நுட்பமுரசு

போலி செய்திகளை கண்டறியும் பணிகளை துவங்கிய இன்ஸ்டாகிராம்!

இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது தளத்தில் போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள துவங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது தளத்தில் போலி செய்திகளை கண்டறியும் பணிகளை துவங்கி இருக்கிறது. போலி செய்திகளை முழுமையாக மறைத்து, அதன் மீது போலி செய்தி என குறிப்பிட துவங்கியுள்ளது. போலி செய்திகளை கண்டறியும் குழுக்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாக இன்ஸ்டாகிராம் ஏற்கனவே அறிவித்ததை தொடர்ந்து புதிய நடவடிக்கை அம்பலமாகி இருக்கிறது. புதிய கூட்டணியின் மூலம் இன்ஸ்டாகிராம் தளத்தில் உள்ள போலி செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் பணிகளை குழுக்கள் மேற்கொள்கின்றன. ...

Read More »

உலகின் பிரபல விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவை இதுதான்!

உலக தொழில்நுட்ப சந்தையில் பிரபலமாக விளங்கும் விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவை பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவைகளின் பயன்பாடு உலகம் முழுக்க பிரபலமாகி வருகிறது. இந்த சேவையை வழங்குவதில், ஆப்பிள், கூகுள் மற்றும் அமேசான் போன்றவை முன்னணி பிராண்டுகளாக அறியப்படுகின்றன. இந்நிறுவனங்களின் விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவைகள் பெரும்பாலான தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் ஆப்பிள் சிரி, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா என மூன்று சேவைகளில் பிரபலமானவை எது என்ற கேள்விக்கு தற்சமயம் விடை கிடைத்திருக்கிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கையில் ...

Read More »

2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது!

வரும் 2020ல் பெப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் செயலி இயங்காது என  அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது அதைவிடவும் பழைமையான அன்ரோய்டு மென்பொருளில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வட்ஸ்அப் கிடைக்காது. அதே போன்று விண்டோஸ் போன்களில் வரும் 31 ஆம் திகதிக்குப் பிறகு வட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது. இந்த வகை போன்களை வைத்துள்ளவர்களால் புதிய வட்ஸ்அப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே ...

Read More »

11 மணி நேர பேட்டரி திறன் கொண்ட ஜெப்ரானிக்ஸ் இயர்ஃபோன் அறிமுகம்!

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம், AAC கோடெக் உதவியுடன் 11 மணிநேர பேட்டரி திறன் கொண்ட ஜெப் ஸோல் என்ற புதிய வயர்லெஸ் இயர்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்ஃபோன்கள் நெக்பேண்ட் வடிவமைப்பில் காந்த சக்தியுடைய இயர்பீசஸ் கொண்ட இன்-இயர் வகை இயர்ஃபோன்களுடன் மெலிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பான சவுண்ட் ரீப்பிரொடக்ஷனிற்காக, மேம்படுத்தப்பட்ட சிப்செட் மற்றும் AAC கோடெக் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் பேட்டரி திறன் கிட்டத்தட்ட 11.5 மணிநேரம் வரை நீடிக்கும். ஆண்டிராய்டு/ iOS கருவிகளுடன் இயங்கும் வகையிலும், மேலும் குரல் ஆணைகளை ஏற்கும் வகையிலும் ...

Read More »

ட்விட்டரில் புதிய ஹைட் ரிப்ளைஸ் அம்சம் வழங்கப்படுகிறது!

ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் சோதனை செய்யப்பட்டு வந்த ஹைட் ரிப்ளைஸ் அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. ட்விட்டர் தளத்தில் கமென்ட்களை மறைக்கச் செய்யும் ஹைட் ரிப்ளைஸ் அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த அம்சம் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சோதனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் இந்த அம்சம் வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் ட்வீட்களில் உள்ள கிரே நிற ஐகானை க்ளிக் செய்து ஹைட் ரிப்ளைஸ் அம்சத்தை இயக்க முடியும். புதிய அம்சம் கொண்டு பயனர்கள் எதிர்மறை கருத்துக்களை மற்றவர்கள் பார்க்காதபடி மறைக்கச் செய்ய ...

