அவுஸ்திரேலியமுரசு

ஆஸி. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு; தந்தையின் துணிச்சலுக்காக மகனுக்கு பதக்கம் அணிவித்து கெளரவிப்பு!

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடிய தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தத்தையடுத்து, அவரது 18 மாதம் நிரம்பிய மகனுக்கு தந்தையின் துணிச்சலுக்காக பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ஜெஃப்ரி கிட்டன் என்ற 32 வயதான அவுஸ்திரேலியாவின் தீயணைப்பு படை வீரர் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி அன்று காட்டுத் தீயை அணைப்பதற்காக போராடியபோது மரம் விழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்தார். இந்த நிலையில் கிட்டனின் உயிர்த் தியாகத்தை கெளரவப்படுத்தும் வகையில், அவரது இறுதி நிகழ்வில் கிட்டனின் ஒன்றரை வயது மகன் ஹார்வே கிட்டனுக்கு உயரிய கெளரவ ...

Read More »

அவுஸ்திரேலியாவின் குவாண்டாஸ் 2020 ஆம் ஆண்டின் தெரிவு!

2020 ஆம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான விமானம் என்ற பெருமையை அவுஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்வேய்ஸ் லிமிட்டெட் நிறுவனம் பெற்றுள்ளது. AirlineRatings.com என்ற இணையத்தளம் உலகெங்கிலும் உள்ள 450 விமானங்களை வைத்து மேற்கொண்ட ஆய்விலேயே குவாண்டாசு ஏர்வேய்சு லிமிட்டெட் நிறுவனம் 2020 ஆம் ஆண்டின் பாதுகாப்பான விமானமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் குவாண்டாஸ் ஏர்வேய்ஸ் லிமிட்டெட் நிறுவனம் கடந்த 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தொடர்ச்சியாக நான்கு முறையும் 2019 ஆம் ஆண்டும் உலகின் பாதுகாப்பான விமானமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் AirlineRatings.com என்ற ...

Read More »

ஆஸ்திரியாவில் ஆடம்பர வாழ்க்கை- இந்திய தூதரை திரும்ப அழைத்தது மத்திய அரசு!

ஆஸ்திரியாவில் ரூ.15 லட்சத்தை மாத வீட்டு வாடகைக்கு செலவு செய்த இந்திய பெண் தூதரை மத்திய அரசு திரும்ப அழைத்தது. ஆஸ்திரியா நாட்டுக்கான இந்திய தூதராக ரேணு பால் பணியாற்றி வந்தார்.1988-ம் ஆண்டு பேட்ச் ஐ.எப்.எஸ். அதிகாரியான இவரது பணிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் ரேணுபால் மீது அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியது, நிதி முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம் விசாரணை நடத்தியது. இதில் ரேணுபால் ஆஸ்திரியாவில் ரூ.15 லட்சத்தை மாத வீட்டு வாடகைக்கு ...

Read More »

ஆஸ்திரேலிய காட்டுத் தீ: வனவிலங்குகளைக் காப்பாற்றிய ஊழியர்கள்!

ஆஸ்திரேலியாவில் கடுமையான காட்டுத் தீ நிலவுகிறது. இதற்கிடையில் வனவிலங்கு சரணாலாயம் ஒன்றிலிருந்து 200க்கும் அதிகமான வனவிலங்குகளை ஊழியர்கள் காப்பாற்றினர். ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்தக் காட்டுத் தீக்கு இதுவரை 700 வீடுகள் இரையாகியுள்ளன. சுமார் 1.2 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது. காட்டுத் தீ காரணமாக அங்குள்ள சுற்றுலாத் தளங்களும், வனவிலங்கு சரணலாயங்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின. இந்த ...

Read More »

ஆஸ்திரேலியாவில் புத்தாண்டையொட்டி பட்டாசு வெடிக்க தடை!

காட்டுத்தீ பரவுவதை தடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெர்ரா மற்றும் சில முக்கிய பிராந்தியங்களில் புத்தாண்டையொட்டி வாணவேடிக்கைகள் மற்றும் பட்டாசுகள் வெடிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணங்களான விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தாஸ்மானியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. ஏற்கனவே இந்த காட்டுத்தீயில் பல லட்சம் ஹெக்டேர் அளவிலான நிலப்பரப்பு எரிந்து நாசமாகி விட்டது. இந்த காட்டுத்தீக்கு இதுவரை 9 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் அனைத்து மாகாணங்களிலும் வெயிலின் தாக்கம் ...

