நுட்பமுரசு

உலகின் இலகுவான கைக் கடிகாரம்!

கிராபீன் என்ற விந்தைப் பொருளைக் கொண்டு, உலகின் மிக எடை குறைவான கைக் கடிகாரம், அண்மையில் ஜெனீவாவில் வெளியிடப்பட்டது. ரிச்சர்ட் மில்லெ என்ற பிரபல கைக் கடிகார நிறுவனமும், மெக்லாரன் எப்-1 என்ற கார் பந்தய அணியும் இணைந்து, இக் கடிகாரத்தை தயாரித்துள்ளன. கிராபீனை கண்டுபிடித்ததற்காக, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரு விஞ்ஞானிகள், 2010ல் பரிசை வென்றனர். “ஆர்.எம்.50-30 என்ற இந்த கைக் கடிகாரத்தை தயாரிக்க, கிராபீன் மற்றும் சில பொருட்களைக் கலந்து உருவாக்கிய, ‘கிராப் டி.பி.டி.’ என்ற புதிய பொருளால் மிக இலகுவான, ...

Read More »

வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் புத்தம் புதிய எமோஜிக்கள்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான வாட்ஸ்அப் பீட்டா செயலியில் புதிய எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் பீட்டா ஆண்ட்ராய்டு பதிப்புகளில் புதிய எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளன. யுனிகோட் 9.0 வழங்கும் புதிய எமோஜிக்கள் வாட்ஸ்அப் புதிய பதிப்புகளில் இடம் பெற்றுள்ளன. இதே எமோஜிக்கள் ஏற்கனவே ஐஓஎஸ் 10.2 மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளங்களில் வழங்கப்பட்டது. புதிய எமோஜிக்களை பெற நீங்கள் புத்தம் புதிய ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தினை பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான புதிய எமோஜிக்களில் ஆண் மற்றும் பெண் பல்வேறு புதிய பணிகளையும், வெவ்வேறு ...

Read More »

குட்டி கணினிக்கு கூகுளின் கரிசனம்

ராஸ்பெரி பை என்ற பிரிட்டனில் தயாரான கணினிக்கென, கூகுள், தன் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட சக்தி வாய்ந்த மென்பொருட்களை வெளியிட உள்ளது. ஒரு கடனட்டையின் அளவுக்கே இருக்கும் ராஸ்பெரி பை, அலங்காரமில்லாத, ஆனால் சக்தி மிக்க குட்டிக் கணினி. 2012ல் பிரிட்டனில் வெளிவந்த இந்த கணினி இப்போது உலகெங்கும் பரிசோதனைகள் செய்யவும், புதுமைகள் படைக்கவும் விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் பொழுதுபோக்காளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. விற்பனையில் ஒரு கோடி வாடிக்கையாளர்களை தாண்டிவிட்ட ராஸ்பெரி பை குட்டிக் கணினிக்கு, சக்தி வாய்ந்த மென்பொருட்களை அளிப்பதன் மூலம், ...

Read More »

பயணத்தில் பின்தொடரும் சூட்கேஸ் ரோபோ

அதிகளவு பொருள் கொள்வனவு செய்து சுமந்து வர மட்டும் அல்ல ,தொலை தூர பயணங்களின்போது பொருட்களை கொண்டு செல்வதற்கு ட்ரவலிங் பேக் அல்லது சூட்கேஸ் பயன்படுத்தப்படும். எனினும் இவற்றினை தூக்கிச் செல்வது மிகவும் சிரமமான காரியமாக இருக்கும். இப் பிரச்சினைக்கு தீர்வாக Piaggio Group நிறுவனம் புதிய ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளது. Gita எனும் இந்த ரோபோ தானாகவே நகர்ந்து செல்லக்கூடிய வகையிலும், ஒருவரைப் பின்தொடர்ந்து செல்லக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Read More »

வேவ் ஒன் இன் ஏர்

மோட்டோரோலா நிறுவனம் வேவ் ஒன் இன் ஏர் வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகப்படுத்துகிறது. இசைக் கேட்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹெட்போனை மழையில் கூட பயன்படுத்த முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் பயன்படுத்தலாம். விலை 149.99 யூரோ. மோட்டோரோலா நேரடியாக விற்பனை செய்கிறது. இது அப்பிள் ஏர்பாடைவிட மிக குறைந்த விலை என்பதால் இசை பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Read More »