Read More »

இருபுறங்களில் மடியும் புதிய ஸ்மார்ட்போன்!

டி.சி.எல். நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் விவரங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாதனங்கள் இன்றும் சோதனை கட்டத்திலேயே இருக்கின்றன. சந்தையில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், டி.சி.எல். தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கான்செப்ட்டை அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் இரண்டு இடங்களில் மடிக்கக்கூடிய வகையில் உருவாகி இருக்கிறது. ஸ்மார்ட்போன் முழுமையாக திறக்கப்பட்டால் பெரிய திரை காணப்படுகிறது. முதற்கட்டமாக ஸ்மார்ட்போனின் கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன்களை மடிக்க செய்யும் ...

Read More »

ஸ்கல்கேண்டியின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்!

ஸ்கல்கேண்டி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கல்கேண்டி நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கல்கேண்டி சேஷ் என அழைக்கப்படும் புதிய இயர்போன் இன்டிகோ, டீப் ரெட் மற்றும் ஃபியர்லெஸ் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. ஸ்கல்கேண்டி சேஷ் இயர்போன் பத்து மணி நேரத்திற்கான பேட்டரி வழங்குகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் மூன்று மணி நேர பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சார்ஜிங் கேஸ் கொண்டு ஏழு மணி நேரத்திற்கு சார்ஜிங் வழங்குகிறது. ...

Read More »

வாட்ஸ்அப் செயலியில் மெமோஜி ஸ்டிக்கர் அம்சம்!

வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்டில் மெமோஜி ஸ்டிக்கர் அம்சம் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் சமீபத்தில் பயோமெட்ரிக் அன்லாக் அம்சம் சேர்க்கப்பட்டது. இந்த அம்சம் ஏற்கனவே வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுவிட்டது. தற்சமயம் ஐ.ஒ.எஸ். பீட்டா பதிப்பினை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. புதிய அப்டேட்டில் மெமோஜி ஸ்டிக்கர்களுக்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 2.19.90 பதிப்பில் இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதவிர ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் தனது மெமோஜிக்களில் அதிகளவு கஸ்டமைசேஷன்களை அறிமுகம் செய்தது. இதில் ...

Read More »

2019 ஐபோன்களுடன் புதிய சாதனத்தை அறிமுகம் செய்யும் அப்பிள்

அப்பிள் நிறுவனம் 2019 ஐபோன் மாடல்களுடன் புதிய சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பிள் நிறுவனம் புதிதாக 10.2 இன்ச் அளவில் ஐபேட் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீப காலங்களில் தகவல்கள் வெளியாகின. புதிய ஐபேட் அந்நிறுவனத்தின் 9.7 இன்ச் ஐபேட் மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகும் என கூறப்படுகிறது. புதிய 10.2 இன்ச் ஐபேட் மாடல் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் 2019 ஐபோன்களுடன் புதிய ஐபேட் மாடலும் அரிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். ...

Read More »

வாட்ஸ்அப்பிலேயே அப்படி செய்யலாம் – வேறு செயலியை பயன்படுத்த வேண்டாம்!

வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதனால் பயனர்கள் அவ்வாறு செய்ய வேறு செயலியை பயன்படுத்த வேண்டாம். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். பதிப்புகளில் புதிய அம்சம் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் சாட் விண்டோவில் இருந்தபடி வாட்ஸ்அப்பில் வரும் மீடியாக்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மீடியாக்களை எடிட் செய்ய தனியே வேறொரு செயலியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. புதிய அம்சம் பயனர்களின் நேரத்தை மிச்சப்படுக்கிறது. இத்துடன் மீடியா எடிட் செய்ய ...

Read More »