Read More »

திசை திருப்பப்படும் பிரச்சினைகள்!

புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர், முளைத்துக் கொண்டிருக்கும் ஒவ்­வொரு பிரச்­சி­னை­யையும் மறைக்க இன்­னொரு புதிய பிரச்சினைகள் உரு­வாக்­கப்­பட்டு வருகின்­றன. சுருங்கச் சொல்லின், பெரிய கோடு – சிறிய கோடு தத்­துவம் தான். ஒரு விவ­கா­ரத்தின் மீது குவி­கின்ற மக்­களின் கவ­னத்தை திசை திருப்­பு­வ­தற்கு,  இன்­னொரு விவ­கா­ரத்தின் மீது அதிக கவ­னத்தைக் குவிக்க வேண்டும். அது மக்­களின் கோபத்­தி­லி­ருந்து அர­சாங்­கத்தைக் காப்­பாற்றும். புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்த­வுடன், சில அத்­தி­யா­வ­சியப் பொருட்களின் வரி­களைக் குறைத்தும், விலை­களைக் குறைத்தும், மக்­களின் அபிமானத்தை வெல்ல முயன்­றது. ஆனாலும், ...

Read More »

ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம்!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியவின் மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தான காட்டு தீயின் பிடியில் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரை சேர்ந்த  ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில்தஞ்சமடைந்துள்ளனர். மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தானகாட்டு தீயில் சிக்குண்டுள்ளதுடன் அந்த நகரத்திலிருந்து வெளியேறுவதற்கான பாதையும் துண்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரின் மக்களும் சுற்றுலாப்பயணிகளும்கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர்.                   பெருமளவு மக்கள் வணிக வளாகங்கள்மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மலகூட்டாவின் வணிகவளாகத்தின் உரிமையாளரான ரொபேர்ட் பிலிப்ஸ்  தன்னுடைய வணிக ...

Read More »

உடைந்த போன மனிதராக அகதியாகவே உயிரிழக்க நேரிட்டது!

மக்களை குணப்படுத்த வேண்டும் என எண்ணிய மருத்துவர் சயத் மிர்வாஸ் ரோஹனியால் உடைந்த போன மனிதராக அகதியாகவே உயிரிழக்க நேரிட்டது. தாலிபான் பிடியிலிருந்த ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலிருந்து தப்பி வந்த இந்த இளம் ஆப்கானிய மருத்துவர், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முறையில் சிக்கி தனது 32 வயதில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் தற்கொலை செய்து கொண்டார். ரோஹனி மரணம் தொடர்பான விசாரணை மிகவும் ஆரம்ப கட்டங்களிலேயே உள்ள நிலையில், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார் இக்குடும்ப வழக்கறிஞரான ...

Read More »

ஆஸ்திரேலியாவின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான பீட்டர் சிடில் 35 வயதில் ஓய்வு

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பீட்டர் சிடில் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பீட்டில் சிடில். 35 வயதான இவர் நியூசிலாந்துக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தின்போது தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 2008-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆன பீட்டர் சிடில் 67 டெஸ்டில் விளையாடி 221 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். கடைசியாக ஆஷஸ் தொடரில் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தாகத்தை தணிக்க வீதியில் இறங்கிய கோலா கரடி!

அவுஸ்திரேலியாவில் தாகத்தை தணிக்க கோலா கரடி ஒன்று வீதியில் இறங்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் மலைகளில் ஏற்பட்ட காட்டுத் தீ, சுமார் 25,000 ஹெக்டேர் மரங்களை சாம்பலாக்கியுள்ளது. இதன் காரணமாக, அடிலெய்ட் பகுதிகளில் தற்போது கடுமையான வெப்பச் சுழல் நிலவுகிறது. கடும் வெப்பம் காரணமாக, காட்டில் உள்ள கோலா கரடிகள் தண்ணீருக்காக அலையும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படி வரும் கோலா கரடியைப் பலரும் அரவணைத்து தண்ணீர் வழங்கி வருகிறார்கள். ஜேன் ப்ரிஸ்டர் என்னும் விலங்கு நல ஆர்வலர், காட்டுத்தீ சம்பவத்தின்போது, தன் ...

Read More »