செய்திமுரசு

கேள்வி எழுப்பிய சுவிற்சர்லாந்து தூதுவர் – விக்னேஸ்வரன் வழங்கிய பதில் என்ன?

அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளே தற்போது தமிழர்கள் முஸ்லீம்கள் மலையகதமிழர்கள் கத்தோலிக்கர்களை ஐக்கியப்படுத்தி வருகின்றது என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகள் தொடரும் வரை இந்த ஐக்கியப்படுதலும் தொடரும் என குறிப்பிட்டுள்ளார் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் பேர்கலருடனான சந்திப்பின்போது விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலருடன் முதற் செயலாளர், அரசியல், சிடோனியா கேபிரியல் அத்துடன் நிகழ்ச்சிகள் இணைப்பாளர் சுசந்தி கோபாலகிருஷ்ணன் மூவரும் என்னை வந்து சந்தித்தார்கள்.  திய சுவிஸ் ...

Read More »

திருகோணமலை துறைமுகம் யாருக்கு?

யாழ் தீவுகளில் சீன மின் திட்டம் தொடர்வதை இந்தியா பார்த்துக் கொண்டிருக்காது. இவ்விடயத்தில் நிச்சயம் இந்தியா இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கும். இலங்கை மீது இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு மேலும் அதிகரிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெஷா வித்தானகே தெரிவித்தார். திருகோணமலை துறைமுகத்தையும் இந்தியாவிற்கு அல்லது வேறொரு நாட்டுக்கு வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெஷா வித்தானகே தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய அகதி மரணம்

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சென்ற சோமாலியாவைச் சேர்ந்த அகதி ஒருவர் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உயிரிழந்துள்ளதாக எஸ்பிஎஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. சோமாலிய நாட்டுப் பின்னணிக் கொண்ட அப்துல் ரஹ்மான் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாகவும் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம் செயல்பட்ட மனுஸ் தீவில் வாழ்ந்துவந்த இவர் அங்கிருந்து நவுருத்தீவுக்கு அனுப்பப்பட்டு பின் அங்கிருந்து ஆஸ்திரேலியாவின பிரிஸ்பேனுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார். அதன் பின் பெர்த் பகுதிக்கு அனுப்பப்பட்டநிலையில் அங்குவைத்து அவர் மரணமடைந்ததாக கூறப்படுகின்றது. கடந்த ...

Read More »

றுவாண்டா இனப்படுகொலை புரிந்தோர் தப்புவதற்கு பிரான்ஸ் உதவியமை அம்பலம்

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான றுவாண்டாவில் 1994ஆம் ஆண்டில் நிகழ்ந்த துட்சி இனப் படுகொலைகளுக்குப் பொறுப்பான ஹுட்டு ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எதனையும் எடுக்கவேண்டாம் என்று பிரான்ஸின் அன்றைய பிரான்ஷுவா மித்ரோன் அரசுஅங்குள்ள தனது விசேட பிரதிநிதிக்கு ரகசியமாக உத்தரவிட்டது. இதனை நிரூபிக்கின்ற பழைய ரகசிய தந்திப் பிரதி ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்ற தகவலை பிரான்ஸின் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 1994 இல் றுவாண்டா படுகொலைகள் நிகழ்ந்த கையோடு பிரான்ஸ் அங்கு மேற்கொண்ட மனிதாபிமானப் படை நடவடிக்கைக்குப் பெயர் ‘ஒப்ரேஷன் றுக்கைய்ஸ்’. 1994 ஜூனில் இனப்படுகொலைகள் ...

Read More »

கொரோனாதடுப்பூசி – அரசியல்வாதிகளுக்கு ஏன் முன்னுரிமை? ரவிகுமுதேஸ்

கொரோனா வைரஸ் மருந்துகளை வழங்கும் நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளிற்கு முன்னுரிமை வழங்கக்கூடாது என அரசாங்க மருத்துவ ஆய்வுகூட தொழில்சார் சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள் ஆசிரியர்கள் உட்பட பல தரப்பினர் பொதுமக்களுடன் நேரடிதொடர்பில் உள்ளவர்கள் அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும் எனஅவர் குறிப்பிட்டுள்ளார். உலகசுகாதார ஸ்தாபனம் முன்னுரிமை பட்டியல் ஒன்றை வழங்கியுள்ளது அதற்கு ஏற்பவே தடுப்பூசியை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பட்டியலில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் முன்னுரிமை அளிக்கவேண்டியவர்கள் என அரசியல்வாதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது என ...

