ஜெனிவாவில் உருவாகி வருகின்ற நெருக்கடிகளுக்கு உறுதியோடு முகம் கொடுப்பதற்கான ஆயத்தங்களில் அரசு ஈடுபட்டிருக்கின்றது. அதனை பகீரதப் பிரயத்தனம் என்று கூட குறிப்பிடலாம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ‘கோர் குறூப்’ என குறிப்பிடப்படுகின்ற முக்கிய உறுப்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக கடுமையானதொரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக வெளியாகிய அறிக்கையொன்றையடுத்து அரசு இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிகின்றது. அதற்கான அவசர கோரிக்கைக் கடிதம் ஒன்று இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பி ...
Read More »அவுஸ்ரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த தடையை விலக்கிக்கொள்வதாக முகநூல் நிறுவனம் அறிவிப்பு
ஊடக விதிகளை திருத்தி அமைக்க அவுஸ்ரேலிய அரசு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவுஸ்ரேலிய செய்தி பக்கங்கள் மீது விதித்த சர்ச்சைக்குரிய தடையை விலக்கிக்கொள்ளப்போவதாக முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது. முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு முகநூல் நிறுவனம் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது சட்டபூர்வ கட்டாயம் என்ற அவுஸ்ரேலிய அரசின் விதிகளுக்கு முகநூல் கடும் எதிர்ப்பு தெரிவித்து தடை நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்த நிலையில் இருதரப்பும் பேசி சுமுகமான முடிவு ...
Read More »சீன அதிபர் ஜின்பிங் இந்தியா பயணம்
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. பிரிக்ஸ் மாநாடு இந்த ஆண்டின் மத்தியில் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா நடத்துவதற்கு சீனா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனா வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறும்போது, ...
Read More »அவசர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்
தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது வீட்டிலிருந்த சிவாஜிலிங்கத்திற்கு திடிரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அம்பியுலன்ஸ் வண்டியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து வைத்திய சாலையின் அவசர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More »தலைவர் பிரபாகரனின் காணொளியை டிக் டொக்கில் பதிவேற்றியவர் கைது!
தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் காணொளியை டிக் டொக்கில் பதிவேற்றிய இளைஞன் ஒருவரை காவல் துறை கைது செய்துள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகள் பற்றிய பல்வேறு தகவல்களை ஊடகங்களில் வெளியிட்ட சந்தேக நபர் ஒருவரை காவலர் துறையால் கைது செய்துள்ளனர். வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் ...
Read More »கொரோனா வைரஸ் தாக்கினால் உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் தாக்கினால் உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும் என்று இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கினால் அவரது நுரையீரலும், இதயமும் மிக கடுமையாக பாதிக்கப்படும் என்று முதலில் ஆய்வு தகவல்கள் தெரிவித்தன. பிறகு சிறுநீரகத்தையும் இந்த வைரஸ் மிக வேகமாக தாக்கும் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் குணம் அடைந்தாலும் அவர்கள் எதிர்காலத்தில் எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று உலகம் முழுவதும் ...
Read More »ஜெனிவாவில் மீண்டும் ஏமாற்றம்?
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்துத் தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையின் நகல் வெளிவந்திருக்கின்றது. ஜெனிவாவில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்த அனைவருக்கும் கடும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக இந்த நகல் பிரேரணை அமைந்திருக்கின்றது. கடந்த வருடங்களில் ஏமாற்றப்பட்டதைப்போல இந்த வருடமும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படப் போகின்றார்கள் என்பதற்கான ஒரு முன்னறிவித்தலாக இந்தப் பிரேரணை அமைந்திருக்கின்றது. ஜெனிவா ...
Read More »தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது
தமிழ் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார் அந்தக் கட்சியின் செயலாளர் செ. கஜேந்திரன். தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேசின. ஆரம்பத்தில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இந்தப் பேரவையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்து பயணிக்குமா? என்று அந்தக் கட்சியின் செயலாளர் ...
Read More »சுமந்திரனின் பாதுகாப்பு தொடர்பில் கடிதம்…..
தன்னுடைய பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், சபையின் கவனத்துக்கும் கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றதை அடுத்து, அதுதொடர்பில், தேடியறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவென தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, காவல் துறை மா அதிபர் சி.டி விக்கிரமரத்னவுக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார் என அந்தத் தகவல்கள் தெரிவித்தன. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் பாதுகாப்பு ...
Read More »மாமனிதர் துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள் இடைநிறுத்தம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் மாமனிதர், பேராசியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள், இம்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துணைவேந்தரின் ஊடகப் பிரிவு இந்தத் தகவலை அதை தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்தமாக பீடமட்டத்திலும், பல்கலைக்கழக மட்டத்திலும் கல்வி, விளையாட்டு, கலை கலாசாரம் உட்பட சகலதுறைகளிலும் சிறந்த மாணவன் ஒருவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்படுவது வழமையாகும். இம்முறை ...
Read More »
Eelamurasu Australia Online News Portal