வேலைக்கு ரோபோ

ஜப்பானில் அனைத்து இடங்களிலும் ரோபோ பயன்படுத்துவதற்கான ஆய்வுகளில் உள்ளனர். அந்த வகையில் பானசோனிக் நிறுவனம் தனது ஹாஸ்பி ரோபோவை ஜப்பானில் நாரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் சோதனைக்கு நிறுவியுள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப அருகிலுள்ள ஓட்டல் உள்ளிட்ட விவரங்களை ஹாஸ்பி தருகிறது. ஏற்கெனவே இந்த ரோபோ மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடக்க உள்ளதால் ரோபோ சேவைகளை அதிகப்படுத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

Read More »

வாட்ஸ்அப்பில் புது அம்சங்கள்: மிக விரைவில் வழங்கப்படுகிறது

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புதிய அப்டேட் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு விரைவில் புதிய அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வரும் புதிய அம்சங்கள் வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. பீட்டா பதிப்பில் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப்பின் புதிய அம்சங்கள் சோதனை செய்யப்படும் போதே வழங்கப்படும். வாட்ஸ்அப் புதிய அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் மூலம் உங்களது நண்பர் இருக்கும் இடத்தை டிராக் செய்ய முடியும். இத்துடன் அவர்கள் ஸ்டேட்டஸ் ...

Read More »

விண்வெளி பயணத்தின் போது மனிதர்களின் மரபணுவில் மாற்றம் – நாசா

மனிதர்கள் விண்வெளி பயனத்தின் போது தங்களது உடலின் மரபணுவில் மாற்றம் ஏற்படுவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மனிதர்கள் விண்வெளி ஆராய்ச்சிக்காக சென்று ஆராய்ச்சி முடிந்தவுடன் பூமிக்கு திரும்பும் போது அவர்களின் உடலில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்கிறதா என்ற கேள்விக்கு பல வருடங்களாக பதில் கிடைக்காமல் உள்ளது. ஒரு தரப்பு மாற்றம் இருக்கின்றது என்றும், மற்றொரு தரப்பு இல்லை என்றும் மாற்று கருத்துக்கள் உலாவி வருகின்றன. இந்த நிலையில் விண்வெளிப் பயணங்களால் மனிதர்களின் மரபணு அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ...

Read More »

எதையும் கற்றுக்கொள்ள

கற்றுக்கொள்வதற்கான சிறந்த இடமாக இணையம் இருப்பதை நீங்கள் அறியலாம். பல்வேறு தலைப்புகள் தொடர்பான யூடியூப் வீடியோக்கள் தொட‌ங்கி, இணையக் கற்றலுக்கான பிரத்யேகத் தளங்களான ‘கான் அகாடமி’, ‘கோர்சரா’ எனப் பலவழிகளில் இணையம் மூலம் கற்கலாம். இவை தவிர பிரத்யேகமான கற்றல் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் ‘ஹவ் காஸ்ட்’ இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்தத் தளம், வழிகாட்டி வீடியோக்களுக்கான இருப்பிடமாக இருக்கிறது. அதாவது ‘எவற்றை எப்படிச் செய்வது?’ என வழிகாட்டும் வீடியோக்கள் இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல் ஒளிப்படக் கலை, நடன வகுப்புகள், உணவு, ...

Read More »

ட்ரோன்களை அழிக்க நுண்ணலை கருவி!

ஆளில்லாமல் பறக்கும் வாகனங்களான, ‘ட்ரோன்’களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இதனால் தடை செய்யப்பட்ட பகுதிகளின் மேல் பறக்கவிடுவது போன்ற அத்து மீறல்களும் அதிகரித்துள்ளன. எனவே, ராணுவம், காவல்துறையினருக்கு ட்ரோன்களை தடுக்க அல்லது அழிக்க புதிய வகை ஆயுதத்தை அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கியிருக்கிறது ‘ரேதியான்’ நிறுவனம். மைக்ரோவேவ் எனப்படும் நுண்ணலைகளை பயன்படுத்தும், ‘பேசர்’ என்ற இச் சாதனம் டிஷ் ஆண்டனா போன்ற அமைப்பையும், நுண்ணலைகளை உற்பத்தி செய்யும் பெரிய பெட்டி போன்ற அமைப்பையும் கொண்டிருக்கிறது. ட்ரோன்கள் பறக்கும் இடத்தை துல்லியமாக கண்டறிய ரேடார் வசதியும் இதில் ...

Read More »