கவிமுரசு

தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!

தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! மொழியாய்! விழியாய்! வழியாய்! எங்கள் உயிராய்! உணர்வாய்! அறிவாய்! ஆற்றலாய்! மானமாய்! வீரமாய்! எங்கள் முகமாய்! முகவரியாய்! பெருமைமிகு அடையாளமாய்! பெரும்வீர வரலாறாய் இருப்பவன் இவன்! சுதந்திரக் காற்று! சுடரொளிக் கீற்று! புரட்சியின் பெரும் வெடிப்பு! தமிழ்த்தேசிய இனத்தின் உயிர் துடிப்பு! ஆண்டுப் பலவாய் அன்னைத் தமிழ் அருந்தவமிருந்து பெற்ற மகன்! புறநானூற்று வீரம் படைத்த மறவன்! மண்ணின் மானம் காக்க வீரர் படை நடத்தியவன் இவன்! அடிமை வாழ்விலும் உரிமைச்சாவு உயர்ந்ததென்று உணர்த்தியவன்! இவன் எங்கள் ...

Read More »

வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்!

நான் பறந்து கொண்டேயிருப்பேன் நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன் நான் பிறந்தேன் நற்பண்புகளுடன் நான் பிறந்தேன் கனவுடன் வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன் நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன் நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன். தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம். பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.   – மாணவர்கள் உயர்ந்த லட்சியத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்பதை வலியுறுத்த அமரர் அப்துல் கலாம் கூறிய கவிதை

Read More »

“பெத்தவளே உன் பெருமை ஒத்தவரி சொல்லலியே!” – உருக்கும் வைரமுத்து கவிதை

நம்மைப் பெற்று வளர்க்க தூக்கம், சாப்பாட்டைத் துறந்து, பிள்ளைகள் சந்தோஷமே தன் சந்தோஷம் என்று வாழும் தாயின் தியாகத்துக்கு எதுவுமே ஈடாகாது. நாற்பது வயதை எட்டிய ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் அம்மாவை சரியாகப் பார்த்துக்கொள்ளவில்லையோ என்கிற குற்ற உணர்வு மனதுக்குள் தொக்கி நிற்கும். அப்படியொரு சந்தர்ப்பத்தில் கவிப்பேரரசு வைரமுத்து தன் தாய்க்காக ‘முதல் முதலாய் அம்மாவுக்கு’ என்ற தலைப்பில் எழுதிய கவிதை இன்றளவும் பிரபலம். வைரமுத்துவின் ‘கொஞ்சம் தேநீர் நிறைய வானம்’ தொகுப்பில் இந்தக் கவிதை இடம்பெற்றுள்ளது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தாய்ப்பாசத்தின் அடி ...

Read More »