நுட்பமுரசு

அவுஸ்ரேலியா – சுவர் சாயத்திலிருந்தே ஹைட்ரஜன் தயாரிக்கலாம்!

அவுஸ்ரேலியாவிலுள்ள ஆர்.எம்.ஐ.டி., பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, அதிலுள்ள ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும் சுவர் சாயத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த சாயத்தில், ‘டைட்டானியம் ஆக்சைடு’ துகள்கள், புதிதாக உருவாக்கப்பட்ட, ‘மாலிப்தீனம் சல்பைடு’ ஆகியவை உள்ளன. இவை, காற்றின் ஈரப்பதத்திலுள்ள ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் பிரித்தெடுக்க உதவுகின்றன. இந்த வேதி வினைக்குத் தேவையான சக்தி, சூரிய ஒளியிலிருந்தே கிடைத்துவிடுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். இந்த கண்டுபிடிப்பு, எந்த சுவரையும் ஹைட்ரஜன் தயாரிக்கும் ஆலையாக மாற்றிவிடும். இந்த தொழில்நுட்பம் எல்லாருக்கும் பயன்பட வேண்டும் என்பதால், ஆர்.எம்.ஐ.டி.,யின் விஞ்ஞானிகள் ...

Read More »

மின் சைக்கிள்!

ஒரு நபர் பயணிக்க மிக சிக்கனமான வாகனம் சைக்கிள் தான். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உடல் நலப் பிரியர்கள் இன்று சைக்கிள் பக்கம் திரும்புவதால், ஏற்கனவே உள்ள சைக்கிள்களுக்கு, மின் மோட்டார் பொருத்துவது உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறார் அசாப் பிதர்மேன். இவர், அமெரிக்காவிலுள்ள மாசாசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின், ‘சென்ஸ் ஏபிள் சிட்டி’ என்ற திட்டத்தின் ஆராய்ச்சியாளராக இருந்தபோது, ஒரு மோட்டாரை கண்டுபிடித்தார். கோபன்ஹேகன் நகரின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட இந்த சைக்கிள் இயந்திரத்திற்கு, ‘கோபன்ஹேகன் சக்கரம்’ என்றே பெயர். சைக்கிளின் பின்சக்கரத்தில் பொருத்துவதற்கு ஏற்ற இந்த ...

Read More »

கிளாஸ் மற்றும் மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்ட ஐபோன்!

அப்பிளின் 2017 ஐபோன் சார்ந்த கேட் ஃபைல்கள் இணையத்தில் கசிந்ததைத் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் மற்றும் வீடியோ ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அப்பிள் ஐபோன்களின் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் ஐபோன் இன்னும் சில மாதங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் இணையத்தில் கசிந்த கேட் ஃபைல்களில் ஆப்பிளின் புதிய ஐபோன் சார்ந்த தகவல்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய ஐபோன் சார்ந்த வீடியோ ரென்டர்கள் இணையத்தில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. அந்த வரிசையில் இணைந்துள்ள புதிய வீடியோவில் கேட் ஃபைல்களில் இடம்பெற்றிருந்த ...

Read More »

கிரிக்கெட்டுக்கு ‘இன்டெல்’ தொழில்நுட்பம்!

கிரிக்கெட்டில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியிருக்கிறது பிரபல சில்லு நிறுவனமான இன்டெல். சாம்பியன்ஸ் கோப்பை 2017ஐ ஒட்டி, ஐ.சி.சி.,யின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து பல புதிய தொழில்நுட்பங்களை இன்டெல் வழங்கியுள்ளது. முதலாவதாக, ‘பேட் சென்ஸ்.’ கிரிக்கெட் மட்டையின் கைப்பிடி அருகே ஒரு உணரியை பொருத்தி, இன்டெல்லின், ‘கியூரி’ என்ற கருவியின் மூலம் அளப்பதால், இனி மட்டையாளர் பந்தை அடிக்கும் வேகத்தை துல்லியமாக கணக்கிட முடியும். இந்த புள்ளி விபரங்கள் பயிற்சியாளர்களுக்கும், மட்டையாளர்களுக்கும் உதவும். அடுத்து, இன்டெல்லின் பால்கன், 8 என்ற ட்ரோன். இது மைதானத்தின் மேலே பறந்து, ஆடுகளத்தின் ...

Read More »

வளையும் ‘டிவி’ திரை!

