Home / இலக்கியமுரசு

இலக்கியமுரசு

மெல்பேர்ணிலிருந்து யாழ்ப்பாணம் வந்த வெடிகுண்டு பார்சல்!

20280297_1073844982750411_106055883526473888_o-300x269

புலம்பெயர் தேசத்தில் இருந்து ஒரு மாத இதழ் தபாலில் வந்திருந்தது. அதைப் பெற்றுக் கொள்வதற்காக யாழ்.பிரதம தபாலகத்துக்குச் சென்றிருந்தேன். என்னிடமிருந்த துண்டை வாங்கிப் பரிசீலித்துவிட்டு வெளியே காத்திருக்கச் சொன்னார்கள். பத்து நிமிடம். அழைத்தார்கள். அடையாள அட்டையை வாங்கி , நான் தான் அந்தப் பார்சலுக்கு உரியவன் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்கள். மேசையில் கிடந்த மற்றவர்களின் பார்சல்கள் , ஆட்டை விழுங்கிய பாம்பு போல வீங்கி வெடிக்கக் காத்திருக்க, எனக்கான பார்சல் ...

Read More »

வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்!

kalam titlejpg

நான் பறந்து கொண்டேயிருப்பேன் நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன் நான் பிறந்தேன் நற்பண்புகளுடன் நான் பிறந்தேன் கனவுடன் வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன் நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன் நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன். தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம். பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.   – மாணவர்கள் ...

Read More »

செடில் காவடி- ஏற்பு. எயிட்ஸ்

20170620_121844

முதுகில் வலி என்றார். என்னவென்று பார்த்போது இவரது முதுகில் இரண்டு நிரையாகக் காயங்கள் இருப்பதைக் கண்டேன். அதில் ஒன்று மிகவும் சீழ் பிடித்திருந்தது. இவை என்ன காயங்கள் என நினைக்கிறீர்கள்? தானாகத் தேடிக் கொண்ட காயங்கள் வலிந்து தேடிய காயங்கள் ஆயினும் அவரைக் கண்டிக்கவோ பேசவோ முடியவில்லை எமது பாரம்பரியமும் வழிபாட்டு முறையும் சார்ந்ததைச் செய்த அவரை  எவ்வாறு கண்டிப்பது காரணம் அது காவடி எடுத்ததால் வந்தது. காவடி எமது பாரம்பரிய ...

Read More »

“பெத்தவளே உன் பெருமை ஒத்தவரி சொல்லலியே!” – உருக்கும் வைரமுத்து கவிதை

vairamuthu_one_two_14365_16175

நம்மைப் பெற்று வளர்க்க தூக்கம், சாப்பாட்டைத் துறந்து, பிள்ளைகள் சந்தோஷமே தன் சந்தோஷம் என்று வாழும் தாயின் தியாகத்துக்கு எதுவுமே ஈடாகாது. நாற்பது வயதை எட்டிய ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் அம்மாவை சரியாகப் பார்த்துக்கொள்ளவில்லையோ என்கிற குற்ற உணர்வு மனதுக்குள் தொக்கி நிற்கும். அப்படியொரு சந்தர்ப்பத்தில் கவிப்பேரரசு வைரமுத்து தன் தாய்க்காக ‘முதல் முதலாய் அம்மாவுக்கு’ என்ற தலைப்பில் எழுதிய கவிதை இன்றளவும் பிரபலம். வைரமுத்துவின் ‘கொஞ்சம் தேநீர் நிறைய ...

Read More »

கலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்

201704280932257825_Bridal-long-heavy-gold-jada_SECVPF

பெண்கள் அணிகின்ற நகைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்றவாறு அழகிய நேரத்தியும், வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது. தங்கத்தில் செய்யப்படும் பெரும்பாலான நகைகள் பெண்களுக்கு உரியதாகவே உருவாக்கப்படுகின்றன. பெண்கள் அணிகின்ற நகைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்றவாறு அழகிய நேரத்தியும், வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது. பெண்களின் உடல் பாகங்களுக்கு ஈடாய் தலையலங்கார நகைகள் நிறைய உருவாக்கப்பட்டுள்ளன. பழங்காலம் தொட்டு பெண்களின் தலையலங்கார நகைகள் கூடுதல் வனப்புடன், ...

