நுட்பமுரசு

எம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்?

விளம்பரம், வருமானம்; இந்த இரண்டுதான் எல்லா டெக் நிறுவனங்களின் எல்லை மீறலுக்கும் காரணம். அதேதான் கூகுளின் விஷயத்திலும். மொபைலின் GPS-ஐ ஆஃப் செய்துவைத்திருக்கும் சமயங்களிலும், மொபைலுக்கு லொகேஷன் சார்ந்த நோட்டிஃபிகேஷன்கள் வருவதைக் கவனித்திருக்கிறீர்களா. ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருக்கும் அனைவரும், ஏதேனும் ஒரு சமயத்தில் இதைக் கண்டிருப்பர். நம்முடைய மொபைல் போனின் இருப்பிடத்தை, மொபைல் அப்ளிகேஷன்கள் அறிந்துகொள்வதற்கு உதவும் டூல்தான் GPS. கூகுள் மேப்ஸ், வெதர் ஆப்ஸ், டாக்ஸி ஆப்ஸ் போன்ற அப்ளிகேஷன்கள் இதன் உதவியுடன் நம்முடைய லொகேஷனை மேப் செய்கின்றன. எனவே, GPS ஆன் செய்து ...

Read More »

பிராசஸர் கொண்டு உருவாகும் சியோமி போகோ ஸ்மார்ட்போன்!

சியோமி நிறுவனத்தின் போகோ பிராண்டு புதிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கிறது. தற்சமயம் போகோ ட்விட்டில் போகோ ஸ்மார்ட்போனிற்காக குவால்காம் நிறுவனத்துடன் இணைந்திருப்பதை உறுதி செய்துள்ளது. அந்த வகையில் புதிய போகோபோன் எஃப்1 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் என தெரிகிறது. போகோபோன் எஃப்1 மாடலில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கலாம் என சமீபத்திய அன்பாக்சிங் வீடியோவில் தெரியவந்தது. மேலும் இதைத் தொடர்ந்து சியோமி இந்தியா மேளாலர் ஜெய் மணி பதிவிட்டிருக்கும் ட்விட் ஒன்றில் வேகம், செயல்திறன் உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருக்கிறது. இதன் ...

Read More »

தமிழிலும் இன்டர்நெட் டொமைன் அறிமுகம்!

இந்தியாவில் இனி தமிழிலும் இன்டர்நெட் டொமைன் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. உலகில் இணையம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையில் தமிழர்களும் கணிசமாக இருக்கிறார்கள். அதேபோல், தமிழ்நாட்டு மக்கள் இணையத்தில் அதிக அளவில் தமிழை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான ஆங்கில பக்கங்கள் எல்லாம் தற்போது தமிழில் வந்துள்ளது. இந்த நிலையில் இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டொமைன் என்றால் என்ன? இணையத்தில் பொதுவாக கூகுளில் எல்லா மொழியிலும் சர்ச் செய்ய முடியும். ஆனால் டொமைன் எனப்படும், இணையதள பக்கங்களின் லிங்குகள் மட்டும் ...

Read More »

பறக்கும் செல்ஃபி கமரா!

ஹோவர் நிறுவனத்தின் பறக்கும் கமரா சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கையடக்க கருவியின் மூலம் 12 எம்பி தரத்திலான புகைப்படங்களையும் 4கே தரத்திலான வீடியோக்களையும் எடுக்கமுடியும். நமது புகைப்படத்தை ஒருமுறை பதிவு செய்வதன் மூலம் வெளியிடங்களில் நம்மை சரியாக அடையாளம் கண்டுகொண்டு ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுக்கும் திறன் கொண்டது. தலைக்கு மேலே 20 மீட்டர்வரை பறக்கக்கூடியது. 242 கிராம் எடை கொண்ட இந்த கமராவுக்கு ஹோவர் கமரா பாஸ்போர்ட் ட்ரோன் என்று பெயரிடப்பட்டுள்ளது

Read More »

எழுத்து கடிகாரம்!

நேரத்தை எழுத்துவடிவில் காட்டும் வித்தியாசமான கடிகாரம். பின்புற வண்ணத்தை மாற்றிக் கொள்ளுதல், நேரத்தை சத்தமாக படித்துக் காட்டுதல், அலாரம் போன்ற வசதிகளைக் கொண்டது.  லண்டனை சேர்ந்த லெட்பீ நிறுவனம் தயாரித்துள்ளது.

Read More »

ஸ்கைப்பில் புதிய வசதி!

மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்கைப் சேவை இணைய தொலைபேசி வசதியில் பிரபலம். தற்போது இணையத் தொலைபேசி சேவையான ஸ்கைப்பில் குரல் பதிவு வசதி அறிமுகமாகியுள்ளது. உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்டு கிளவுட்டில் சேமிக்கப்படும். டெஸ்க்டாப், ஸ்மார்ட்போனில் இந்த வசதியைப் பெறலாம். மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்றாலும் ஸ்கைப் முதன்முறையாக நேரடியாக இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. குரல் பதிவு செய்யப்படுவது பயனாளிகளுக்கு உணர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

ஒலிக் கோப்புகளுக்கான தளம்!

ஒலிக் கோப்புகளைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ‘சவுண்ட்பைபிள்’ இணைய தளம் உதவுகிறது. எண்ணற்ற ஒலிகளைக் கொண்டுள்ள இந்தத் தளத்தில் விருப்பமான ஒலிக் கோப்புகளைத் தேடிப் பயன்படுத்திக்கொள்ளலாம். எல்லாமே இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் காப்புரிமை விடுபட்ட, பொது காப்புரிமையின் (கிரியேட்டிவ் காமன்ஸ்) கீழ்வரும் ஒலிகள். பவர் பாயிண்ட் காட்சி விளக்கத்தின் இடையே பயன்படுத்தவும் வீடியோ தொகுப்பில் பயன்படுத்தவும் பொருத்தமான ஒலிகள் தேவைப்பட்டால் இந்தத் தளத்தில் தேடிப் பார்க்கலாம். புதிதாகச் சேர்க்கப்படும் ஒலிகள், பிரபலமான ஒலிகள் போன்றவை வரிசையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. புதிய ஒலி தேவை எனில் விண்ணப்பித்துக் கேட்கும் வசதியும் ...

Read More »

ஜிமெயிலில் டிராப் பாக்ஸ்!

இணையக் கோப்புச் சேமிப்பு சேவையான டிராப் பாக்ஸ், கூகுளின் ஜிமெயில் சேவையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஜிமெயில் பயனாளிகள், கோப்புச் சேமிப்புக்காக டிராப் பாக்ஸ் சேவையைப் பயன்படுத்துபவர்களாக இருந்தால், இனிமேல் தங்கள் மெயிலில் இருந்தே டிராப் பாக்ஸ் கோப்புகளை அணுகலாம். கிளவுட் முறையில் கோப்புகளைச் சேமித்து, எந்த இடத்தில் இருந்தும் அணுக வழி வகுக்கும் சேவைகளில் முன்னணியில் விளங்குகிறது டிராப் பாக்ஸ். மைக்ரோசாப்ட், பேஸ்புக் உள்ளிட்ட பல சேவைகளுடன் தனது சேவையை ஒருங்கிணைப்பதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது டிராப் பாக்ஸ். இந்த வரிசையில், தற்போது கூகுள் ...

Read More »

கூகுள் நியூஸின் புதிய வடிவம்!

கூகுள் நிறுவனம் ‘கூகுள் நியூஸ்’ சேவையை வழங்கிவருவது தெரிந்த செய்திதான். அண்மையில் கூகுள் இந்தச் செயலியைப் புதுப்பித்துள்ளது. புதிய வடிவம், பயனுள்ள மாற்றங்களைக் கொண்டிருக்கிறது. செயலியைத் திறந்தும் வரிசையாகச் செய்திகள் தோன்றுகின்றன. விருப்பத்துக்கு ஏற்ப செய்திகளை அமைக்கலாம். புதிய பயனாளிகள் என்றால், இதற்கான தேர்வு வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். செய்தியின் மூல தளங்களும் அடையாளம் காட்டப்படுகின்றன. குறிப்பிட்ட தலைப்பில் பொருத்தமான செய்திகளைத் தேடி கண்டறிவதும் எளிதாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செய்திக்கான தலைப்பின் கீழே சிவப்பு மற்றும் நீல நிற ஐகான்கள் இருக்கும். அதை கிளிக் செய்தால் தொடர்புடைய ...

Read More »

உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் சீன நிறுவனம்!

உலகின் மடிக்கூடிய ஸ்மார்ட்போனினை யார் வெளியிடுவது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. அதன் படி சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹூவாய் நிறுவனத்திற்கு தேவையான வளையும் தன்மை கொண்ட OLED டிஸ்ப்ளேக்களை BOE தொழில்நுட்ப நிறுவனம் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஹூவாய் நிறுவனம் ...

Read More »