திரைத் தொழில்நுட்பத்தில், பல புதுமைகளை விடாப்பிடியாக அறிமுகப்படுத்தி வரும் எல்.ஜி., அண்மையில் வளைந்து கொடுக்கும் தன்மையுள்ள, ‘டிவி’ திரையை அறிவித்துள்ளது. ஒ.எல்.இ.டி., தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்த, ‘டிவி’யை, சுவற்றில் ஓவியம் போல ஆணி அடித்து மாட்டிவிட்டு, தேவைப்படாதபோது சுருட்டி வைத்துக்கொள்ள முடியும். அது மட்டுமல்ல, இந்தத் திரைக்கு அப்பால் உள்ள வகைகளை, 40 சதவீத தெளிவுடன் பார்க்கவும் முடியும் என்கிறது எல்.ஜி., வர்த்தக வளாகங்களில் விளம்பரங்களுக்கும், பெரிய பதாகைகளைப் போல பொது இடங்களில் தொங்க விடவும் இந்த திரை பயன்படும் என்கிறது எல்.ஜி., இத்தனைக்கும் ...

Read More »

ஒரு உயிரினத்தின் செல்லை வேகமாக பிளக்கும், ‘கில்லட்டின்’ தொழில்நுட்பம்

ஒரு செல்லை இரண்டாக பிளக்கும் தொழில்நுட்பம் 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளதுதான். ஆனால், அது ஆராய்ச்சியாளர்களின் வேகத்துக்கு ஒத்துழைப்பதில்லை. எனவே, அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஒரு உயிரினத்தின் செல்லை வேகமாக பிளக்கும், ‘கில்லட்டின்’ தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இது இரண்டே நிமிடங்களில் 150 உயிருள்ள செல்களை சரிபாதியாக வெட்டித் தருகிறது. இரண்டாக வெட்டிய செல்களை ஆராய்வது, புற்றுநோய், நரம்பு செல் நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தும் ஆராய்ச்சியில் உதவும். புதிய பொருட்களை உருவாக்கும் பொறியாளர்களுக்கும் செல் ஆராய்ச்சி உதவுகிறது. ‘தினமும் வேலைக்கு பஸ், கார், சைக்கிள் ...

Read More »

மோட்டோ சி பிளஸ்!

மோட்டோ சி பிளஸ் சிறப்பம்சங்கள்: * 5.0 இன்ச் எச்டி 720×1280 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே * 1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6737 குவாட்கோர் பிராசஸர் * 2 ஜிபி ரேம் * 16 ஜிபி இன்டெர்னல் மெமரி * 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் * 2 எம்பி செல்ஃபி கேமரா * 4000 எம்ஏஎச் பேட்டரி * ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் * 4ஜி, வோல்ட்இ * மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

Read More »

தெருவிளக்குகளில் ‘சார்ஜ்’ செய்யும் மின்சார கார்கள்!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மின்சார கார்களுக்கு தேவையான மின்சாரத்தை ‘சார்ஜ்’ செய்யும் விதமாக தெருவிளக்குகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து, ஜெர்மனி, உள்ளிட்ட மேலை நாடுகளில் இ-கார்கள் எனப்படும் மின் சாரத்தினால் இயங்கும் கார்கள் உள்ளன. அவற்றில் உள்ள கேபிள்களில் மின்சாரம் ‘சார்ஜ்’ செய்து கார்கள் இயக்கப்படுகின்றன. தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தெரு விளக்குகளில் இ-கார்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை ‘சார்ஜ்’ செய்து கொள்கின்றன. அதற்கான வசதியுடன் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மின்சாரம் ‘சார்ஜ்’ செய்ய ‘எல்இடி’ வசதியுடன் ...

Read More »

வெளியீட்டிற்கு தயாராகும் நோக்கியா!

நோக்கியா 3310 மொபைல் போனினை தொடர்ந்து புதிய பீச்சர் போன் ஒன்றை வெளியிட நோக்கியா தயாராகி வருவது தெரியவந்துள்ளது. புதிய பீச்சர் போன் சார்ந்து வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். நோக்கியாவின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 3310 மொபைல் போன் விற்பனை துவங்கிவிட்ட நிலையில், புதிய நோக்கியா போன் விரைவில் வெளியாக இருப்பது தெரியவந்துள்ளது. சீனாவின் TENAA தளத்தில் TA-1017 மாடல் நம்பரில் காணப்பட்ட பீச்சர் போன் வழக்கமான வடிவமைப்பு மற்றும் அதிக உறுதி தன்மை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. போனின் பின்புறம் ஸ்பீக்கர் க்ரில் மற்றும் ...

Read More »

மோட்டோ எம் ஸ்மார்ட்போன்!

டூயல் சிம் ஸ்லாட் கொண்ட மோட்டோ எம் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 5.5 இன்ச் 1080×1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ P15 பிராசஸர், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி, 3050 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Read More »