Read More »

யாழ்ப்பாணத்திற்கொரு ஆறு (River to Jaffna)

[UNSET]

“வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையும் விவசாயத்திற்குப் பயன்படுத்தாது வீணே கடலைச் சென்றடைய விடமாட்டேன்” என்பது, பொலநறுவையை இராசதானியாக கொண்டு ஆட்சி செய்த சிங்கள மன்னன் மகா பராக்கிரமபாகுவின் புகழ் மிக்க கூற்றுக்களில் ஒன்றாகும். பேச்சோடு மட்டும் நின்றுவிடாது, வானிலிருந்து விழும் நன்னீர், கடலைச் சென்றடைவதைத் தடுக்க, பராக்கிரம சமுத்திரம் என்ற மாபெரும் நன்னீரேரியை பராக்கிரம்பாகு கட்டுவித்தான். பராக்கிரம்பாகுவின் காலத்தில் இலங்கைத் தீவு தெற்காசியாவின் தானியக் களஞ்சியமாக திகழ்ந்தது என்பது ...

Read More »

எனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம் – வீழமாட்டோம்!

[UNSET]

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முன்னேறிக் கொண்டேயிருக்கிறது. 1980களின் இறுதியில் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியுடன் சோஷலிஸம் முடிவிற்கு வர, உலகமயமாக்கல் (Globalosation) எனும் முதலாளித்துவ (Captilasm) குதிரையில் ஏறி இந்தியா, சீனா, பிரேஸில், மலேசியா உட்பட பல வளர்ந்துவரும் நாடுகள் பொருளாதாரத்தில் வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. 1970களில் யுத்தத்தால் அழிவடைந்த வியட்நாமும் பங்களாதேஷும் கூட இந்த பயணத்தில் இணைந்து பயனடைய தொடங்கி விட்டன. 1977ல் திறக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தால் நன்மையடைய வேண்டிய ...

Read More »

குழந்தைப் பாடல்: பொங்கல் திருநாள்

pongal_3115957f

பொங்கல் திருவிழா வந்தது புதிய மகிழ்வைத் தந்தது சங்கத் தமிழர் பெருமையைத் தரணி புகழச் சொன்னது! உழவர் நாளாய் மலர்ந்தது உழைப்பின் அருமை புரிந்தது மண்ணில் விளைந்த நெல்மணி பானையில் பொங்குது கண்மணி! இல்லம் சிறக்கச் செய்தது இனிப்புப் பொங்கல் ஆனது உள்ளம் தேனாய் இனிக்கவே உறவுப் பொங்கல் ஆனது! சோலை மரங்கள் பூத்தன சொக்கப் பானைகள் எரித்தன பாலும் நெய்யும் சேர்ந்தது பாசப் பொங்கல் இனித்தது!

Read More »

தமிழர் குடியேறிய வரலாறு- அவுஸ்ரேலியாவில் தமிழர்!

australia-map-flag

ஆஸ்திரேலியா ஒரு கண்டம். 29,67,909 சதுர மைல் பரப்புள்ள நாடு. இந்நாட்டின் தலைநகரம் கேன்பரோ. இங்கு ஆங்கிலமே ஆட்சிமொழி. இந்நாடு ஏழு மாநிலமாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழர் குடியேறிய வரலாறு ஆங்கிலேயர் குடியேறுவதற்கு முன்பே, ஆஸ்திரேலியாவில் தமிழர் குடியேறினர் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. நியூசிலாந்து பழங்குடிகளான மவோரி மக்கள் மத்தியில் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு வெங்கல மணியை ஆங்கிலேயர் கண்டெடுத்தனர். அதை அங்குள்ள அரும்பொருட்காட்சிக் கூடத்தில் வைத்துள்ளனர். அம்மணியின் மீதுள்ள வாசகம், ...

Read More »

தமிழறிஞர்களின் பார்வையில் கார்த்திகை தீபம்!

karthigai-deepam

கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதுபற்றி தமிழறிஞர்கள் எழுதிய பாடல்கள், கட்டுரைகளிலிருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம். நாள்தோறும் உழைத்துக் களைத்த மக்கள் தங்கள் உடலுக்கு ஓய்வு கொடுத்து இன்புற்று மகிழ்ந்திருக்க, ஒன்று கூடி விழாக்களை நடத்துவர். அவற்றில் சமயச் சார்பற்ற, சமயச் சார்புள்ள என இருவகை விழாக்கள் உண்டு. சமய விழாக்களில் கார்த்திகை தீபமும் ஒன்று. கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். ...

Read More »