Read More »

இம்ரான்கான் உரை இரத்தானமைக்கு காரணம்?

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பாக்கிஸ்தான் பிரதமரை உரையாற்றுவதற்கு அனுமதிப்பது இந்தியாவுடனான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என சிறிலங்கா அரசாங்கத்தின் சிலர் கருதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்கிஸ்தான் பிரதமரின் சிறிலங்கா நாடாளுமன்ற உரை இரத்துச்செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது சிறிலங்கா அரசாங்கத்தின் ஒரு தரப்பினர் பாக்கிஸ்தான் பிரதமரை இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்ற அனுமதிப்பது இந்தியாவுடனான உறவுகளை பாதிக்கும் என கருதியுள்ளனர். சிறிலங்கா நாடாளுமன்ற உரையில் பாக்கிஸ்தான் பிரதமர் காஸ்மீர் விவகாரத்தை எழுப்பக்கூடும் என இந்தியா கருதலாம் என இலங்கை அரசாங்கத்தின் ...

Read More »

ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறிய 6 லட்சம் பேர்!

கடந்த 2020ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவை விட்டு சொந்த நாட்டுக்கு திரும்பிய வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சமாகப் பதிவாகியுள்ளது. இதில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 41 ஆயிரமாக உள்ளது. கடந்த டிசம்பர் 2020 காலக்கட்டத்தை கொரோனாவுக்கு முன்னரான டிசம்பர் 2019யுடன் ஒப்பிட்டு இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று சூழலும் அதன் பின்னரான ஆஸ்திரேலிய நடைமுறையும் ஏற்படுத்திய இவ்வீழ்ச்சி ஆஸ்திரேலிய வரலாற்றில் இதற்கு முன் காணப்படாத ஒரு நிலை எனக் கூறப்படுகின்றது. சுற்றுலா சென்றவர்கள், Working Holiday Makers விசாவில் சென்றவர்கள், வெளிநாட்டு மாணவர்கள், வேலை ...

Read More »

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரை வர்த்தகத்துக்கு பயன்படுத்தக்கூடாது- வெள்ளை மாளிகை எச்சரிக்கை

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் பெயரை அவரது உறவினர் ஒருவர் தனது வர்த்தக நிறுவனத்துக்கு பயன்படுத்தினார். இதற்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ். வெற்றி பெற்றார். இவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். கடந்த மாதம் 20-ந் தேதி துணை அதிபராக பதவியேற்று கொண்டார். அவர் தனது துணை அதிபருக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கமலா ஹாரிசின் பெயரை அவரது உறவினர் ஒருவர் தனது வர்த்தக நிறுவனத்துக்கு பயன்படுத்தினார். ...

Read More »

மேர்வின் சில்வா வட, கிழக்கிற்கு வரும்போது பாதுகாப்பின்றி வருவதைத் தவிர்கவேண்டும் எச்சரிக்கின்றார் – ரவிகரன்

மேர்வின் சில்வா வட, கிழக்கிற்கு வரும்போது பாதுகாப்பின்றி வருவதைத் தவிர்கவேண்டும் என  ரவிகரன் தெரிவித்துள்ளார். ”மேர்வின் சிலவா வட கிழக்குத் தமிழ் மக்களைப் பற்றியோ, இளைஞர்களைப்பற்றியோ பூரணமாக புரிந்துகொள்ளவில்லை என நினைக்கின்றேன். அதேவேளை அவர் வட, கிழக்கிற்கு பாதுகாப்பின்றி வருவதனைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.” என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். ”காவல்துறை சீருடையில் தான் இருந்திருந்தால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்களின் கால்களை  முறித்திருப்பேன்” என மேர்வின் சில்வா அண்மையில் தெரிவித்திருந்தார். மேர்வின்சில்வாவின் இக் கருத்திற்குப் பதிலளிக்கும் வகையில் ...

Read More »

தமிழர்களுக்கு எதிரான குற்றவாளிகளை தயக்கமின்றி பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும்- நவநீதம் பிள்ளை

மனித உரிமை பேரவை உறுதியான விதத்தில் செயற்பட்டு இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, தமிழர்களுக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல் குற்றவாளிகளை எந்த வித தயக்கமும் இன்றி பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Read More »