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான நீதிக்கானபேரணியில் கலந்துகொள்வதைத் தடுக்கக் கோரி, கல்முனை காவல் துறை நிலையத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 29 பேருக்கு எதிராக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது. குறித்த பேரணியில் நீதிமன்றத் தடை உத்தரவை மீறிக் கலந்துகொண்டனர் என்ற குற்றஞ்சாட்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...

Read More »

ஆஸ்திரேலிய இணைப்பு விசாக்களில் 12 ஆயிரம் அகதிகள்: அவர்களது எதிர்காலம் என்னவாகும்?

ஆஸ்திரேலிய கடந்த ஆண்டு நவம்பர் மாத கணக்குப்படி, ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்ற சுமார் 12,000 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு குறுகிய கால இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இணைப்பு விசா என்பது தற்காலிகமானது என்பதால், குறிப்பிட்ட அகதியின் பாதுகாப்பு விசா பரிசீலிக்கும்படி வரும் வரையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை இணைப்பு விசா புதுப்பிக்க வேண்டிய சூழல் நிலவுவது அகதிகளை பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. எத்தோப்பிய அகதியான Betelhem Tebubu ஆஸ்திரேலியாவில் இணைப்பு விசாவுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வருகிறார். ஆனால் ...

Read More »

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கதி! 8 ஆண்டுகளுக்கு பின் வெளிவரும் துயர சம்பவம்!

அவுஸ்திரேலியாவிற்கு வேலைக்காக சென்ற தமிழ் பெண், அங்கு வேலை செய்த இடத்தில் அடிமையாக நடத்தப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த 2007 முதல் 2015-ஆம் ஆண்டு வரை ஒரு பெண்ணை அடிமையாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அப்பெண் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்மணி இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்தவர், 60 வயது மதிக்கத்தக்கவராக இருக்கும் அவர் ...

Read More »

சீனாவின் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது

சீனாவின் சமீபத்திய நடவடிக்கையானது, உலகின் பார்வையில் சீனாவின் நற்பெயரை பாதிக்கும் என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரி கூறி உள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை சீனா கையாண்ட விதம், உய்கர் இனவாத சிறுபான்மையினரை நடத்தும் விதம் குறித்து தவறான செய்திகளை பிபிசி உலக செய்தி ஒளிபரப்பியதாக சீனா குற்றம்சாட்டிவந்தது. இந்நிலையில், ஒளிபரப்பு நெறிமுறைகளை மீறியதாக பிபிசி உலக செய்தி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளது. பிபிசி உலக செய்தி சேவைக்கு தடை விதித்துள்ள சீன அரசின் நடவடிக்கைக்கு, பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரி டோமினிக் ராப் கண்டனம் ...

Read More »

உரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம்

இந்தப் பந்தியை எழுதத் துவங்கும் பொழுது, ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்ற நாள். கிளிநொச்சி நகரத்தில் பெரும் குரலுடன் நிரை நிரையாக சனங்கள் செல்லுகின்றனர். கறுப்புக் கொடி ஏந்தியபடி, எமது உறவுகள் எங்கே, கோத்தபாய அரசே பதில் சொல்லு என்ற பெருங்கேள்வி துளைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கை அரச காவல்துறையினரால் மக்களின் எழுச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. மறுபுறத்தில் கிழக்கில் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களுமாக களத்தில நின்று குரல்களை எழுப்புகின்றனர். கிளிநொச்சியில் போராடும் மக்களின் குரல் உக்கிரமாய் இருக்கையில், கிழக்கில் மக்கள் சிங்கள அரசின் கல் ...

Read More »

உங்களுக்கு அரச மரம்! எங்களுக்கு குருந்த மரம்!

அரச மரம் ; புத்தருக்கு எவ்வளவு ; முக்கியமோ அதேபோன்றே ; குருந்த மரம் சிவனுக்கு முக்கியம். அதனால்தான் குருந்தூர் மலையில் சிவலிங்கம் தோன்றியுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற ; உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான மூன்று ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார், அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதியினால் தொல்பொருள் ஆராய்ச்சிக்கென செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறித்த செயலணி வடக்கில் குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சி ...

Read More »

ஞானசார தேரரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை

பொதுபலசேனாவின் ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைந்துள்ளது என மோர்னிங் தெரிவித்துள்ளது. 2014இல் அளுத்கம பேருவளையில் இடம்பெற்ற வன்முறைகளி;ற்கு காரணமாகயிருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரைந்துள்ளது என நம்பகதன்மை மிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது. மதமற்றும் இனரீதியிலான குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு காரணமான ...

Read More »

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சோபியா கெனின் அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவை சேர்ந்த சோபியா கெனின் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) 2-வது சுற்றில் சக நாட்டை சேர்ந்த கவ்ரிலோவாவை எதிர்கொண்டார். இதில் ஆஸ்லே பார்டி 6-1, 7-6 (9-7) என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் 6-வது வரிசையில் உள்ள கரோலினா பிரிஸ்கோவா (செக் ...

Read More »