திரைமுரசு

ரேகாவிற்கு கோரிக்கை வைத்த ரசிகர்கள்

நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான ரேகாவிற்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேகா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து இருக்கின்றார். இவர் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பொழுதே கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரை 1996ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.  சமீபத்தில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ...

Read More »

மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா, தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தில் முடிந்தது. அவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் கடந்தாண்டு பீட்டர்பால் என்பவரை காதலித்து 3-வது திருமணம் செய்து கொண்டார். பீட்டர்பால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்தது சர்ச்சையை கிளப்பியது. இதனால் வனிதாவுடன் நடிகைகள் சிலர் கடுமையாக மோதவும் செய்தனர். பின்னர் பீட்டர் பால், குடிபோதைக்கு அடிமையாக இருப்பதாக ...

Read More »

பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாகும் லாஸ்லியா

இயக்குனர் கே.எஸ் ரவிகுமார் தெனாலி திரைப்படத்திற்கு பிறகு ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் என்ற மலையாள திரைப்படத்தை ரீமேக் செய்யவுள்ளார். ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் திரைப்படத்திற்கு தமிழில் கூகுள் குட்டப்பன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் முதியவர் வேடத்தில் கே.எஸ். ரவிகுமார் நடிக்கிறார். பிக்பொஸ் புகழ் தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். கே.எஸ் ரவிகுமாரின் உதவி இயக்குனரான சபரி மற்றும் சரவணன் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கவுள்ளனர்.

Read More »

ஹரி – அருண் விஜய் கூட்டணி: நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ள படத்துக்கு ப்ரியா பவானி சங்கர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சூர்யாவுடனான படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து அருண் விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்க ஒப்பந்தமானார் ஹரி. இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள். அருண் விஜய் நடிப்பில் வெளியான படங்களைவிட, இந்தப் படத்தின் பொருட்செலவு அதிகம் என்கிறது படக்குழு. ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கி, ஆகஸ்ட் ...

Read More »

ரசிகரின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்த சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தனது ரசிகரின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவருக்கு ரசிகர்கள் ஏராளம். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ ‘அகரம்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதேபோல் அவரது ரசிகர்களும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சூர்யா நற்பணி இயக்க வட சென்னை தெற்கு மாவட்ட தலைவர் ஹரி ராஜ் – பிரியா திருமணத்திற்கு நடிகர் ...

Read More »

பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை… ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் சீசன்-3 போட்டியில் கலந்து கொண்டவரும் நடிகையுமான ஜெயஸ்ரீ மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்தவர்  ஜெயஸ்ரீ  ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொண்டார். மேலும் கன்னட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மிக நீண்ட காலமாகவே இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் விளைவாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது. ...

Read More »

இந்த ஆண்டு திருமணமா? – சுருதிஹாசன் விளக்கம்

சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை சுருதிஹாசன், திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ஒரு ரவுண்டு வந்தார். இவர் நடித்த படங்கள் கடைசியாக 2017-ல் வெளியாகின. அதன் பின்னர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் சுருதிஹாசன். சமீபத்தில் இவர் நடித்த ‘புத்தம் புது காலை’ என்கிற ஆந்தாலஜி படம் ...

Read More »

முதன்முறையாக சூர்யாவுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்

பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நவரசா எனும் ஆந்தாலஜி படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்த சூர்யா, அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். சூர்யாவின் 40-வது படமான இதை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூர்யா 40 படத்திற்கு ...

Read More »

நடிப்பை விட்டு விலக காரணம் என்ன? அப்பாஸ் பதில்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் அப்பாஸ் சமீப காலமாக திரைப்படங்களில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் இளம் பெண்களின் மனதிலும் காதல் நாயகனாக வலம் வந்தவர் அப்பாஸ். ஆனால் பெரும்பாலும் இரண்டாம் கட்ட கதாநாயகனாகவே நடித்து வந்தார். ஹீரோவாக நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றதில்லை. பின்னர் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு திருட்டுப்பயலே படத்தில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. சமீபத்தில் அவர் பேட்டியளித்துள்ளார். அப்போது ...

Read More »

சமந்தாவுக்கு ஜோடியாகும் இளம் நடிகர்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, சகுந்தலம் படத்தில் படத்தில் இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார். சரித்திர, புராண படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. புராண கதையம்சம் கொண்ட படங்கள் பாக்ஸ்ஆபிஸிலும் வசூலை வாரிக் குவிக்கின்றன. பாகுபலி வெற்றிக்கு பிறகு இந்த வகையான படங்கள் பக்கம் தயாரிப்பாளர்கள் பார்வை திரும்பி இருக்கிறது. இந்நிலையில், சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. படத்துக்கு சகுந்தலம் என்று பெயரிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ...

Read More »